- Monday
- February 3rd, 2025
கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் இரண்டு இளைஞர்கள் இன்றையதினம் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகர்கள் நடத்திய தேடுதலின் போது இரு இளைஞர்கள் நுகர்விற்காக கஞ்சா கலந்த மாவாவை கொள்வனவு செய்த போது கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 84 கிராம் கஞ்சா கலந்த மாவாவை...
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் 06 பேர் இன்று (08) இலங்கை கடற்படையினால் யாழ்ப்பாண நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த இந்திய மீனவர்கள் 06 பேர்களும் யாழ்ப்பாண நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். ஒரு ட்ரோலர் படகுடன் ஏனைய மீன்பிடி உபகரணங்களுடன் அவர்கள் கைதானதாக கடற்படையினர்...
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தினை வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் தலைமையில் இயங்கும் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள்...
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறை அமைத்தமை தொடர்பாக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்ட நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு முரணான வகையில் கல்லறை அமைக்க முற்பட்டர்கள் என்ற குற்றச்சாட்டில் மாவீரர்களது உறவினர்கள், முன்னாள் போராளிகள் ஆகியோருடன் கரைச்சி பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டது. இவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் 5.6 கிலோக்கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று மாலை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாங்குளம் பொலிஸ்நிலைய சிறுகுற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இந்துபுரம் பகுதியில் வீடொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேரள...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள், அங்கிருக்கும் ஏனைய கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார் உள்ளிட்ட சந்தேக நபர்கள் வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமது ஆதிகத்தினைச் செலுத்தி ஏனைய...
முல்லைத்தீவு மாவட்டம் செல்வபுரம் பகுதியில் நேற்று நள்ளிரவு 11.15 மணியளவில் வர்த்தகர் ஒருவரின் வீட்டினுள் சென்று நான்குபேர் கொண்ட குழுவினர் 60,000 பணத்தினை அபகரித்துச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, நேற்று நள்ளிரவு வீட்டு உரிமையாளரின் பெயரைச் சொல்லி அழைத்த நான்குபேர், தாம் சிஐடியினர் எனவும், விடுதலைப்புலிகளின் பணம் தொடர்பாக உங்களிடம் விசாரணை நடாத்தவேண்டுமெனவும்...
யாழ். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் சந்தேகநபர்கள் 12 பேரின் விளக்க மறியல் எதிர்வரும் 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் இ.சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 19ஆம் திகதி...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பத்து இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் ஜகதாபட்டினம் பகுதியைச் சேர்ந்த குறித்த மீனவர்கள், நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று (புதன்கிழமை) இரவு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய இரு படகுகளும் கைப்பற்றப்பட்டன....
யாழில் பல பெண்களிடம் தகாத முறையில் நடப்பதற்கு முயற்சித்த பொலிஸ் புலனாய்வாளர் ஒருவருக்கு எதிராக யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். நகர் முனியப்பர் வீதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் பணியாற்றும் இளைஞன் ஒருவரை நேற்று கைதுசெய்து அழைத்துச் சென்ற 45 வயது மதிக்கத்தக்க குறித்த பொலிஸ் புலனாய்வாளர், அவரை யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்...
நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு அருகில் கடந்த 25ஆம் திகதி, இண்டு நபர்களை இரும்பு கம்பியால் குத்தி படுகாயமடையச் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் நால்வர், செவ்வாய்க்கிழமை (03) சரணடைந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் தேடப்பட்டு வரும் நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்....
1998ஆம் அச்சுவேலி சிறுப்பிட்டி பகுதியில் சிவிலியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட 14 இராணுவத்தினரின் விளக்கமறியலை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், திங்கட்கிழமை (02) உத்தரவிட்டார். 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி, சரஸ்வதி சௌந்தரராஜன்,...
வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று முன்தினம் ( 01) காலை 10.30மணியளவில் முச்சக்கர வண்டி சாரதி மீது மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்ட இரண்டு இராணுவ வீரர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் காலை மூன்று முறிப்பு பகுதியிலுள்ள இராணுவ வீரர்கள் இருவர் மதுபோதையில் அப்பகுதியிலிருந்து முச்சக்கரவண்டி...
பொலிஸாரை தகாத வார்த்தையால் பேசிய இளைஞரை யாழ். பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கைதுசெய்யப்பட்ட இளைஞர் நேற்று (திங்கட்கிழமை) யாழ். பஸ்தியன் சந்திப்பகுதியில் இளைஞர்களுடன் நின்றுள்ளார். அப்போது, சிங்கள மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்த...
போக்குவர்த்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படவுள்ளதாக உத்தேசி்க்கப்பட்ட 25,000 ரூபா அபராதம் விரைவில் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வௌியிட்டார். மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்ட...
பொதுச்சொத்துக்கள் பொது இடங்களில் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் வீதிகளின் ஓரங்களில் நிழல்தரும் மரங்களில் விளம்பரத் தகடுகளை ஆணிகளைப் பாவித்துப் பொருத்துதல் என்பன யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (01.01.2017) முதல் தடைசெய்யப்படவுள்ளதாக ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார். சுவரொட்டிகளை விளம்பர நோக்கத்துக்காகவும் அறிவுறுத்தல் நோக்கத்துக்காகவும் காட்சிப்படுத்தவிரும்புவோர் இரண்டுக்கு மேற்படாத சுவடிரொட்டிகளை யாழ்.மாநகரப் பகுதிகளில் நிறுவியுள்ள விளம்பரப்...
வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக, கடந்த வருடம் 26 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறைப்பாடுகள், யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி கந்தையா தியாகராஜா, சனிக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்ககையில், நெல்லியடி,...
1 கிலோ 800 கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த மணல்காடு பிரதேசத்தினை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனை, உப்புவல்லை பகுதியில் வைத்து சனிக்கிழமை (31) கைதுசெய்துள்ளதாக, காங்கேசன்துறை குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். சிவில் உடையில் சென்ற பொலிஸார், சந்தேகிக்கப்பட்ட இளைஞன் ஒருவரிடம் தாமும் கஞ்சா வாங்குவது போல் பாசாங்கு செய்து அவரைக் கைதுசெய்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.ரி.சிவலிங்கம் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையினை குற்றப்புலனாய்வு பிரிவினர்...
போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த இலங்கை பிரஜைகள் இருவர், கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த நிலையில், விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆவண சோதனையின் போது, போல கடவுச்சீட்டு...
Loading posts...
All posts loaded
No more posts