- Sunday
- February 2nd, 2025
வவுனியா - மறவன்குளம் பகுதியில் நேற்று (15) காலை எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சியினை மேற்கொண்ட நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று காலை குறித்த சிறுமி வீட்டின் பின்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதியிலுள்ள 45 யதுடைய நபர் ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றதை அவரது சகோதரன்...
கொழும்புக்கு கடத்த முற்பட்ட 24 கிலோவும் 400 கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதியுடன், மூன்று சந்தேகநபர்களை நேற்று கைது செய்ததாக, இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஆர்.சேனாநாயக்க தெரிவித்தார். இளவாலை பொலிஸ் புலனாய்வு அதிகரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாதகல் - கல்விளை பகுதியில், சிவில் உடையில் காத்திருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில்...
கொழும்பின் பிரபல பாடசாலைகளின் மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ள மோதல் சம்பவங்கள் காரணமாக ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனந்த மற்றும் நாலந்தா கல்லூரி மாணவர்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவம் காரணமாக சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவத்திலும் சில மாணவர்கள்...
கைலாசப்பிள்ளையார் கோயில் பகுதில் உள்ள கடை ஒன்றின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கிய திருடர்கள், 25 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. கடை உரிமையாளர், வழமைபோன்று நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று காலை, கடையினைத் திறந்து உள்ளே சென்றபோது,...
டுபாயில் இலங்கையை சேர்ந்த ஆறு பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு இலங்கையர்களும் 26 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என அந்த நாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன. குறித்த இலங்கையர்கள் வீடுகளை உடைத்து தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தல், நபர்கள் மற்றும்...
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் கர்ப்பினி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சிகளது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சாட்சியப் பதிவுகளானது சாட்சிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு நீதிவானது பிரத்தியேக அறையில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24 ஆம் திகதி ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த ஏழு மாத கர்ப்பினி பெண்ணொருவர்...
இலங்கை இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றவர்களில் சுமார் 550 பேரை ஒரே நாளில் கைது செய்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தை தொடர்ந்து இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றவர்கள் 550 பேர், ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர். இறுதி யுத்தத்தில் பங்குபற்றிய இராணுவத்தினரில் சுமார் 43000 பேர் தப்பிச் சென்றிருந்ததோடு, அவர்களுக்கான...
சிறுப்பிட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இராணுவத்தினரில் 9 பேரின் விளக்கமறியல் யாழ். நீதவான் நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி காவல்துறையினர் கைது செய்தனர். எனினும் 1998 ஆம் ஆண்டு நீதவான் நீதிமன்றம் குறித்த...
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 5பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இன்று பிறப்பித்தார்.
கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைத்து திடீரென கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் ஐந்துபேரும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்ட ஐந்து முன்னாள் போராளிகளின் வழக்கு விசாரணைகளும் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டது. 30 ஆம் திகதி...
வல்வெட்டித்துறை பிரதேசத்தில் 120 கிலோகிராம் கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் அதனை கடத்தி வந்த மூன்று நபர்களையும் கைது செய்துள்ளதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் குறித்த கேரள கஞ்சா கடத்தல் முறியடிப்பு தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்தினூடாக பிற மாவட்டமொன்றுக்கு கேரள கஞ்சா கடத்தல் இடம்பெறவுள்ளதாக இரகசிய தகவலொன்று கிடைக்கப்பட்டிருந்தது....
யுவதி ஒருவரை காதலிப்பதாக கூறி, அவரை 5 மாத கர்ப்பிணியாக்கிய இராணுவச் சிப்பாய், இராணுவ அதிகாரிகளால் வியாழக்கிழமை (09) இரவு கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. படைச் சிப்பாய் அங்குள்ள யுவதி ஒருவரை காதலிப்பதாக கூறி அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதன் காரணமாக குறித்த யுவதி தற்போது...
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்தில் சந்தேகநபர்களான ஐந்து பொலிஸாரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற யாழ். பல்கலைகழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்தில் யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஜந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள்...
ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் 7 மாதக் கர்ப்பிணி, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும், இன்று (08) அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர். ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்ற கர்ப்பிணி, கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார். இவருக்கு நான்கு வயதில் மகனொருவனும்...
வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வண்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் மாணவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களுக்குமான பிணை வழங்க...
கடந்த சில மாதங்களாக வவுனியாவில், புலனாய்வுப் பிரிவினர் என, தங்களை அடையாளப்படுத்தி கொள்ளையில் ஈடுபட்ட மூவரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வாரிக்குட்டியூர், செட்டிக்குளம், முதலியார்குளம் போன்ற பகுதிகளில், தங்களை புலனாய்வு பிரிவினர் என அடையாளம் காட்டி வீட்டை பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து அதன் பின்னர் கத்தியினை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்....
விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன் உள்ளிட்ட குழுவினரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், நெடியவனை சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நோர்வேயில் விடுதலைப் புலிகளின் தலைவராக நெடியவன் செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்படுவதோடு, புலிகள்...
மாலபே சயிடம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகத்தை முழுவதும் மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்து வந்த சிலரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். சயிடம் நிறுவனத்தின் முன் நடந்த இந்த சம்பவத்தால், சமீர சேனாரத்னவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
சுன்னாகம் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில், ஒருவர் உயிரிழந்ததையடுத்து, விபத்துடன் தொடர்புடைய சாரதி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சுன்னாகம் பகுதியினைச் சேர்ந்த வைத்தியலிங்கம் நடராஜா (வயது 79) என்ற நபர், வீதியில் நடந்துச் சென்ற போது, காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. படுகாயங்களுக்கு உள்ளான அவர், யாழ். போதனா வைத்தியசாலையில்...
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும், 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கல்வியங்காடு, கோப்பாய், அளவெட்டி, சுன்னாகம், உரும்பிராய் பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர், வாள் மற்றும் கத்திகளை செய்து கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்....
Loading posts...
All posts loaded
No more posts