- Wednesday
- November 6th, 2024
“யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் காணாமற்போவதற்கு காரணமாகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இராணுவத்தினரின் பிணை மனு தொடர்பான விசாரணை, எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி நடைபெறும்” என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்றுத் திங்கட்கிழமை (28) உத்தரவிட்டார். யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள்,...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கணவருக்கு, பிஸ்கட் பையினுள் வைத்து கஞ்சா கடத்த முற்பட்ட பெண்ணைக் குழந்தையுடன் கையும் மெய்யுமாகப் பிடித்த சிறைச்சாலை அதிகாரிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புபட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தனது கணவரைப் பார்ப்பதற்கு மேற்படி பெண், நேற்றுத் திங்கட்கிழமை (28) மதியம் உணவு தயார் செய்துகொண்டு சென்றுள்ளார். இதன்போது, 38...
முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இன்று வாக்குமூலம் அளிக்கச் சென்ற இவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கருணா அம்மான், பின்னர் அந்த இயக்கத்தில்...
பருத்தித்துறை பகுதியில் 87 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டமை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து, கஞ்சாவை கடத்துவந்ததாக சந்தேகிக்கப்படும் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாசிங்க தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து...
கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட பிணையை இரத்துச் செய்து வழக்கு நிறைவடையும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்றயதினம் (28) உத்தரவிட்டுள்ளார். யாழ் நகரப் பகுதியில் வசித்து வந்த தேவராஜா என்ற குடும்பஸ்தர் தனது வீட்டில் அப் பகுதியை சேர்ந்த ரவி என்பவரை குடியேற்றியிருந்தார். இந்தநிலையில் கடந்த...
மணல் கடத்தல்காரர்களுடன் தொடர்பினை பேணி, அவர்களின் நடவடிக்கைக்கு ஆதாரவாக செயற்பட்டு வந்த, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நிர்வாகப்பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடந்த நான்கு வருடங்களாக நிர்வாக பிரிவில் கடமையாற்றி...
புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 09ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சறோஜினி இளங்கோவன் உத்தரவிட்டார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்று திங்கட்கிழமை (28) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 12 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில்...
வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின் தங்கச்சங்கிலியை கொள்ளையடிக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பிரதேச இளைஞர்களால் மடக்கிப்பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பாடசாலை மாணவனை, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்வதற்கு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் சனிக்கிழமை (26) அனுமதி வழங்கினார். மேலும் குறித்த சம்பவம் தொடர்புடைய வழக்கை, எதிர்வரும் 02ஆமி திகதிக்கு...
180 மில்லிகிராம் குடு வைத்திருந்த குற்றச்சாட்டில் குடு பேபி என அழைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் வைத்தியசாலை வீதியில் வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் சனிக்கிழமை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். யாழ். ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் கொள்ளையிடப்பட்ட துவிச்சக்கரவண்டியில் குடு விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார். இதன்போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், அவர்...
யாழ்.மாவட்டத்தில் பகல் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 4 பேரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 21 பவுண் நகைகள், ஒரு மடிகணனி, டிஜிட்டல் கமரா ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ். நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகயன் தலைமையில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் மீது, 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டபோது, செனவிரத்ன என்ற சந்தேகநபர், கறுப்புநிறப் பையினுள் ரி-56 ரகத் துப்பாக்கியை வைத்து எவ்வாறு சுட்டார் என்பதை, முதலாவது சாட்சியாளரான மனம்பேரிகே பிருதிவிராஜ் சம்பத், கொழும்பு மேல்நீதிமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை செய்துகாட்டினார்....
வவுனியாவினில் போலி விஞ்ஞானியாக அடையாளப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய நபரான என்.என்.ஜக்சன் என்பவர் மீண்டும் யாழில் வைத்து கைதாகியுள்ளார். முன்னதாக நிதி மோசடி தொடர்பில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவர் தற்போது யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்டதாகக் கைதாகியுள்ளார். விசாரணை தவணையொன்றிற்காக வந்திருந்த அவர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு வெளியில் வைத்து...
கொடிகாமம் பகுதியில் கேரள கஞ்சா கொண்டு செல்ல முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொஸிசார் தெரிவிக்கின்றனர் குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 8 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேகநபர்கள் இருவரும் மோட்டார் வாகனத்தில் பயணித்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும், பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒரு இலட்சம்...
யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் செவ்வாய்க்கிழமை (22) மாலை ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர் சண்டிலிப்பாய் பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய நபர் என பொலிஸார் கூறினார். சந்தேகநபரிடம் இருந்து 53 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்கும் மீட்கப்பட்டது. கிடைக்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்...
இந்தியா சென்ற நிலையில், திருப்பி அழைக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரன் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி விவேதனி சபேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும், கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார் என்று...
அனுமதி பத்திரமின்றி பஸ் செலுத்தினால் 2 இலட்சம் ரூபாய் தண்டத்தை அறவிடுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
வடக்கில் கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட நால்வரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வவுனியா பொலிஸார் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். அண்மையில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடம் கைக்குண்டு 2, கத்திகள் 4, 28 பவுண் தங்க நகைகள், முகத்தை மூடி மறைத்துக் கட்டும்...
'வட மாகாணத்தில் வாள்வெட்டுக்களில் ஈடுபடுகின்றவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள், அவர்கள் கைது செய்யப்பட்ட பிரதேசத்துக்கு அருகில் இருக்கும் நீதிமன்றங்களில் முற்படுத்தப்படாது, வெளியிடங்களில் இருக்கும் நீதிமன்றங்களில் முற்படுத்துகின்ற செயற்பாடானது அரசியலமைப்பு சட்டத்தினையும் சர்வதேச மனிதவுரிமை சட்டத்துக்கும் அரசியல் சிவில் சட்டத்தினையும் மீறிய செயற்பாடு' என, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்றுச் செவ்வாய்க்கிழமை...
வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, போதையில் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், பாதுகாப்பற்ற வகையில் ரயில் பாதைகளில் பயணித்தல், காப்புறுதி...
நவக்கிரி, ஈவினை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை வீதியால் சென்ற பெண்னின் 2 பவுண் தங்கச்சங்கிலி அறுத்தெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக அச்சுவேலிபொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் நெல்லியடி கரவெட்டி பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினார். வீதியால் சென்ற குறித்த பெண்னை இடைநடுவில் மறுத்து, கைப்பையினை...
Loading posts...
All posts loaded
No more posts