- Sunday
- February 2nd, 2025
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது 12 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலை படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து சந்தேக நபர்களை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொலைசெய்தமை, கொலைக்கு எத்தனித்தமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த படுகொலை வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி...
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கை கடற்படைத் தளபதியிடம் கையளிக்கப்படும் என, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லுத்தினர் கமாண்டர் சமிந்த வலாகுளுகே குறிப்பிட்டுள்ளார். அண்மையில், கச்சத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் தமிழக மீனவர்...
தனியார் துறை ஊழியருக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் 2500 ரூபாவை இதுவரை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழில்திணைக்கள ஆணையாளர் நாயகம் திருமதி சாந்தனி அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த சம்பள அதிகரிப்பு தொகையை சில நிறுவனங்கள் வழங்காதமை தொடர்பாகவே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொழிலாளர் உரிமையை மீறும் பாரிய குற்றமாகும்...
யாழ்குடாநாட்டின் கொம்படி பகுதியில் விமானப்படை விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி அதிகாரி ஒருவர் உட்பட 4 விமனாப்படையினரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் என்ற எதிரியை செவ்வாய்க்கிழமை யாழ் மேல் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சம்பவம் 1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதப்பகுதியில் நடைபெற்றது. விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தின்...
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளி பகுதியில், காதலுடன் சென்ற யுவதியினை கடத்திக் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரைக் குற்றவாளியாக இனங்கண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அவருக்கு 10வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று (06) தீர்ப்பளித்தார். அபராதத் தொகையான 10ஆயிரம் ரூபாயைச் செலுத்த தவறின்...
கிளிநொச்சி, சாந்தபுரம், 8ஆம் வீதி பகுதியில் ராணுவ வீரர் என சந்தேகிக்கப்படும் நபரொருவரால் பெண்ணொருவர் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 56 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சாந்தபுரம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த குறித்த பெண்ணை,...
2006 ம் ஆண்டில் பாடசாலை மாணவர்கள் சிலர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது. 2006ம் ஆண்டு கொழும்பிலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் 11 மாணவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக...
நெடுந்தீவு மற்றும் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களை கைதுசெய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து இரண்டு றோலர் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் கூறினர்.
வேலணை பகுதியில் உள்ள கடைக்குச் சென்று, ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து அலைபேசி மீள் நிரப்பு அட்டையினை வாங்கிவிட்டு, இரண்டாயிரம் ரூபாய் கொடுத்ததாகக்கூறி மிகுதி பணத்தினை தருமாறு வர்த்தகரை அச்சுறுத்திய இருவர், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “வேலணை பகுதியில் உள்ள கடைக்கு, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஆயிரம்...
பகிடிவதை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேருக்கும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி நீதவான் முன்னிலையில் அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட வேளையே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி குறித்த 15 மாணவர்களும் பேராதனை பொலிஸாரால் கைதுசெய்யபட்டனர். பின்னர் அவர்களை இன்று வரை (2ம் திகதி) விளக்கமறியலில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளால் பல்கலைக்கழக மாணவர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைகழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களில் ஒருவர் தனக்கு தெரிந்த பல்கலைகழகம் சாராத வேறு சிலரை தமக்கு சார்பாக அழைத்துவந்துள்ளார். இதன்படி நேற்றையதினம் மாலை குறித்த பல்கலைகழக மாணவன் மது...
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக காரில் நடமாடும் நூதனத் திருடர்கள் வர்த்தக நிலையங்களில் பொருட் கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து பணத்தை அபகரிப்பதாக வர்த்தகர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மேலும் தெரிவிக்கையில், யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக விலை உயர்ந்த காரில் நடமாடும் இரு...
ஊர்காவற்றுறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஏழு மாத கர்ப்பிணி பெண் மீதான படுகொலை வழக்கு விசாரணையில் உண்மையான குற்றவாளி இவரே என ஒருவரை குறித்து அவர் தொடர்பான தகவல்கள் மின்னஞ்சல் மூலம் ஊடகவியலாளர்கள் சிலருக்கு இனந்தெரியாத ஒருவரால் அனுப்பப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம்...
மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட செந்தூரன், தனு போன்றவர்கள் மீண்டும் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றில் யாழ்ப்பாண பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: யாழ்ப்பாணத்தில் பரவலாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் தொடர்புபட்டிருந்த றொக்ஸ் ரீம் அங்கத்தவர்கள் யாழ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட 8 பேர் யாழ் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கடந்த 8...
கண்டி - குண்டசாலை பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் அதே பாடசாலையில் 11, 12 மற்றும் 13ம் தரத்தில் கல்வி பயில்பவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 24ம் திகதி குறித்த மூன்று மாணவர்களும், குண்டசாலை பகுதியிலுள்ள பாடசாலையில் வைத்து கணிஷ்ட பிரிவு மாணவர்கள்...
ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலை சந்தேக நபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார். ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி...
யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள மடத்தடியிலுள்ள சுகாதார நிலையம் ஒன்றுக்கு அருகில் இரு குழுக்களிடையே கடுமையான மோதல் இடம்பெற்றதால் குறித்த பகுதியில் பதற்ற நிலை நிலவியது. குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் யாழ் குற்றத்தடுப்பு காவல் துறை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தின் போது அப்பகுதியில் உள்ள முச்சக்கர வண்டியொன்று சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அந்த...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐவரின் விளக்கமறியலையும், எதிர்வரும் 13ஆம் திகதி வரை நீடிக்க, கிளிநொச்சி நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, இன்று உத்தரவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டு, ஐவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
பளை பிரதேசத்தில் ஒரு தொகை கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்றை சோதனை செய்த போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் காரில் இருந்து 22 கிலோவும் 80 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி...
Loading posts...
All posts loaded
No more posts