- Sunday
- February 2nd, 2025
வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், யாழ்.நகரிலுள்ள பிரபல பாடசாலையை சேர்ந்த 5 மாணவர்கள் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுச் சம்பவம் நேற்றைய தினம் யாழ்.நகரில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,பாடசாலையில் நடைபெற்ற வாய்த் தகாராறு ஒன்றின் நிமித்தம் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரு மாணவ குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த...
கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பிரிவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரின் விசேட வீதிப் பரிசோதனையின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு இ.போ.ச பேருந்தில் கடத்தப்பட்ட கேரளக் கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது....
புன்னாலை கட்டுவான் பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சுமணன் எனும் இளைஞனின் பெயரை , கொள்ளை சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சுன்னாகம் காவல்துறையினர் தாக்கல் செய்த V அறிக்கையில் குறிப்பிடவில்லை என சாட்சியம் அளிக்கப்பட்டு உள்ளது. சுன்னாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சுமணன் எனும் இளைஞன் சித்திரவதை...
வெள்ளவாய, கொடவெஹரகள பகுதியில் வைத்து புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர் உட்பட மூவர் வெள்ளவாய பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறித்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு சென்ற வேளையிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் முல்லை தீவு பகுதியை சேர்ந்தவர் எனவும் ஏனையவர்கள் கொடவெஹரகள பகுதியை சேர்ந்தவர்கள்...
கொழும்பில் உள்ள தாமரைத் தடாக வளாகத்தில், சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்ட முன்னாள் புலி உறுப்பினரின் சகோதரரை, எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில் சுத்திகரிப்பு வேலையைச் செய்துகொண்டு மிகவும் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய முன்னாள் புலி உறுப்பினரின் சகோதரரே இவ்வாறு விளக்கமறியலில்...
வவுனியா நகரத்தில் பாடசாலை மற்றும் அரச நிறுவனங்களுக்கு அண்மையில் ஹெரோய்ன் விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படும் ஒரு ஜோடி உள்ளிட்ட மூவரை, ஹெரோய்னுடன் நேற்று (14) கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். அரச நிறுவனங்கள் பலவற்றுக்கு முன்பாக, டயர் பட்டறை நடத்தும் போர்வையில், நீண்டகாலமாக இவ்வாறு ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டுவந்தமை கண்டறியப்பட்டுள்ளது. ஹெரோய்ன் போதைப்பொருளை விற்பனை...
அச்சுவேலி தம்பாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சிறுவர்கள் நால்வரையும் எதிர்வரும் 21ம் திகதி வரை அச்சுவேலியில் அமைந்துள்ள அரச சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்க யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டார். கடந்த 09ம் திகதி தம்பாலை டச்சு றோட் பகுதியில்...
கணவன், மனைவி மீது கோடாரியால் வெட்டியதால் மனைவி யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. யாழ். கல்வியங்காடு 03 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த செந்தூரன் ஜெயவதனி என்பவரே கோடாரி வெட்டுக்கு இலக்காகியுள்ளார். யாழ். திருநெல்வேலி சந்தியில் உள்ள அழகுபடுத்தல் நிலையத்தில் வைத்து மனைவி...
மாலபே சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று கொழும்பில் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். எவ்வாறாயினும் குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவுடன், லோட்டஸ் வீதிக்கு அருகில் தடையை ஏற்படுத்தியுள்ளனர். அதுமாத்திரமின்றி நீதிமன்ற தடையுத்தரவையும் மாணவர்களிடம் காண்பித்துள்ளனர். எனினும் நீதிமன்ற...
களுத்துறை , அளுத்கம பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.இருவரும் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாணவர்கள் இருவருடனும் நெருங்கிய தொடர்பைப் பேணியதாக கருதப்படும் அழகுக்கலை நிபுணர் மற்றும் அவரிடம் மாணவர்களை அழைத்துச் சென்ற நபரொருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மாணவர்களின்...
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையின் போது தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு திங்கட்கிழமை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின்...
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தேசிய ரூபவாஹினியில் விளம்பரம் செய்து அதற்காக 1,652 இலட்சம் ரூபாவை செலுத்தாமை சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (வியாழக்கிழமை) நாளைமறுதினம் பாரிய ஊழல் மோசடி விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். சுயாதீனத் தொலைக்காட்சி சேவையில் விளம்பரம் செய்து அதற்கு நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் விசாரணை...
ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கு சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 20ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம் றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு சந்தேகநபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையை தொடர்ந்து...
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட 6 ஆவது சந்தேக நபருக்கு சர்வதேச பிடியாணை பிறப்பித்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, இன்று உத்தரவிட்டார். அத்துடன், சந்தேக நபர்கள் ஐவரின் விளக்கமறியலை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிப்பதாகவும் நீதவான் கூறினார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட சந்தேகத்தில்,...
யாழ் நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் நேற்றையதினம் இடம் பெற்ற குழு மோதலில் பொலிஸார் மற்றும் காவலாளி ஆகியோர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.நகரில் உள்ள திரையரங்குக்கு நேற்றைய தினம் 3 பேர் அடங்கிய குழுவினர் திரைப்படம் பார்ப்பதற்கு வந்துள்ளனர். அப்போது திரைப்படம் பார்ப்பதற்கான நுழைவுச்சீட்டுகள் பெறுவதற்கு வந்தவேளை, திரைப்படம் ஆரம்பித்து விட்டதாகவும்...
அதிகாலை வேளை கூரிய ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டிலிருந்தவர்களைத் தாக்கி பாரிய கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்டது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் வசாவிளான் கிழக்கு கன்னியர்மட வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் தம்பதியர்களான தம்பு மகாதேவன் (வயது 65), மகாதேவன் இராஜேஸ்வரி (வயது 61) ஆகிய...
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கணவன் மீது அசிட் வீசிய மனைவியை யாழ்ப்பாணக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். குருநகர் பகுதியை வசிப்பிடமாக கொண்ட இந்த பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து மேற்படி செயலில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறினால் கணவன் மனைவி மீது அசிட் தாக்குதல் நடாத்த முயற்சித்தவேளையில் மனைவி அசிட் போத்தலைப்...
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நாகை அருகே ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினர் இந்த 10 மீனவர்களையும் கைதுசெய்திருந்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களுள் சிங்கள மற்றும் தமிழ் மீனவர்கள்...
பிரான்ஸில் இருந்து இலங்கை திரும்பிய மட்டக்களப்பை சேர்ந்த தந்தையும் மகளும் நேற்று (புதன்கிழமை) மாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு 4, ஆரையம்பதியைச் சேர்ந்த அலையப்போடி தியாகராசா அவரது மகள் தியாகராசா ஜனனி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் மட்டக்களப்பிலிருந்து...
அண்மையில் போலிஸ் துப்பாக்கி சூடு காரணமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை வட கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால் அமைந்துள்ள நீதிமன்றமொன்றுக்கு மாற்றுமாறு அதன் சந்தேக நபர்கள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு சட்ட மா அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களாக நிறுத்தப்பட்டுள்ள ஐந்து போலிஸ் உறுப்பினர்கள் இந்த மனுக்களை...
Loading posts...
All posts loaded
No more posts