- Saturday
- February 1st, 2025
பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில், மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த, ஆவா குழுவைச் சேர்ந்த இருவரை, நேற்று (10) கைது செய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும், கொக்குவில் பிறவுண் வீதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான சந்தேக நபர்களிடம் இருந்து, வாள்கள் இரண்டு, மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மானிப்பாய்...
யாழ். மல்லாகம் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டு, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் தென்மராட்சி வரணிப் பகுதியில் வானிலிருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார். மல்லாகம் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயதான குறித்த மாணவி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பாடசாலைக்கு செல்லும் வழியில் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். பின்னர், கடத்தப்பட்ட வானிலிருந்து தள்ளிவிடப்பட்ட மாணவி, பொதுமக்களால் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில்...
யாழ். பருத்தித்துறை துன்னாலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இருவரையும், எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பருத்தித்துறை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் நேற்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான்...
வடமராட்சி கிழக்கு பகுதியில் லொறியின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் காடு பிரதேசத்தில் பொலிஸார் உத்தரவை மீறி சென்ற லொறியின் மீது நேற்று பொலிஸார் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 24 வயதுடைய ஒருவர் பலியானார். http://www.e-jaffna.com/archives/84168
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் இருந்து 6 கிலோ கஞ்சா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மீட்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்.கச்சேரிப் பகுதியில் குறித்த பேருந்தினை மறித்துச் சோதனையிட்டபோதே மேற்படி கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பேருந்தில் பயணித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் அதிகாரிகளின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் நேற்று (வியாழக்கிழமை) யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போதே மேற்படி...
கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையரிடம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர், கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் நேற்று (வியாழக்கிழமை) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து...
ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சக பொலிஸ் அதிகாரியின் 1 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான கைக்கடிகாரத்தை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் பரிசோதகர், வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணைக்காக யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்க நேற்று...
வித்தியாவின் உயிரிழப்பு மூன்று வழிகளில் நிகழ்ந்திருக்கலாம் என யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி நீதாய தீர்ப்பாயத்தில் ஆஜராகி சாட்சியமளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டுவன்புணர்வு படுகொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளை கொண்ட நீதாய தீர்ப்பாயத்தில் கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் நேற்றய தினம் (05.07.2017) ஆம் திகதி வரை...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு, நீதாய விளக்கம் முன்பான (ட்ரயல் அட் பார்) ஐந்தாம் நாள் சாட்சிப் பதிவுகள், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04), யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில், மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது....
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான மரபணு அறிக்கை, யாழ். மேல் நீதிமன்ற சிறப்பு அமர்வில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நடைபெற்று வரும் குறித்த சாட்சியப் பதிவின் நான்காவது நாளான நேற்றைய தினம், மொறட்டுவ பல்கலைக்கழக கணினி விஞ்ஞான பீடத்தால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மரபணு அறிக்கை உட்பட வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் யாவும்...
மட்டக்களப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு இரு தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென உச்ச நீதமன்றம் நேற்று (திங்கட்கிழமை) தீர்ப்பளித்துள்ளது. அத்தோடு, பாதிக்கப்பட்ட தரப்பிற்கு அரசாங்கம் தலா பத்து இலட்சம் ரூபாவை நட்டஈடாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி மட்டக்களப்பு...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான விசாரணையில், 13 வயதான சிறுவன் ஒருவன் சாட்சியமளித்துள்ளான். வித்தியா படுகொலை தொடர்பான சாட்சியப்பதிவு, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு சட்ட உதவி வழங்குவதற்கு தயாராகவிருப்பதாக இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதானி ஃபைன்ஸ் வோகர் நெதர்கூன் தெரிவித்துள்ளார். வித்தியா கொலை வழக்கு தற்போது ட்ரயல் அட் பார் முறைக்கு மாற்றப்பட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆதார வாக்குமூலங்களுடன் யாழ். மேல் நீதிமன்றத்தில்...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் இரண்டாம் நாள் சாட்சி பதிவுகள், நேற்றய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் ” ரயலட் பார் முறைமையில் நடைபெற்றது. அதன் போது...
போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் தண்டப்பணம் செலுத்துவதற்கான கால எல்லையை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. தற்போது முன்னெடுக்கப்படும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி , தண்டப்பண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கு தினத்தில் இருந்து மேலும் ஒரு வார காலத்திற்குள் தண்டப்பணத்தை செலுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது....
பல்கேரியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த இலங்கை பிரஜைகள் 32 பேர், அந்நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டனர். அவர்கள், விசேட விமானத்தின் மூலமாக அவர்கள், செவ்வாய்க்கிழமை இரவு, நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் (சி.ஐ.டி) ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாக கூறியே, அவர்களை மனித கடத்தல்காரர்கள்...
சிறைச்சாலையில் வைத்து கைதிகள் தாககப்பட்டதை கண்டித்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றசட்டத்தரணிகள் நேற்று நண்பகலிற்கு பின்னர் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களும் அநுராதபுரம் சிறைச்சாலையில் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் இந்த பகிஸ்கரிப்பை மேற்கொண்டிருந்ததுடன் நீதியமைச்சருக்கு மகஜர்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பில், அரசு தரப்பு சாட்சி இன்று (வியாழக்கிழமை) மன்றில் சாட்சியமளிக்கவுள்ளார். வழக்கின் 11ஆவது சந்தேகநபரான உதயசூரியன் சுரேஸ்கரன் அரசு தரப்பு சாட்சியாக மாறியுள்ள நிலையில், இன்றைய தினம் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் இவர் யாழ். மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படவுள்ளார். குறித்த சந்தேகநபருக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் நிபந்தனைகளுடன் கூடிய...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையானது, சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டு, பல கோடி ரூபாய் கைமாற்றப்பட்டு இடம்பெற்ற ஒரு சதியென்றும், அதற்கு வித்தியா பலிக்கடா ஆகியுள்ளார் என்றும் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா சாட்சியமளித்துள்ளார். வித்தியா கொலை வழக்கின் சாட்சியப்பதிவு யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று...
Loading posts...
All posts loaded
No more posts