- Sunday
- November 24th, 2024
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் இளைய சகோதரர் ரியாத் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நேற்று மாலை பொலிஸார் தெரிவித்தனர். 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது....
பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பதின்ம வயது (17-வயது) மாணவன் கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசாரணைகளின் பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் சந்தேகநபர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கை நெறியைத் தொடரும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவனே...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் மல்லாகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாள்...
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரம் பரப்பியமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, நேற்றையதினம் (05) வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர் நேற்றையதினமே...
ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள வேளையில், பொன்னாலை பற்றைக்காட்டில் கசிப்பு குகை ஒன்று பிரதேச இளைஞர்களும் வட்டுக்கோட்டை பொலிஸாரும் இணைந்து முற்றுகையிட்டுள்ளனர். அங்கு சட்டத்துக்கு புறம்பான கசிப்பு உற்பத்தி முறியடிக்கப்பட்டுள்ளது. கசிப்பு காய்ச்சிய நபர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களால் காய்ச்சப்பட்ட கசிப்பு, எஞ்சிய கோடா மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த முற்றுகை நடவடிக்கை நேற்று (03)...
கொரோனா தொடர்பாக இணையத்தளத்தில் வதந்திகளைப் பரப்பிய பல்கலைக்கழக மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய குறித்த மாணவர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா, செட்டிகுளம் முதிலியார்குளம் பகுதியில் இன்று ஆராதனை நடத்திய 15 இற்கும் மேற்பட்டோர் செட்டிக்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். கொரோனோ வைரஸ் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியவசியத் தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரைத் தவிர ஏனையவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் ஆலயங்களில்...
சைக்கிள் செயின் பிறிவில் பொறுத்தப்பட்ட பொல்லுகளுடன் வன்முறைச் சம்பவம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் மூவரும் வன்முறைச் சம்பவம் ஒன்றுக்காக மானிப்பாயிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை சங்கானை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். “சந்தேக நபர்களிடமிருந்து 6 பொல்லுகள்...
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை ஆவணங்களில் பதிவிடாமலும் தடயப் பொருளாக நீதிமன்றத்தில் ஒப்படைக்காமலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். தடயப்...
பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட மாணவனின் வீட்டுக்குச் சென்ற நால்வர், மாணவன் அங்கு இல்லாத நிலையில் வீட்டிலிருந்த பொருள்களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் நேற்றையதினம்...
கிளிநொச்சியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 இராணுவத்தினர் உள்பட 21 பேரையும் வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கிளிநொச்சி- தரும்புரம், கட்டைக்காடு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்து அதிநவீன ஸ்கனர் கருவிகளைப் பயன்படுத்தி புதையல் தோண்டும் முயற்சி சிறப்பு அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டது....
இலங்கையின் சுதந்திர தினத்தை ஓட்டி 512 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் தீா்மானத்தை ஜனாதிபதி அறிவித்துள்ளதுடன், நாளைய தினம் இவா்கள் விடுதலை செய்யப்படவுள்ளனா். அரசமமைப்பின் 34 வது பிரிவுக்கு அமைவாக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா அவர்களின் பரிந்துரையின் படி ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரங்களுக்கு உட்பட்டு இந்த...
நிலஅபகரிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கதிற்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் கலந்து...
ராணுவச் சிப்பாயைத் தாக்கியவரும் அவரது சகோதரனும் தலைமறைவாகியிருந்த நிலையில் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் சகோதரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரிக்கு அண்மையாகவுள்ள யாரும் வசிக்காத வீடொன்றில் சந்தேகநபர், நண்பர்களுடன் இருந்தவேளை, அந்த வீட்டநேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் ராணுவத்தினர் சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர். வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பகுதியில்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் அடங்கிய இறுவெட்டை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் ஒரு வருடத்தின் பின்னர் சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன், சட்ட மா அதிபரிடம் எழுத்துமூலம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு தருமபுரம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது கணவரை வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. “மனிதராகச் செயற்பட்டால்தான் வாழமுடியும். மனிதப் பிறப்பாக இருந்து கொண்டு மிருகமானால் வாழமுடியாது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான்...
யாழ்ப்பாணம், பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளி யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா என்பவரே இவ்வாறு கழுத்து படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவரது கணவரே இந்தக் கொலையை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த கொலைச் சம்பவம் பண்ணை கடற்கரைப்...
யாழ்ப்பாணம், கொட்டடியில் இருவர் மீது வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற ஆறு பேரில் மூன்று பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் நீதிமன்றின் உத்தரவில் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் கொட்டடி வைரவர் கோவிலடியில் நின்ற இருவர் மீது நேற்று முன்தினம் இரவு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. 3...
தெல்லிப்பளையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டுக்குள் மறைந்திருந்த கொள்ளைச் சந்தேகநபர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மானிப்பாய், கோப்பாய் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். “சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளையிட்ட நகைகளை வவுனியாவில் விற்பனை செய்துள்ளமையை அறிந்து மானிப்பாய்...
பொலிஸ் புலனாய்வாளர் எனக் கூறி கப்பம் வாங்கிய குற்றச்சாட்டில் அளவெட்டியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடைய மற்றொருவர் யாழ்ப்பாணம் சிறையில் மறியலில் இருப்பதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் முன்னாள் போராளிகள், போர்க் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தவர்கள் மற்றும் குற்றச்செயல்களில்...
Loading posts...
All posts loaded
No more posts