- Monday
- February 3rd, 2025
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான விடுதியொன்றில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் 69 வது சுதந்திர தினம் நாடளாவிய ரீதியாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மதுபானசாலைகளை மூடுவதற்கும், வேறு விதத்தில் மதுபானங்கள் விற்பனை செய்வதற்கும் அரசாங்கம் தடை விதித்திருந்தது.
இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றில் அரசாங்கத்தின்...
யாழ்ப்பாண குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொஸிஸ் புலனாய்வு பிரிவினர் இது தொடர்பாக தகவல் வௌியிட்டுள்ளனர். இந்த குழுக்களின் பெரும்பாலானவை வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில்...
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு உள்ள இரண்டு சந்தேகநபர்களும் கொலை நடந்த சமயம் பிறிதொரு இடத்தில் நின்றதாக சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, 'நகர்த்தல் பத்திரம்' தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் குறித்த வழக்கினை, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (03) ஊர்காவற்துறை...
சட்டவிரோத மதுபாவனை மற்றும் விற்பனை தொடர்பில் கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 1,575 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மது வரித் திணைக்களத்தின் வடமாகாண பொறுப்பதிகாரி சோதிநாதன்தெ ரிவித்தார். யாழ்ப்பாணம், சாவகச்சேரி, சங்கானை, மல்லாகம், பருத்தித்துறை, ஆகிய இடங்களில் உள்ள மதுவரித் திணைக்களத்தின் அலுவலகங்களில் கடந்த வருடத்தில் மட்டும் 1,575 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் சட்டவிரோதமாக...
உரும்பிராய் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் கடமையிலிருந்த, விசேட அதிரடிப்படையினரை கண்டு தப்பித்து ஓடிய நபர்களிடம் இருந்து வாள்கள் மிட்கப்பட்டுள்ளன. கோப்பாய்கப் பொஸிசார் நேற்று இந்த தகவலை வௌியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கடமையிலிருந்த சமயம் மோட்டார் வண்டி ஒன்றில் இரு வாள்கள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்து கொண்டிருந்த...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றுமொரு நபரையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த வீ.விஜயன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்....
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் போது ஏற்பட்ட குழு மோதலில் இடம்பெற்ற கொலை தொடர்பில் நேற்றயதினம் நடைபெறவிருந்த தொடர்விசாரணை யாழ்.மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவத்தில் சிவசண்முகநாதன் மதுஷன், இந்திரசீலன் பிருந்தாபன், ரமேஷ் வெண்டில்கரன், நேசரட்னம் கஜேந்திரன்,...
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐந்து இந்திய மீனவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட்டிருந்த போது கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இந்தியாவில் ஜகதாளப்பட்டினத்தை சேர்ந்தவர்கள்.
“மைதானத்தில் ஆடிக்கொண்டு இருந்த சிலர், எம்மைத் தாக்குவதற்காக ஓடிவந்தனர். அதனைக் கண்ட நான் ஓடினேன். ஓடிக்கொண்டே திரும்பிப் பார்க்கும் போது, எனது நண்பனான ஜெயரட்ணம் தனுஷன் அமலனை (உயிரிழந்தவர்) சூழ்ந்து நின்றிருந்தவர்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் கொட்டன்கள் கொண்டு தாக்கிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நான், திரும்பி ஓடி வந்த போது, நண்பன் நினைவற்றுக் கிடந்தான்”...
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்றத்தில் தொடர் விசாரணையாக நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையில் நடை பெற்ற கிரிக்கட் போட்டியின் போது ஏற்பட்ட குழு மோதலில் ஜெயரட்ணம் தனுசன் என்பவர்...
நல்லூர், கந்தர்மடத்தில் உள்ள பலசரக்கு கடை மீது, பெற்றோல் குண்டு வீசி, கடையில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஐவரும், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதுடன், யாழ். மாவட்ட நீதிமன்றில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அதன்போது, சந்தேகநபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் டி.சிவலிங்கம்,...
யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் நேற்று முன்தினம் யாழ்.அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் குறிப்பாக நகரப் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே...
மிருசுவிலில், பொது மக்கள் பலரைக் கொன்றதாகக் குற்றம் காணப்பட்டு, மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரருக்குப் பொதுமனின்ப்பு வழங்குமாறு கோரி, தாய் நாட்டுக்கான போர்வீரர்கள் நிறுவனம், ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. தாய் நாட்டுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருந்த பதவிநிலை அதிகாரியான சார்ஜன்ட் ரத்னாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, இந்த அமைப்பின் ஏற்பாட்டாளர், மேஜர்...
சிறுப்பிட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 14 இராணுவத்தினரில் ஐவருக்கு நேற்றையதினம் யாழ். மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது. 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ் சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி காவல்துறையினர் கைது செய்தனர். எனினும் 1998ம் ஆண்டு நீதவான் நீதிமன்றம்...
மோட்டார் சைக்கிளில் பயணிப்போருக்கான தரம் வாய்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய தலைக்கவசம் அணியும் சட்டம் எதிர்வரும் ஏப்றல் மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை தரப்படுத்தும் நிறுவனமும், நுகர்வோர் அதிகார சபையும் இந்த பணிக்கு...
வல்வெட்டித்துறை காவல் நிலையதிற்கு பின்னால் உள்ள தனியார் காணியில் உள்ள நன் நீர் கிணறினை காவல் நிலைய கழிவு நீர் தேக்கி வைக்கும் குழியாக மாற்றி வைத்திருப்பதால் கிணறு மாசடைந்து காணப்படுவதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். நேற்றய தினம் யாழ் மாவட்ட டெங்கு தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்றது....
யாழில் இடம்பெற்ற பல்வேறு வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களுக்கு யாழ் மேல் நீதிமன்றம் கடும் எச்சரிக்கையின் பின் பிணை வழங்கியுள்ளது. யாழில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட “றோக் ரீம்” என்ற குழுவை யாழ் பொலிஸார் தீவிர தேடுதலில் பின் கைது செய்தனர். குறித்த நபர்களிடம் இருந்து...
யாழ்ப்பாணம் அரசடி வீதியிலுள்ள கடையொன்றில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இளைஞர்கள் கடையொன்றில் பணியாற்றிய இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளதுடன், கடைக்கும் தீயிட்டமை தொடர்பில் யாழ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். குறித்த கடையினூள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமரா பதிவுகளை...
யாழ்.அரசடி பகுதியில் உள்ள கடை ஒன்றிற்குள் நேற்று(திங்கட்கிழமை) இரவு நுளைந்த இனந் தெரியாத கும்பல் ஒன்று வாள்களால் இருவரை வெட்டியுள்ளதுடன், கடை மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலையும் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவரும், கடைக்குப் பொருட்கள் வாங்க வந்த ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த தாக்குதல்...
பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ஐந்து முன்னாள் போராளிகளும் நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது அவர்கள் ஐவரையும் எதிர்வரும் 13ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த ஐவரும் அதிக வலுக்கொண்ட ஆயுதங்கள் வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குணசேகரலிங்கம் ராஜ்மதன்(அச்சுவேலி), கே.குலேந்திரன்(திருவையாறு-கிளிநொச்சி), எம்.தவேந்திரன்(கிளிநொச்சி), வி.விஜயகுமார்(மன்னார்), லூவிஸ்...
Loading posts...
All posts loaded
No more posts