- Monday
- February 3rd, 2025
சிறுப்பிட்டி கொலை வழக்கில் சந்தேகநபர்களான 14 இராணுவத்தினரின் விளக்கமறியல் மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டுவில் வடக்கை சேர்ந்த செல்வரத்தினம் ஜெயசீலன், நாகமணி சௌந்தரராஜன் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த 1997ம் ஆண்டு ஒக்டோபர் 28ம் திகதி மயிலங்காட்டு பகுதிக்கு உறவினருடைய திருமணத்துக்காக சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் இருவரும் சிறுப்பிட்டி புத்தூர் வாதரவத்தையில் அமைந்திருந்த இராணுவ...
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரின்ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மார்ச் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்கொண்ர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன்...
யாழ்ப்பாணம், கல்லுண்டாய் வெளிபகுதியில் பெண் மீது, முகத்திலும் மார்பிலும் கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பில், பொம்மை வெளிபகுதியினை சேர்ந்த 42 வயதுடைய நபரை ஞாயிற்றுக்கிழமை, கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சோமசுந்தரம் வீதி ஆணைக்கோட்டை பகுதியினை சேர்ந்த எஸ்.வசந்ததேவி (வயது 38) என்றப் பெண், கத்திக்குத்துக்கு சனிக்கிழமை இலக்கானார். காயங்களுக்கு உள்ளாகி மயங்கி கிடந்த...
ஆவரங்கால், நவோதய வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், கைதான சந்தேக நபர்கள் மூவரை, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன், ஞாயிற்றுக்கிழமை (29) உத்தரவிட்டார். இந்தச் சம்பவத்துடன், தொடர்புடைய குற்றச்சாட்டில் ஏற்கெனவே மூவர் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் மூவர், அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸாரால் சனிக்கிழமை (28)...
மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயங்களுடன் இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் 21 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் இல்லாதல் பணம் கொண்டு வந்ததாக இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த...
கல்கிஸ்ஸை கடல் பிரதேசத்தில் நீராடிக் கொண்டிருந்த ரஷ்ய நாட்டு யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கல்கிஸ்ஸை கடல் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மிரிஹான மற்றும்...
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலையின் சாட்சியான சிறுவனின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இ. சபேசன் காவல்துறையினருக்கு உத்தரவு இட்டுள்ளார். சாட்சியான சிறுவனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் நேற்று வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இ.சபேசனின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்....
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் மேலதிக விசாரணை அறிக்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி சவீஸ்கரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது. இதன்போது, வழக்கு குறித்த மேலதிக விசாரணை அறிக்கையினை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர். குறித்த வழக்கு...
ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் கோடரி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் பெப்ரவரி 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார். ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணியான ஞனசேகரம் ரம்சிகா (வயது27) என்ற பெண் கொடூரமான முறையில்...
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலையினை நேரில் கண்டதாக பன்னிரண்டு வயது, சிறுவன் காவல்துறையிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். ஊர்காவற்துறை கரம்பெண் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணே படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது , நெடுந்தீவு பகுதியை சேர்ந்த இளம்...
நாட்டில் தற்போது யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கின்றது எனலாம், அத்துடன் இவர்கள் தற்போது வீடுகளுக்கு சென்றும் பேருந்துகளிளும் ஏறி யாசகம் செய்து வருகின்றனர். இவ்வாறு பேருந்துகளில் ஏறி யாசகம் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரம் பேர் ஆக இருக்கக்கூடும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இவ்வாறு பேருந்துகளில் ஏறி...
ழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேரத்துரை சந்திரகாந்தனின் உத்தரவின் பேரிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டுள்ளது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் உச்சநீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. பிள்ளையானின் உத்தரவின் பேரில் சாந்தன் என்பவரே இந்தப் படுகொலையை புரிந்திருப்பது பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் உச்சநீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது....
ஆனையிறவு கொம்படி வெளிப் பகுதியில், எம்ஐ24 உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்தி, 4 விமானப்படையினர் பலியாவதற்குக் காரணமாக இருந்தார் என விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவரின் வாக்குமூலத்தை யாழ்ப்பாண மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இரத்துச் செய்துள்ளார். 1999ஆம் ஆண்டு டிசெம்பர் 17ஆம் நாள், ஆனையிறவு அருகேயுள்ள கொம்படி வெளியில் எம்.ஐ-24 உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தி...
ஆவரங்கால் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர், அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸாரால் திங்கட்கிழமை மாலை, கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ளனர். தைப்பொங்கல் தினத்தன்று, அச்சுவேலி தெற்கு பகுதி இளைஞர்களுக்கும், ஆவரங்கால் நவோதயா பகுதி இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையினை தீர்த்து...
ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண், கோடரி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். 7 மாத கர்ப்பிணியான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர் மீதே இவ்வாறு கோடாரி வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு குழந்தையின் தயான இப்பெண்ணின் வீட்டுக்குள், திருடும் நோக்கோடு இன்று மதியம் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள், கோடாரியால் கொத்தியுள்ளனர். இரத்த...
தலைமன்னாரில் இருந்து மன்னார் ஊடாக கொழும்புக்கு, அதி சொகுசு கார் ஒன்றில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சாப் பொதிகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் வைத்து காரை மறித்து...
கிளிநொச்சி மாவட்டம் திருவையாறுப் பிரதேசத்தில் மீண்டுமொரு முன்னாள் போராளி கைதாகியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கராளசிங்கம் குலேந்திரன் என்பரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்த குறித்த முன்னாள் போராளி கடந்த வாரம் வெளியில் சென்றிருந்தபோது பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தற்போது வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புனர்வாழ்வு...
சகோதரியின் வங்கி கணக்கில் இருந்து போலியான கையெழுத்து மற்றும் அடையாள அட்டையினை காண்பித்து 45ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்ட பெண்ணைத் தேடி தெல்லிப்பழை பொலிஸார் வலை விரித்துள்ளனர். மணற்குளம் அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த பெண்ணுக்கு சமூர்த்தி வங்கியில் இருந்து கிடைத்த பணத்தை, அளவெட்டி பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் வைப்பிட்டுள்ளார். இதனையடுத்து, கடந்த...
வடமராட்சி கிழக்கு பகுதியில் போலி நாணயத்தாளை அச்சடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை,பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி கந்தசாமி, சனிக்கிழமை (21) மாலை உத்தரவிட்டார். வல்வெட்டித்துறை விடுதி ஒன்றில் வௌ்ளிக்கிழமை போலி நாணயத்தாளை வழங்க முற்பட்ட நபர் பொலிஸாரால் கைது...
வல்வெட்டிதுறை பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட 5 சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 தொடக்கம் 27 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சந்தேக நபர்கள் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி மதுபானம் வாங்கும்...
Loading posts...
All posts loaded
No more posts