- Monday
- February 3rd, 2025
யாழ்.நகர மக்கள் தமது வீடுகளில் நாளாந்தம் சேரும் கழிவுகளை உக்கக்கூடிய கழிவுகள், உக்காத கழிவுகள் என தரம் பிரித்து வைப்பதன்மூலமே அவற்றை அகற்றுவது இலகுவாக இருக்குமென யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்தார். யாழ் மாநகர சபையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,...
யாழ்ப்பாணத்தின் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சிக்கியா என அழைக்கப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளை கைப்பற்றியுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சிக்கியா என்றழைக்கப்படும் யோகேஸ்வரன் என்பவர் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர். இவர் ஏற்கனவே திருட்டு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டிருந்த நிலையில் அதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இவ்வாறான நிலையில் சிறைக்காலம் முடிந்து...
யாழில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் திரைப்படம் பார்க்க சென்றவரை திரையரங்க ஊழியர்கள் தகாத வார்த்தை பிரயோகம் பிரயோகித்து அநாகரிகமாக அவருடன் நடந்து கொண்டதாகவும், அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டதாகவும் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர் தெரிவிக்கையில், யாழில் உள்ள குறித்த திரையரங்கில் சனிக்கிழமை (24) திரைப்படம் பார்க்கச்...
அனுமதிச் சீட்டு (டிக்கட்) இன்றி இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 1000 ரூபா வரை உயர்த்துவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, போக்குவரத்து அமைச்சிடம் குறித்த யோசனை வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர், ரமால் சிறிவர்த்தன குறிப்பிட்டுள்ளார். தற்போது அரச பஸ்களில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 250 ரூபா மற்றும்...
வர்த்தகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து பரிசுகளையோ, பரிசு உறுதிச்சீட்டுக்களையோ பெறுவதானது, இலஞ்ச சட்டத்தின் கீழ் தண்டணைக்குரிய குற்றமாகும் என்பதை அரசாங்க ஊழியர்கள் மத்தியில் அறிவுறுத்துவதற்கு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்புடைய தீர்மானம், தேசிய ஊழல் ஒழிப்பு மாநாட்டின் போது எடுக்கப்பட்டதாகவும் வர்த்தகர்கள் மற்றும்...
வவுனியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெரும்பான்மையினரத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பேரூந்து ஒன்றும் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா நகர பேரூந்து நிலையத்தில் த. சுபராஜ் என்ற குறித்த இளைஞன் உணவகம் நடத்தி வருகின்றார். கடந்த செவ்வாய்க்கிழமை வவுனியா கொழும்பு பகுதியில் பயணிக்கும் தனியார்...
50 கிராம் கஞ்சா பொதியினை 500 கிராம் மிக்சர் பக்கெற்றுக்குள் மறைத்து, சிறைச்சாலைக்குள் கொண்டு சென்ற அல்லைப்பிட்டி வெண்புரவி மீள்குடியேற்றப்பகுதியினை சேர்ந்த பெண்ணை, புதன்கிழமை (21) மாலை கைதுசெய்த சிறைச்சாலை அதிகாரிகள், யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வெண்புரவி மீள்குடியேற்றப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள தனது மகளைப் பார்ப்பதற்கு வந்த போது, தெரிந்த ஒருவர், இந்த உணவுப் பொதியினை...
காரைநகர் கடல்பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேரை, 3 விசைப்படகுடன் காங்கேசன்துறைக் கடற்படையினர் புதன்கிழமை (21) இரவு கைதுசெய்துள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். கைதான மீனவர்கள் அனைவரும் புதுக்கோட்டை மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். கைதான மீனவர்கள் விசாரணையின் பின் கடற்றொழில்...
வடமராட்சி பொற்பதி பகுதியில் நேற்று முன்தினம் குடும்பப்பெண்னை வெட்டிக்கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே குறித்த பெண்ணைக் கொலை செய்தவர் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பெண் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கிலே பெண்ணைக் கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது....
சங்கத்தானை பகுதியில், கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இ.போ.ச பஸ் சாரதியை, 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிபிள்ளை, நேற்று அனுமதி வழங்கினார். மேலும், இந்த விபத்துடன் தொடர்புடைய வழக்கை, எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி வரை, நீதவான்...
வடமராட்சி தும்பளைப் பகுதியில், சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து, அண்ணனின் கத்திக்குத்துக்கு இலக்காகி, தம்பி பலியாகியுள்ளார். திங்கட்கிழமை (19) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்தக் சம்பவத்தில், அதே பகுதியினைச் சேர்ந்த சிவகுமார் சுவர்ணன் (வயது 20) என்பவரே பலியானதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நெடுந்தீவின் வடமேற்கு பகுதியில், இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள், இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 2 டோலர் படகுகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகள், மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் கூறியுள்ளனர்.
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பாக புதிய சட்டங்களை தயாரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் சமூக வலைத்தளங்ளை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சைபர் குற்றத்தின் கீழ் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான சட்டங்கள் நாட்டில் காணப்படாத நிலையில் புதிய சட்டங்களை உருவாக்கி அதனூடாக நடவடிக்கை...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நிதியளிப்பாளராக இருந்த எமில் காந்தனை கைது செய்யுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. ராடா, வழக்கு தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஆனந்தபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்த இருவர், ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய இன்று (வியாழக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் மதுபான விற்பனை இடம்பெறுவதால் மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திப்பதாக தெரிவித்து, கிராம மக்களால் ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, ஒவ்வொன்றும்...
முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலய பரீட்சை நிலையத்தில் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் பிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வருடம் கணிதபாட பரீட்சையில் தோல்வியுற்ற ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுதியவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து உரிய பரீட்சாத்தியையும் கைது...
மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் 50,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில், இன்று(14) புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில்; நடந்து கொண்டார், இன ரீதியான பேச்சுக்களை பேசியதாக கூறி, அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கு எதிராக, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மட்டக்களப்பு பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர். இதையடுத்து தேரரை,...
நேற்று முன்தினம் இரவு தமது வழமையான ரோந்து பணியை பொலிஸார் மேற்கொண்டிருந்த வேளை 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் கொட்டடி மீனாட்சி அம்மன் வீதியை சேர்ந்த சிறுவனே கஞ்சாவை நுகர்விற்காக வைத்திருந்ததன் பேரில் கைது செய்யப்ப ட்டார். கைது செய்யப்பட்ட சிறுவன் நேற்று யாழ். நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் சந்தேக நபரை...
முல்லைத்தீவில் இருந்து கடல்மார்க்கமாக படகொன்றில் கடத்தி திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட 140 கிலோ கிராம் கஞ்சா, நிலாவெளி பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை 2 மணியளவில் கைப்பட்டப்பட்டது. சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர். திருகோணமலை பிராந்திய துர்நடத்தை ஒழிப்பு பிரிவின் பொலிஸ் குழு ஒன்று குறித்த பிரதேசத்தில் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது குறித்தளவு கஞ்சா...
Loading posts...
All posts loaded
No more posts