- Saturday
- February 1st, 2025
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு பொலிஸார் வழங்கிய தகவலில் சில உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதென சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தாம் இந்த விடயத்தை நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி...
வவுனியாவில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் க.பொ.த உயர்தர மாணவர்கள் க.பொ.த சாதாரண தர மாணவர்கள் நேற்று இரவு 7.30 மணியளவில் வைரவப்புளிங்குளம் தனியார் கல்வி நிலையத்தில் இரு குழுவாக மோதிக்கொண்டதில் இரு மாணவர்கள் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த இரண்டு தினங்களாக குறித்த பாடசாலையில்...
கிளிநொச்சியில் கடந்த 17ம் திகதி விபத்துக்குள்ளான சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய நபருடையது என சந்தேகிக்கப்படும் மோட்டார் வாகனம் முழங்காவில் பொலிஸாரால் கைபற்றப்பட்டுள்ளது. அத்துடன் வாகனத்தின் சாரதியையும்கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முழங்காவில் நாகபடுவான் பகுதியை சேர்ந்த அ.அபினேஸ் என்ற11 வயது சிறுவன் முழங்காவில் தேவாலய திருவிழாவை...
இந்தியாவின் பவானிசாகர் அருகே, தகராறில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். பவானிசாகர் பூங்கா அருகே, மதுக்கடை ஒன்று உள்ளது. பவானிசாகர் அடுத்த காராச்சிக்கொரை பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சந்திரமோகன் என்பவர், அந்த மதுக்கடை அருகேயுள்ள பெட்டிக்கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது, அங்கு குடி போதையில் இருந்த இரு இளைஞர்கள்...
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்று முன்னர் பொலிஸ் புலானாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகடை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் மீளவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தற்போது தேரரை புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
யாழில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கணவன் மனைவி உட்பட நால்வர் கோப்பாய் பொலிசாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். இருபாலை பகுதியில் கடந்த 15ஆம் திகதி இரவு வீடு புகுந்த இருவர் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். அது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கோப்பாய்...
சிறுவனாக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலை தொடர்பில், அச்சிறுவனுக்குத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்து, சரியான தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரும்படி, மேன்முறையீட்டு நீதிமன்றம் பணித்துள்ளது. சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகத்துக்கே, மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு, திங்கட்கிழமை (12) பணித்துள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால், தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புத் தொடர்பான, மேன்முறையீட்டு மனுவைப் பரிசீலனைக்கு உட்படுத்தியபோதே,...
ஊர்காவற்றுறையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் அடையாள அணிவகுப்பின் போது, தம்மை அடையாளம் காட்டாதிருக்க, சந்தேகநபர்கள், சாட்சியாளரிடம் பேரம் பேசியமை தொடர்பில், விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கின் கண்கண்ட சாட்சியமாக உள்ள வாய் பேச முடியாத சிறுவன் தம்மை அடையாளம்...
மீசாலை - புத்தூர் பிரதான வீதியில், கனகம்புளியடி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர், அதிகாலையில் வீதியை கடக்க முற்பட்ட போது வாகனம் அவரை மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளது. அப்பகுதியில் உள்ள பால் சபையில் காவலாளியாகக் கடமையாற்றும் சரசாலை வடக்கைச் சேர்ந்த வி.சிவசுந்தரம் (வயது 65) என்பவரே இவ்வாறு...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில், ட்ரயல் அட் பார் முறையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில், நேற்றுத் திங்கட்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசி மகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் முன்னிலையே விசாரணைக்கு...
வித்தியா கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபா்களுக்கும் எதிராக 41 குற்றச்சாட்டுக்கள் சட்டமா அதிபா் திணைக்களத்தினால் நீதிமனறத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட் பார் தீர்ப்பாய முறையில் நேற்று யாழ் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கமைய வவுனியா மேல்...
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தின் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று (12) திங்கட்கிழமை அழைக்கப்பட்டது. வழக்குத் தொடுநர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் எஸ்.குமாரரத்தினம் தீர்பாயத்தில் முன்னிலையாகி 9 சந்தேக நபர்களுக்கும் எதிரான குற்றப் பத்திரிகையை தீர்பாயத்தில்...
யாழ்ப்பாணம் தொண்டமனாறு கடற்பரப்பில் வைத்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை காங்கேசன்துறை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் இக் கடத்தல் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படையினர் கடற்பரப்பிலும் கடற்கரையை அண்டிய பகுதிகளிலும் வழமையான ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது தொண்டமனாறு கடற்கரையை அண்டிய பகுதியில்...
காங்கேசன்துறை சீமெந்து உற்பத்திசாலை இயந்திர சாதனங்கள் பழைய இரும்பாக விற்கப்பட்டமை குறித்து முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. பாரிய நிதிமோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணைகளுக்காக இன்றைய தினம் ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலயாகுமாறு தயா ரட்நாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள்...
ஊர்காவற்துறையில் பாடசாலை மாணவர்களை தகாத உறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 5 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள், ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்துறையிலுள்ள பாடசாலை ஒன்றில் 8ஆம் தரத்தில் கல்விகற்கும் மாணவர்கள் மூவரை 8 பேர் கொண்ட குழுவினர் ஆள்நடமாட்டம் இல்லாத...
பளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவரை அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சனிக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர். கடந்த மாதம் பளை பகுதியில் பொலிஸாரின் வாகனத்தின் மீது...
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகஸ்த்தர் உரிமம் தருகிறோம் என கூறி பலரிடம் பணத்தை மோசடி செய்தவர்கள் நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். நீர் பாதுகாப்பு என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் சார்ந்தவர்கள் தமது தண்ணீரை யாழ்.மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாக கூறி...
தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இளைஞர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொலைப்பழி சுமத்தி கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்...
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆராச்சிலாகே தர்மகீர்த்தி என்ற குடும்பத் தலைவர் எரியூட்டப்பட்ட சம்பவத்துடன்...
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளை கைதுசெய்து மன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்துமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார். நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு...
Loading posts...
All posts loaded
No more posts