- Wednesday
- November 6th, 2024
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடியினை பயிரிட்ட ஒருவரை யாழ்.பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மணியம் தோட்டம் பகுதியில் ஒருவர் கஞ்சா வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த நபரின் வீட்டின் பின்புறத்தில் றப்பர் சாடியினுள் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் மூன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை கைப்பற்றப்பட்டிருந்த கஞ்சா செடிகளின் பெறுமதியானது ஐயாயிரம்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை சுட்டு படுகொலைச் செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸார் ஐவரின் விளக்கமறியலும் யாழ் நீதவான் நீதிமன்றத்தினால் டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி வரையிலும் இன்று வெள்ளிக்கிழமை நீடிக்கப்பட்டது.
‘ஆவா’ குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் நிரபராதிகளாவே உள்ள நிலையில், உண்மைகள் நிரூபிக்கப்படும்வரை அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ‘ஆவா’ குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவிலலை எனவும் குறித்த...
மாதகல் கடற்கரை பகுதிக்கு அருகாமையில், ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வூர் மக்களால் பொலிஸாருக்கு கொடுக்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து அப்பகுதிக்கு மாறு வேடத்தில் சென்ற பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர். இதன்போது அந்தப் பெண்ணிடமிருந்து 09 கிலோவும் 305 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் மாதகல்...
திருட்டு குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் திட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரும், 19 வயதுடைய இளைஞர் ஒருவருமே நேற்று புதன்கிழமை இரவு இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் அவர்களது வீட்டில் வைத்தே கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்படும் போது, அவர்களது உடமையில் இருந்து...
உண்மையில் இந்த ஆவா குழு என்பது யார்? இதில் எத்தனை பேர் உள்ளனர்? இவர்கள் எங்கு ஒன்று கூடுவார்கள்? இவர்களின் தலைவன் யார்? இவர்களின் பின்புலம் என்ன? இவ்வாறான பல கேள்விகள் எமது மனதில் உள்ளன. இவை அனைத்திற்கும் இந்த ஆவா குழு என்று பெயர் யாரால் சூட்டப்பட்டது? எதனால் சூட்டப்பட்டது என்று பார்த்தாலே இவை...
“ஆவா“ குழுவின் உறுப்பினர்கள் 11 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்றயதினம் 12 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆயர் செய்யப்பட்டனர். இவர்களுக்கான விளக்கமறியலை எதிர்வரும் 28ம்திகதி வரை நீடிப்பதாக ஊர்காவற்துறை நீதவான் ஏ.எல்.எம். றியால் உத்தரவிட்டார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக்கணக்கு விபரங்களை பெற்றுக்கொள்வதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். இந்த சந்தேக...
ஆவா குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் மற்றுமொருவர் முல்லைத்தீவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் முன்னதாக யாழ்ப்பாணம் - சுண்ணாகம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய வேளை, ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணியதாக தகவல் வௌியாகியுள்ளது. இதன்படி தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் இவரைக் கைதுசெய்துள்ளனர். மேலும் சந்தேகநபர் முல்லைத்தீவு - விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 20...
ஆவா குழு உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நான்குபேரை எதிர்வரும் 16 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகல உத்தரவிட்டுள்ளார். ரவிந்திரன் நிதர்ஷன், லோகநாதன் தர்ஷிகன், மகாதேவன் கந்தகன் மற்றும் ரவிந்திரன் நிலூஷன் ஆகியோரே விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஆவா குழு தொடர்பில் 11 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த செவ்வாய்க்கிழமை மூவரும்,...
அரச வங்கியொன்றில் ஏ.ரி.எம். இயத்திரத்தில் ரகசிய கமராவை பொறுத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை பெற்று பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் 4 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வவுனியா பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ரகசிய கமரா மூலம் வாடிக்கையாளர்களின் ரகசிய இலக்கங்களை பெற்றுக் கொண்டு அதற்கமைய போலியான ஏ.ரி.எம் அட்டைகளை...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவத்தில் காயமடைந்த சிங்கள மாணவன் தொடர்பான மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படாத நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக...
ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த துரைசிங்கம் கபில்தாஸ் (வயது 25) என்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ். பொலிஸ் நிலையத்தின் 4 பேர் கொண்ட பொலிஸ் குழுவினரால் கொக்குவில் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவர்...
புங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியா பாலியல் வன்புனர்வின் பின் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் விசாரனை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் பரீசிலனையில் உள்ள நிலையில், இவ்வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு யாழ். மேல் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது. அதேவேளை முதலில் கைது செய்யப்பட்ட 09 சந்தேகநபர்களதும் விளக்கமறியல் காலத்தை மேலும் மூன்று...
பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரி.ஐ.டி என அழைக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டத்தரிப்பு – செட்டிகுறிச்சி பிரதேசத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் நிதுஷன் என்ற இளைஞன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதை அவர்களது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அவரை கைது செய்தமைக்கான ஆவணத்தை கையளித்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
'ஆவா' என்ற பெயரில் குழுவொன்றை அமைத்து, யாழ்ப்பாணத்தில் வன்முறையைத் துண்டிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்காக தற்போது மொத்தம் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இவரை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸார் காங்கேசன்துறையில் வைத்து நேற்று பிற்பகல் வேளையில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் முக்கியஸ்தரை கொழும்பிற்கு அழைத்துச் சென்றுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அண்மையில் ஆவா குழுவுடன்...
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு அவுஸ்திரேலியாவுக்கான விசா வழங்குவதனை இலங்கையின் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிராகரித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டின் பிரதான சந்தேகநபரை விடுவிக்குமாறு பொலிஸாருக்கு ஆலாசனை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது....
யாழ்ப்பாணத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி வரும் ஆவா குழுவின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞர்கள், இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான்...
சிறுப்பிட்டி பகுதியில் இரு தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 14 இராணுவத்தினருக்கும் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை நேற்று யாழ் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவருவதாவது, மட்டுவில் வடக்கை சேர்ந்த செல்வரத்தினம்...
Loading posts...
All posts loaded
No more posts