நியூசிலாந்து செல்ல முயன்ற தமிழர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் நியூசிலாந்து செல்ல முயன்ற 18பேர் சிறீலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நீர்கொழும்பில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 15 பேர் தமிழர்கள் எனவும், அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 பல்கலைக்கழக மாணவர் மீது துப்பாக்கிச் சூடு :5 பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்தினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பொலிஸாரின் விளக்கமறியலையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீடித்து, யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி, கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில்...
Ad Widget

154 கிலோ கேரளா கஞ்சாவுடன் 05 பேர் கைது

154 கிலோகிராம் கேரளா கஞ்சா விநியோகம் செய்து கொண்டிருந்த ஐந்து பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் காங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நடவடிக்கையில் இதனுடன் தொடர்புடைய மேலும் இருவர் உடுத்துறை கடற் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா மற்றும் கைது...

வீதியில் அபாயகரமான கத்தியுடன்திரிந்தவருக்கு சிறை

இரவு நேரம் திருடும் நோக்குடன் அபாயகரமான கத்தி, குறடுகளுடன் வீதியில் திரிந்தவருக்கு 5 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 5 மாத சிறைத்தண்டனை விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன், புதன்கிழமை (22) தீர்ப்பளித்தார். ஏழாலை - கிழக்கு சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 9ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் இரவு நேர...

ஆணுறுப்பை குறட்டால் நசித்தனர்; பிணத்தையும் அடித்து துன்புறுத்தினர்

“முழந்தாழில் இருத்தி, இரு கைகளையும் கால்களுடன் இணைத்துக் கட்டி, இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டித் தூக்கி, உயிரிழக்கும் வரையில் அடித்தே கொன்றார்கள். உயிரிழந்த பின்னரும் அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை” என, யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் என்ற இளைஞனை, பொலிஸார் அடித்துக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கின் சாட்சிகள்,...

சட்டவிரோதமாக தனுஷ்கோடி சென்ற இலங்கையர் கைது

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடிக்கு பைபர் படகில் வந்த இலங்கை அகதியை உளவுப்பிரிவு பொலிஸார் புதன்கிழமை கைது செய்துள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. தனுஷ்கோடி கடற்கரையில் கடந்த 16ம் திகதி பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியிருந்தது. இலங்கையை சேர்ந்த இப்படகு இந்தியா வந்தது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், மண்டபம்...

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை: சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டனர். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) அடையாள அணிவகுப்பு நடைபெற்ற போது குறித்த வழக்கின் சாட்சியாக இருக்கும் சிறுவனால் இரண்டு சந்தேக நபர்களும் அடையாளம் காட்டப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த...

தொப்பியை லண்டனுக்கு அனுப்பியவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்ட தொப்பியை விமானத் தபால் மூலம், லண்டனுக்கு அனுப்ப முற்பட்ட குற்றச்சாட்டில் கைதான மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆடிகல, சந்தேகநபர்களை மார்ச் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, இவர்களில் விடுதலைப்...

புதிய மாணவர்களை நிர்வாணமாக்கி கொடூர பகிடிவதை!

பேராதனை பல்கலைக்கழகத்தில் விவசாயபீட புதிய மாணவர்களை பகிடிவதைக்குட்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் 15 பேர் நேற்றுக்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். நேற்றைய தினம் கண்டி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்த போது மார்ச் (02) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இம்மாணவர்கள் நேற்று(20) அதிகாலை 01.00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். பேராதனை –...

சங்கானை பிரதேச செயலகத்தில் முறைகேடு! உண்மையை கூறிய பெண் உத்தியோகத்தர் வைத்தியசாலையில்!!

சங்கானை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளரின் கடுமையான நடமுறை காரணமாக அலுவலகத்தில் மயங்கி வீழ்ந்த பெண் உத்தியோகஸ்தர் ஒருவர் சிசிக்சைக்காக சங்காணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பிரதேச செயலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக குறித்த பெண் உத்தியோகஸ்தர் அரசாங்க அதிபரிடம் உண்மைகளை சொன்னதன் பிரதிபலனாகவே அவருக்கு பிரதேச செயலகத்தில் அவ்வாறான நெருக்கடியான நிலமை ஏற்பட்டுள்ளது....

அபராத தொகையை செலுத்தியவர் மயங்கி விழுந்தார்

டெங்கு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த 7 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரன், நேற்று (20) உத்தரவிட்டார். தாவடிப் பகுதியில் டெங்கு பரவ கூடிய சூழலை வைத்திருந்த 7 பேருக்கு எதிராக, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, திங்கட்கிழமை (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது....

வடமராட்சி கிழக்கு கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அட்டகாசம்!

வடமராட்சி கிழக்கு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய றோலர் படகுகள், கட்டைக்காடு, ஆழியவளை பகுதி மீனவர்களின் வலைகளை அறுத்தெடுத்துச் சென்றுள்ளதாக கட்டைக்காடு மீனவ சங்கத்தினரால், கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் கடற்பரப்பில் போடப்பட்டிருந்த வலைகளே இவ்வாறு அறுத்தெடுத்து செல்லப்பட்டுள்ளதாக கட்டடைக்காடு மீனவ சங்க தலைவர் தெரிவித்தார். வலைகள் அறுத்தெடுத்துச்...

சாரதியை தாக்கிவிட்டு முச்சக்கரவண்டி அபகரிப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி பயணித்த மூவர், தொண்டமானாறு,வளலாய் பகுதியில் வைத்து சாரதியை தாக்கி, முச்சக்கரவண்டியினை அபகரித்துச் சென்றுள்ளதாக,அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பகுதியினை சேர்ந்தவரின் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திய மூவர், தொண்டமானாறு பகுதிக்கு செல்ல வேண்டும் என கூறி வந்துள்ளனர். வளலாய் பகுதியில் முச்சக்கரவண்டி...

பேராதனை பல்கலை மாணவர்கள் 15 பேர் கைது

பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக பேராதனை பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ​ ​ இன்று அதிகாலை 01.00 மணியளவில் குறித்த சந்தேகத்திற்குரிய மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ​ ​ பேராதனை - கலஹா வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து விவசாய பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேருக்கு,...

யாழ்.பல்கலையில் மாணவர்களிடையே மோதல்! 4 பேர் படுகாயம் 6 பேர் கைது!

யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் சிலர், பல்கலைக்கு வெளியில் தங்கி தமது கல்வியை...

வாகனங்களுக்கான அபராதத் தொகையை 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராதத் தொகையை 25,000 முதல் 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கம் தெரிவித்தது. கடந்த வருடத்தின் டிசம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய வாகனங்களுக்கான அபராதத் தொகையை விதிப்பது தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. நிதி, போக்குவரத்து, சட்டம் ஆகிய...

வடக்கில் காவல்துறையினருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ய அஞ்சும் மக்கள்!

வடமாகாண தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் கடந்த ஜனவரி மாதத்தில் காவல்துறையினருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் முகாமைத்துவ உதவியாளர் தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த இரண்டு முறைப்பாடுகளும் காணி தொடர்பான பிரச்சினைகளில் காவல்துறையினர் பக்கச்சார்பாக நடந்துகொண்டமை தொடர்பிலான முறைப்பாடுகள் ஆகும். இதில் ஒரு முறைப்பாடு...

வீதிகளில் நாய்களை விடுபவர்களுக்கு எதிராக அதிரடி சட்டம்

வீதிகளில் நாய்களை விட்டு செல்பவர்கள் மற்றும் வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு எதிராக ரூபாய் 25 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிப்பதற்கு சட்டத்தை உருவாக்கவுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்....

வித்தியா படுகொலை வழக்கு சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பன்னிரன்டு பேரின் விளக்கமறியலை நீடித்து ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். இவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம்...

வாள் தூக்கியவருக்கு சிறை

வாள் கொண்டு ஒருவரை வெட்ட முற்பட்ட ஒருவருக்கு, மூவாயிரம் ரூபாய் அபராதமும் 2 மாத கடுழிய சிறைத்தண்டனையும் விதித்து, யாழ்ப்பாணம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், தீர்ப்பளித்தார். கடந்த வருடம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், குடும்பத்தகராறு காரணமாக, ஒருவரை குறித்த நபர் வாளால் வெட்ட முற்பட்ட போது, பொலிஸார் கைது செய்திருந்தனர். கைதுசெய்யப்பட்ட நபரை, நீதிமன்றத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts