- Monday
- February 3rd, 2025
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது பதின்ம வயது மகளைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான தந்தையை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், செவ்வாய்க்கிழமை (17) உத்தரவிட்டார். 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பிலேயே தந்தை, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். பெற்றோரைப்...
காரைநகர் போக்குவரத்து சாலைக்குச் சொந்தமான பஸ்ஸை மறித்து தாக்குதல் மேற்கொண்ட 12 பேருக்கு, தலா 4,000 ரூபாய் வீதம் 48 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், 12 பேருக்கும் 1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 5 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பஸ் மீது தாக்குதல்...
கொடிகாமம் தவசிக்குளம் பிரதேசத்தில், தனது மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். 2015 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு வருவதாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார், தந்தையை கைது செய்துள்ளனர். இச்சிறுமியின் தாய் கடந்த வருடம், கணவனை பிரிந்துச் சென்ற நிலையில், தந்தையுடனும் உறவினர்களுடனும் சிறுமி வசித்து வந்துள்ளார்....
ஆவரங்கால் - நவோதயா வீதியில் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அச்சுவேலி தெற்கு பகுதி இளைஞர்களுக்கும் ஆவரங்கால் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையினை தீர்த்து வைப்பதற்கு பெரியோர்கள் எடுத்த முயற்சியின்போதே இந்த...
1998ஆம் ஆண்டு அச்சுவேலி சிறுப்பிட்டி பகுதியில் இரண்டு சிவிலியன்கள் கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அச்சுவேலி பொலிஸாரால் மேற்கொண்டு வரும் வழக்கு விசாரணை, போதிய சாட்சிகள் இல்லாமையினால் இழுத்தடிப்பு செய்யப்படுவது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தனது அதிருப்தியினை வெளியிட்டுள்ளார். மேலும், போதிய சாட்சிகள் இன்றி தடுத்து வைக்கப்படுவதும்...
கொழும்பில் கப்பம்கோரி தமிழ் இளைஞர் ஒருவரைக் கடத்தி காணாமல் போகச் செய்தவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடைபடை அதிகாரியொருவரைக் கைதுசெய்துள்ளனர். கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த இளைஞனே 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கப்பம்கோரப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் நேற்றையதினம் கடற்படை அதிகாரியான லெப்.கொமாண்டர் அனில் தம்மிகவை குற்றப் புலனாய்வுப்...
கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் முன்னாள் போராளியொருவர் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருவையாற்றை சேர்ந்த முருகையா தவவேந்தன் என்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியொருவரே இவ்வாறு நேற்று இரவு 11 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைதுசெய்தவர்கள் தாம் காவல்துறையினர் எனத் தெரிவித்ததுடன் வவுனியாவில் இருந்து வருவதாகவும்...
ஊர்காவற்துறையில் தேர்தல் பரப்புரைக்குச் சென்றவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான இரட்டைக் கொலைவழக்கு விசாரணையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியினர் இருவரையும் பிரித்தானியாவிலிருந்து சிறீலங்காவுக்கு நாடுகடத்துமாறு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பரிந்துரைசெய்துள்ளார். தூக்குத் தண்டனைகளில் தீர்ப்பளிக்கின்ற நீதிபதி ஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேனவுக்கு தமது தனிப்பட்ட அபிப்பிராயத்தை அனுப்பிவைக்கவேண்டும் என்ற நடைமுறைக்கமைய,...
சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து படகொன்றில் தமிழகத்தின் தனுஷ்கோடியை அடைந்த இலங்கை இளைஞனை கைதுசெய்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் மாவட்டம், பேசாலைப் பகுதியைச் சேரந்த 36 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் படுகொலை தொடர்பில் அவர்களின் பெற்றோர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை செய்தமை தொடர்பில்...
அனுராதபுர விமானபடை தாக்குதல் வழக்கு தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பயங்கரவாத சட்டத்தின்கீழ் அனுராதபுர சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரை சிறைக்குள்ளே சிறைவைத்து இம்சைபடுத்துவதாக தெரிவிக்கபடுகிறது. கடந்த 2009 ஆண்டு பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த ராசவல்லவன் என்பவருக்கு எதிராக கடந்த 2008 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அனுராதபுர விமானபடை தாக்குதல் சம்பவத்துடன்...
இந்தியாவில் இருந்து கேரள கஞ்சாவினை கடத்தி வந்த இரண்டு இந்தியர்களை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இந்தியா தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த நிறையானது 50 கிலோ என்றும், அதன் பெறுமதி 87 இலட்சத்து 50 ஆயிரம்...
சுன்னாகத்தில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்தது தொடர்பிலான வழக்கில், பொலிஸ் உத்தியோகத்தர்களது, பிணை மனு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனினால்.நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக சர்வதேச பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் 5 பொலிஸ்...
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினரால் சற்றுமுன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார். இதற்கு முன்னரும் விமலிடம் பலமுறை விசாரணை...
பருத்தித்துறை சாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த கன்டர்ரக வாகனம் ஒன்றினை மறிப்பதற்காக காவல்துறையினர் ரயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும். இதன்போது யாழ். பருத்தித்துறை வீதி வழியே வந்த கயேஸ் வாகனத்துடன் மணல் ஏற்றிவந்த கன்டர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை வைத்திசாலைக்கு சேர்ப்பதற்கு இளைஞர்கள் முயன்ற வேளை...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கல்வியங்காடு விளையாட்டு மைத்தானத்தில் வைத்து இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ். கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள புலவனார் வீதியால் குறித்த இளைஞர் சென்றுள்ளார். இதன் போது மோட்டர் சைக்கிளில் வந்த 6 பேர் குறித்த...
துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும் தாம் சில நேர்த்திக் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைப்பதாகவும் நபரொருவர், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்று தெரிவித்தார். கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வைத்து 275கிராம் கஞ்சாவுடன் நீர்கொழும்பைச் சேர்ந்த முப்பது வயதான சந்தேகநபர், கிளிநொச்சிப் பொலிஸாரால் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார். அவரை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில்...
பற்றுச்சீட்டொன்றைப் பெற்றுக்கொள்ளாத நிலையில், தனியார் பஸ்களில் தூரப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு, அபராதத் தொகையொன்றை விதிக்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறு, பற்றுச்சீட்டின்றிப் பயணிக்கும் பயணியொருவருக்கு, ஆயிரம் ரூபாய் மற்றும் பற்றுச்சீட்டுக் கட்டணத்தின் இருமடங்கையும் செலுத்தக்கூடிய வகையில், இந்த அபராதம் விதிக்கப்படும் என்றும் அவ்வாணைக்குழு தெரிவித்தது. அதற்கு ஏற்றவகையிலான சட்டத்திருத்தங்களை, தற்போது தயாரித்து...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய முக்கிய இரு குற்றவாளிகளைக் கைதுசெய்ய சட்டமா அதிபர் அனுமதி மறுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. சுவிற்சர்லாந்துக்குத் தப்பிச் சென்ற இந்தப் படுகொலையின் இரண்டு முக்கிய சந்தேக நபர்களையும் கைது செய்து,...
வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விஷேட பொலிஸ் குழுவினால் வாள் வெட்டு குழுச் சேரந்த சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தினை சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்து, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
Loading posts...
All posts loaded
No more posts