- Wednesday
- January 22nd, 2025
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் ராஜித சேனாரத்னவின் உடல்நிலை சீராக இல்லாத காரணத்தால் அவர் கைது செய்யப்படவில்லை என குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நாரஹன்பிட்டியவில் உள்ள லங்கா ஹொஸ்பிடல் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் குற்ற விசாரணைப் பிரிவினரின்...
பலாலி இராணுவ முகாமில் விமானப் படை அதிகாரியாகக் கடமையாற்றும் ஒருவரிடமிருந்து பணம் நகைகள் இனம் தெரியாத மர்ம கும்பலால் இன்று அதிகாலை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் உரெளு அம்மன் கோயிலுக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. குறித்த விமானப்படை அதிகாரி தனது குடும்பத்தாருடன் சொந்த ஊரான பொலனறுவை செல்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கி முச்சக்கரவண்டியில் இன்று...
அரியாலை பகுதியில் தனது காணியினை சட்டவிரோதமான மணல் அகழ்விற்கு வழங்கிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் மணல் அகழ்வில் ஈடுபட்டோர் வாகனங்களைக் கைவிட்டு தப்பித்துவிட்டனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ...
சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டனர். அதனால் சந்தேகநபர்கள் இருவரது விளக்கமறியலும் வரும் 20ஆம் திகதிவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டது. சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது அடையாள அணிவகுப்பை நடத்த...
சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் நுழைந்த இனந்தெரியாத இருவர் தாதியா்கள், ஊழியா்களை தாக்கி தளபாடங்களையும் அடித்து நொருக்கியுள்ளனர். இதனையடுத்து அவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் சந்தேகநபர்களை பொலிஸாாிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. வெட்டுக்காயத்துடன் மருந்து கட்டுவதற்காக இரண்டு இளைஞர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு வைத்திய பரிசோதனைக்கு பின்னர் மருந்து கட்ட...
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படத்துடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்தொன்றினை முகநூலூடாக பிரசுரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான இளைஞர் ஒருவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு மேலதிக நீதிவான் யூ.பி.ஆர். நெலும்தெனிய பேலியகொடை...
சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் கோண்டாவிலில் இரும்பக உரிமையாளரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களது குருதி மாதிரிகளைப் பெற்று கொலை வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி வழங்க பொலிஸார் முன்வைத்த விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நண்பருடன் இருந்த சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வுக்குட்படுத்தி...
யாழ்ல் 16 வயது இளம் யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ் நகரில் அமைந்துள்ள விடுதி உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றுபவர் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் 16 வயதுடைய இளம் யுவதி பேருந்துக்காக நேற்றுமுன்தினம்...
முல்லைத்தீவில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் தருமபுரம் மற்றும் புதுக்குடியிருப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் தாக்குதல் நடத்தச் சென்ற இருவர் சுதந்திரபுரத்தில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த இருவர்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்ப முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கூட்டமைப்பின் இறுதி பிரசார கூட்டம் இன்று (புதன்கிழமை)...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குட்டி என அழைக்கப்படும் கொள்ளையன் உள்ளிட்ட நால்வர் கோப்பாயில் வீடொன்றில் மறைந்திருந்த வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலியில் திருமண வீடொன்றில் புகுந்து காணொலியைக் காண்பித்து 60 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு...
வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப் வாகனமும் தாமும் தேடிவந்த வாகனமும் வேறு எனத் தெரிவித்துள்ள பொலிஸார், நீதிமன்றின் உத்தரவின் பேரில் வீட்டுக்குள் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர். அத்துடன் வங்கி முகாமையாளரின் துணைவியாரின் சகோதரர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். வவுனியாவில் மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பயணித்த...
யாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டு வன்முறைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கடந்த 2 வருடங்களாக தேடப்பட்டு வந்த “ஆவா” என காவற்துறையினரால் விழிக்கப்படும் இளைஞர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று சரணடைந்தார். சந்தேகநபரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆவா குழுவின் முக்கியஸ்தர் எனவும் “ஆவா” எனவும் காவற்துறையினரால் குறிப்பிடப்படும்...
யாழ்ப்பாணம் காரைநகரில் குடும்பத்தலைவர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்கு இருவருக்கு தூக்குத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார். 2008ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி காரைநகர் பாலாவோடையில் முருகேசு கணேசன் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிந்தது. அவரது கொலையடுத்து...
யாழ்ப்பாண மானிப்பாயில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 62 வயது முதியவர் மானிப்பாய் பொலிஸாறால் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துதம்பி வீதி மானிப்பாய் பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய நாகலிங்கம் யோகராசா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். தனது வீட்டிற்கு தனது நண்பனின் மகளான 14 வயது சிறுமிக்கு இனிப்பு வகைகளை பெற்றுக்கொடுத்து சிறுமியை தனது இச்சைக்கு பயன்படுத்தி...
கடந்த மாதம் 20ம் திகதி மாணவர் அனுமதிக்கு பெற்றோரிடம் லஞ்சம் பெறும்போது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேரடியாக கைது செய்யப்பட்ட அதிபர் நிமலன் பருத்தித்துறை நீதிமன்றினால் இன்று ஒக்டோபர் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அவருக்கான விளக்கமறியலை ஒக்டோபர் 15ம் திகதிவரை...
கொக்குவில் பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்த தாக்கியவர்கள் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியும் தமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறும் கோரி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். இதற்கமைய யாழிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) அவர்கள் இந்த முறைப்பாட்டை பதிவு செய்தள்ளனர். அண்மையில் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் பட்டப்பகல்...
யாழில் வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான இரும்பக உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று (திங்கட்கிழமை) இரவு உயிரிழந்தார். கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக...
வலி.தெற்கு பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ரவிக்குமார் யோகாதேவி வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் வீட்டு முற்றத்திலிருந்து உரையாடிக் கொண்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவர்களது உறவினர்கள் தெய்வாதீனமாக பாதிப்புகளின்றித் தப்பித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் உடுவில் கந்தேரோடை...
புங்குடுதீவுமாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவி காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. புங்குடுதீவு மாணவி...
Loading posts...
All posts loaded
No more posts