- Saturday
- February 1st, 2025
யாழில் இடம்பெற்று வந்த பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் மூவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் மற்றும் யாழ். நகர்பகுதியைச் சேர்ந்த தேவா, டானியல், சன்னா ஆகிய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதங்களில் யாழில் நடைபெற்ற மிகப்பெரிய கொலை, கொள்ளை மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர்கள் மூவரும் பொலிஸாரினால்...
யாழ்ப்பாணம், இராசவீதி கோப்பாய் பகுதியில், திருமண வீட்டில் இருந்து 9 பவுண் தங்க நகைகள் ஞாயிற்றுக்கிழமை திருட்டு போன சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட நகையின் பெறுமதி 4 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளததக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோப்பாய் பகுதியில் உள்ள வீட்டில், சனிக்கிழமையன்று திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளதுடன், திருமண...
திருகோணமலையில் நடைபெற்ற வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தின்போது நீதிமன்றக் கட்டளையைக் கிழித்து எறிந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. தடுப்பிலுள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் சார்பில், நேற்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய எம்.ஏ.சுமந்திரன், இவ்வழக்குத் தொடர்பில் தெரிவிக்கையில், “நீதிமன்றுக்கு வெளியில் நடைபெற்ற சம்பவத்தைக் கேள்விக்குட்படுத்தும் நியாயாதிக்கம், நீதவான் நீதிமன்றுக்கு இல்லை. இதனடிப்படையில், கைதுசெய்யப்பட்ட...
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டு பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கினை விசாரணை செய்யவுள்ள தமிழ்மொழி பேசும் மூன்று நீதிபதிகள் அடங்கிய ரயலட்பார் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை நேற்று நடாத்தியுள்ளது.
இதன் முதல் அமைர்வின் போது இந்த வழக்கின் முதல் ஒன்பது எதிரிகளையும் எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றில்...
புத்தூர் மேற்கில் அமைந்துள்ள மயானம் தொடர்பிலான பிரச்சனை பொலிசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் உச்சத்தை அடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பெரும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மாயனத்தை அகற்ற கோரி மாயானத்தை சூழவுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் அண்மைக் காலமாக போராட்டங்களை நடாத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அது தொடர்பில் மல்லாகம் நீதிவான்...
திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்களை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளதாகவும், அவர்களை கட்டி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டி வைக்கப்பட்ட இளைஞர்களை பொலிஸார் மீட்டதுடன் அவர்களை கைது செய்துள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கினை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ட்ரயல் அட் பார் நீதிபதிகள் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி படுகொலை வழக்கினை ட்ரயல் அட் பார் முறையில் நடத்துவதற்கு பிரதம நீதியரசர் பிரசாத் டெப் பரிந்துரை வழங்கியிருந்தமைக்கு அமைவாகவே இவ்வழக்கு விசாரணை குறித்துக்...
ஊர்காவற்துறை பாலக்காட்டு சந்தி பகுதியில் நடைபெற்ற விபத்து சம்பவத்தினை அடுத்து வன்முறைகளில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் மெலிஞ்சி முனை பகுதியை சேர்ந்த பெண் உட்பட 17 பேர் இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஊர்காவற்துறை பாலக்காட்டு சந்தியில் கடந்த வாரம் தனியார் பேருந்து ஒன்றும் துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் மெலிஞ்சிமுனை...
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணை, எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி முதல், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள் அடங்கிய 'ட்ரயல் அட்பார்' முறையில் இடம்பெறவுள்ளது. குறித்த மாணவி படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள், நீதிவான் நீதிமன்றத்தால் முடிவுறுத்தப்பட்டு, சட்டமா அதிபரால், ஒன்பது சந்தேகநபர்களுக்கும் எதிரான 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக விசேட குற்றப்புலனாய்வு துறையினரால் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை நேற்று(புதன்கிழமை) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட வேளை நீதவான் எம்.கணேசராஜா எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிட்டார். சந்தேகநபரை முன்னிலைப்படுத்தி விசேட குற்றப்புலனாய்வு துறை...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கடற்படையுடனும் இராணுவத்துடனும் தொடர்புடையவர்கள் என சுட்டிக்காட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், வித்தியாவின் கொலையில் கடற்படையினருக்கு பெரும் பங்கு உள்ளதென குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே குறித்த வழக்கை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வில், சிறிதரன்...
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டினபேரில் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையில் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி இடம்பெற்ற வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்பாட்டத்தின்போது நீதிமன்ற உத்தரவை கிழித்து காலில் போட்டு மிதித்து நீதிமன்றத்தை அவமதித்தாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, குறித்த நால்வரும் நேற்றய...
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கினை திசை மாற்றும் முயற்சிகள் இடம்பெறுகின்றனவா எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக மன்றில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்துள்ளார். கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கு நேற்ற திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.ரியால் முன்னிலையில் இடம்பெற்றது. அதன் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான விசேட நீதிபதிகள் பிரதம நீதியரசர் பிரியசாத் டிப்பினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல்...
வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் நேற்று (22) மாலை 5.30 மணியளவில் கேரள கஞ்சா வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான மதவாச்சி பஸ்ஸில் பயணித்த இராணுவ வீரரின் கைவசமிருந்த 50 கிராம் 200 மில்லிகிராம் கேரள கஞ்சாவினை வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்....
கிளிநொச்சி - கல்லாறு காட்டுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட 12 பேரை தருமபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நீண்ட காலமாக சட்ட விரோதமாக நடைபெற்று வரும் இம் மணல் அகழ்வு மற்றும் வியாபாரம் பற்றி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரியான மகேஸ் வெலிகண்னவுக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...
முகமாலைப் பகுதியில் பொலிஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்பான பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் மூலமாக தாக்குதல் நடத்திய நபர்களின் தடயப் பொருட்கள் சில கிடைத்துள்ளதுடன்...
வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த 8 பேரில் மூவருக்கு 3 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் 5 பேருக்கு ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், மடத்தடியில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தையடுத்து 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப் பட்டனர். அந்த கும்பலுக்கு டில்லு...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்குடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்களை இன்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேற்படி வழக்கின் விசாரணைகள் கொழும்பிற்கு மாற்றப்படுவதற்கு...
சிறுப்பிட்டி ,மத்தி சிறுப்பிட்டி பகுதியில் 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவிசரஸ்வதி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஓய்வு பெற்ற அத்தியார் இந்து கல்லூரியின் விவசாய பாட ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இரவு 12 மணிக்கும் அதிகாலை 2 மணிக்கும் இடையில் ஓடு வழியாக உள்நுழைந்த திருடர்களினால் தலையில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading posts...
All posts loaded
No more posts