சுன்னாகம் இளைஞன் கொலை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு

சுன்னாகம் பொலிஸாரால் கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சுமணன் என்ற இளைஞன், பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொகுப்புரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதிக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஒத்திவைத்தார். வட, கிழக்கு மாகாணங்களில் வியாழக்கிழமை (27) மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால்...

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் இருவர் விடுதலை!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் இருவர், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கின் 10 ஆவது சந்தேகநபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் மற்றும் 12 ஆவது சந்தேகநபரான சுரேஸ்கரன் ஆகிய இருவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து...
Ad Widget

மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்: சந்தேக நபரை தொடர்ந்து விசாரிக்க அனுமதி

பளை பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து சிறுமிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், சந்தேகநரின் விளக்கமறியலை எதிர்வரும் 5ஆம் திகதிவரை நீடிப்பதாகவும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. தனது வீட்டில்...

சுமந்திரன் மீதான கொலை முயற்சி சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஐந்தாம் மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது...

மயக்க மருந்து விசிறி வன்புணர முயற்சி

ஊர்காவற்றுறை பகுதியில் வீட்டில் தனித்திருந்த பெண்ணுக்கு மயக்க மருந்து விசிறி, வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற நபரை, எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான், நேற்று உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை 12.30 மணியளவில் புகுந்த சந்தேக நபர், அங்கு தனித்து இருந்த 18 வயதுடைய...

பெற்றோல் விற்ற இருவருக்கு அபராதம்

போத்தல்களில் பெற்றோல் விற்ற இருவருக்கு மல்லாகம் நீதவான், தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, திங்கட்கிழமை (24) தீர்ப்பளித்தார். பெற்றோலிய தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை முதல், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவானோர் எரிபொருளைப் பெற்றுக் கொண்டனர்....

கிராம சேவகர் மீது மதுபோதைக் கும்பல் தாக்குதல்!! நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது மக்கள் அதிருப்தி!!

தென்மராட்சிப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கொடிகாமம் அல்லாரை J/322 கிராம சேவையாளர் ஒருவர் மதுபோதைக் கும்பலால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி கிராம சேவையாளரைக் கடமை நேரத்தில் அவரைத் தாக்கியவர்கள் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட போதிலும் அவர்களை இதுவரை பொலிஸார் கைது செய்யவில்லை எனத் தெரியவருகின்றது....

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

சாவகச்சேரி குடாரிப்பு பகுதியில் ஒரு தொகை கேரள கஞ்சாவை கடத்த முயன்ற நபரொருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இலங்கை கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குநித்த நபர் 6.265 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கடத்தும் போது கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபரையும் மோட்டார் சைக்கிள் மற்றும் கேரள கஞ்சாவையும் மேலதிக விசாரணைக்காக மருதங்கேணி...

தமிழர்கள் இருவர் கடத்தல்: அநுரவிடம் விசாரிக்க மீண்டும் அனுமதி

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில், வெள்ளை வானில் தமிழர்கள் இருவர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவிடம் விசாரணை மேற்கொள்ள, கொழும்பு நீதவான் நீதிமன்றம் மீண்டும் அனுமதியளித்தது. இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் நேற்று( 18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது....

அண்ணன் மீது தம்பி கொலை முயற்சி

குடும்ப பிரச்சினை கைகலப்பாக மாறியதில் அண்ணணை, தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன், ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஐந்து மாடி குடியிருப்பு, கடற்கரை வீதி, குருநகர் பகுதியினை சேர்ந்த மகிபாலன் நெல்சன் (வயது 38) என்பவர் வயிற்றில் குத்துக் காயங்களுக்குள்ளான...

ஆவா குழு உறுப்பினர்கள் ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஆவா குழு உறுப்பினர்கள் ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி அல்லாரை, மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலலேயே இந்த ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 19 வயதிற்கும் 21 வயதிற்கும் உட்பட்டவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன்...

கனடாவிலிருந்து நாடுகடத்தப்படுவாரா இலங்கை பிரஜை?

கனடாவில் வாழும் ஸ்ரீலங்கா பிரஜையை நாடு கடத்துவதற்கான உத்தரவை அந்த நாட்டு குடிவரவு மற்றும் அகதிகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த நபர் தனது மனைவியை கொலை செய்தமை தொடர்பிலான குற்றம் சாட்டப்பட்டமையை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற ஸ்ரீலங்கா பிரஜையே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த...

தகவல் வழங்கியும் பொலிஸார் வரவில்லை : மக்கள் விசனம்

நீர்வேலி, மாசியன் சந்தி பகுதியில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தும் பொலிஸார் அசட்டையுடன் நடந்து கொண்டதாக, பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நவக்கிரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) நிகழ்வு ஒன்றுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவரை, பொல்லால் தாக்கி விட்டு அவரது மகள் அணிந்திருந்த 1...

பகடிவதை செய்த மாணவர்களுக்கு மாகாபொல புலமைப் பரிசில், விடுதி வசதிகள் இல்லை!!

பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் 18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வகுப்புத்தடை, ஏப்ரல் 7ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாணவர்களை கடந்த 6ஆம் திகதியன்று பகடிவதைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், 18 மாணவிகள் மற்றும் 10 மாணவர்கள்,...

யாழ். பல்கலைக்கழக மாணவர் படுகொலை; வழக்கை கொழும்புக்கு மாற்ற முயற்சி

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மரணமானது குறித்தான வழக்கில் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும், ஐந்து பொலிஸாரும், தமது வழக்குகளை இடமாற்றம் செய்யுமாறு கோரி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சந்தேகநபர்கள் ஐவரும் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள்...

இரு நாட்களாக மைதானத்தில் தங்கியிருந்த மாணவன், மாணவி கைது

வீடுகளிலிருந்து வெளியேறி, இரண்டு நாட்களாக விளையாட்டு மைதானமொன்றில் தங்கியிருந்த, சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியொருவரையும் மாணவரொருவரையும், கட்டுநாயக்கா பொலிஸார் கைது செய்துள்ளனர். 15 வயதுடைய இவ்விரு மாணவர்கள் இருவரும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், பாடசாலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் இவ்விருவரும், நீர்க்கொழும்பு, கடொல்கெலே பொது மைதானத்தில் தங்கியிருந்த நிலையிலேயே, கைது செய்யப்பட்டுள்ளனர்....

வர்த்தகர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது!

விஸ்வமடு கடை வர்த்தகர் ஒருவர் கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் நிதி மோசடிக் குற்றச்சாட்டிலையே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், நேற்று இரவு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்...

நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை

நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் குற்றவாளிக்கு, மரண தண்டனை வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நெடுந்தீவு சிறுமி குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது. தீர்ப்பின் பிரகாரம், பாலியல் குற்றசாட்டில் ஈடுபட்டமைக்காக...

மனச்சாட்சிக்கு தெரிந்து குற்றத்தை செய்யவில்லை: நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் எதிரி வாக்குமூலம்

என் மனசாட்சிக்கு தெரிந்து நான் இந்த குற்றத்தை செய்யவில்லை என நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் எதிரி யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சி கூண்டில் நின்று வாக்கு மூலம் அளித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி சந்தைக்கு சென்ற குறித்த சிறுமி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால்...

வெளியில் வந்தவுடன் வெட்டுவேன்! : ஊடகவியலாளர்களை மிரட்டி கொலை சந்தேக நபர்!!

நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர், யாழ். மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம், நேற்று (06) இடம்பெற்றுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம்...
Loading posts...

All posts loaded

No more posts