- Sunday
- February 2nd, 2025
கிளிநொச்சி நகருக்கு அப்பால் உள்ள கிராமப் பகுதி ஒன்றில் இயங்கிவந்த விபச்சார நிலையம் பொலிசாரால் இன்று மதியம் முற்றுகை இடப்பட்டுள்ளது.இதன்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் விபச்சார நிலையம் ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்ன அவர்களுக்கு கிளிநொச்சி...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கினை கொழும்பிற்கு மாற்றுமாறு சந்தேகநபர்கள் கோரியுள்ள நிலையில், அதற்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக மாணவர்கள் தரப்பு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த மாணவர்கள் படுகொலை வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அது தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது, ஐந்து பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் படுகாயமடைந்துள்ளார். இன்று (16) மதியம் ஒரு மணியளவில் கனகபுரம் பழைய சந்தைக்கருக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும், உதயநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு பலியானதுடன், அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
ஊர்காவற்றுறை கர்ப்பிணி படுகொலை வழக்கு தொடர்பாக, இருவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஆர்.சபேசன் முன்னிலையில் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு, வெள்ளிக்கிழமை (12) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஆர்.சபேசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேக நபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். கடந்த மாதம் 26 ஆம் திகதி,...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திர வழக்கேடுகள் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வழக்கேடுகளை இரும்பு பெட்டகத்தில் வைத்து பாதுகாக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், பதிவாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதேவேளை, மேற்படி வழக்கை கொழும்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில்...
புங்குடுதீவு வித்தியா பாலியல் வன்புணர்வு கொலை வழக்கு விசாரணையானது யாழ்.மேல் நீதிமன்றில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கானது ரயலட்பார் முறையில் யாழ்.மேல் நீதிமன்றிலேயே இடம்பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி புங்குடுதீவு பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நேற்று மேற்கொண்டிருந்தனர்.
இதன்படி புங்குடுதீவு கந்தசாமி கோவிலடியில்...
ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த 17 இளைஞர்கள் பொலிஸாரால் சில மணி நேரம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு அதிரடிப் படையினர் ஏழாழைப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 17 பேரை பிடித்துச் சென்றனர். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில்...
நாகவிகாரை ஓய்வு விடுதியின் கழிவுகள் நீர் வடிகாலில் கலப்பதனைக் கண்ட வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அதிர்ச்சி அடைந்ததோடு சட்டத்தை அமுல் செய்ய வேண்டிய மாநகரசபையினரையும் கடிந்துகொண்டார். யாழ்ப்பாணம் ஆரியகுளம் மற்றும் குளத்திலிருந்து கடலிற்குச் செல்லும் வடிகால் என்பன ஆளுநரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் , படையினர் , மாநகர சபையினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன்...
சாவகச்சேரி – கனகம்புளியடி சந்தியில் அமைந்துள்ள உணவு விடுதியினுள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்ற பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த அறுவர் கொண்ட குழுவினரே இவர்கள் மீது வாள்களால் வெட்டிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுகிறது. சம்பவத்தில் உணவகத்தின்...
தனது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து அதனை கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்து வைத்திருந்த நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிபதி ரி.கருணாகரன் நேற்று வியாழக்கிழமை உத்தரவு இட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது , திருட்டு குற்றம் ஒன்று தொடர்பில் சுன்னாகம் பொலிசாரினால் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும்...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள், யாழ். மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்படின் குறித்த வழக்கை தொடர் விசாரணைகள் மூலம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று (05) தெரிவித்தார். இதேவேளை, குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பகிர்வு பத்திரம், எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் யாழ். மேல் நீதிமன்றில்...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.ரியால் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் பத்து பேரும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து சந்தேக நபர்கள் பத்து பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்...
சுன்னாக பொலிஸாரினால் சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞர் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்தமை தொடர்பான வழக்கில் அப்போதைய சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார உள்ளிட்ட 6 பொலிஸாரை குற்றவாளியாக கண்ட யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீரப்பளித்துள்ளார். அதேவேளை குறித்த வழக்கின் 3 ஆவது...
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலி பகுதியில் வியாபார நிலையமொன்றின் மீது நடத்தப்பட்ட வாள் வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் இரவு மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலி சிந்தாமணி பகுதியில் உள்ள வியாபார நிலையமொன்றின்...
காங்கேசன்துறையில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டவர்களை மிரிஹான முகாமுக்கு மாற்றுமாறு நிதிமன்றம் உத்தரவு
காங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து மீட்கப்பட்ட 32 மியன்மார் நாட்டவர்களை மிரிஹான தடுப்பு முகாமுக்கு மாற்றுமாறு யாழ்.மல்லாகம் நீதிவான் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், 32 பேரில் 30 பேர் தவிர்ந்த ஒரு படகு ஓட்டிகளான இரு இந்தியர்களையும் சட்டமா அதிபரின் ஒப்புதல் பெறும்வரையில் தடுத்து வைக்கும் படியும் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்.காங்கேசன்துறையிலிருந்து 12 கடல்மைல்...
“புத்தூர், கிழக்கு பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், 18½ பவுண் நகைகளை திருடி சென்றுள்ளதாக நேற்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது” என, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் அனைவரும் தூக்கத்திலிருந்த நேரம் உள்ளே சென்ற திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 18½ பவுண் தங்க நகையை அபகரித்துச் சென்றுள்ளனர். திருடப்பட்ட நகையின் பெறுமதி 7 இலட்சத்து 20...
திருட்டு நகைகளில் பங்கு பெற்ற யாழ். பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் , நீதிவான் ஒருவருக்கும் பங்கு கேட்டமையால் , பங்கு பிரிப்பில் தகராறு ஏற்பட்டு, காவல்துறையினரிடமே அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. அது தொடர்பில் தற்போது பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அது தொடர்பிலான தீவிர விசாரணைகளில்...
வயிற்றில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற்ற சத்திர சிகிச்சை மேற்கொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் பத்து நாட்களின் பின் உடல் நலக்குறைவு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டிருந்த போது சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்.சண்டிலிப்பாய் மடத்தடியைச் சேர்ந்த மகேஸ்வரன் றெஜிந்தா (வயது 41) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார். கடந்த 10 நாட்களுக்கு முன் தனியார்...
யாழில் சில நாட்கள் கட்டுப்பாட்டில் இருந்த வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரினால் வாள்வெட்டிற்கு இலக்கான சம்பவமொன்று மானிப்பாயில் இடம்பெற்றுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், வாள்வெட்டில் படுகாயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாள்வெட்டிற்கு இலக்கானவர் மானிப்பாய் கூழாவடி பகுதியைச் சேர்ந்த...
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை தொடர்பில், நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கு குற்றவாளிக்கு தகவல்கள் தெரியுமா ? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னேடுக்கப்படவுள்ளது. ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது....
Loading posts...
All posts loaded
No more posts