- Saturday
- February 1st, 2025
இளம் பெண்ணை மிரட்டி இரண்டு இலட்சம் ரூபாய் கப்பமாக பெற்ற இளைஞரை கைது செய்யுமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீ நிதி நற்தசேகரன் நேற்று (20) உத்தரவிட்டார். காதலித்த போது பெற்றுக்கொண்ட புகைப்படங்களை உருமாற்றி ஆபாசப் படங்களாக இணையதளத்தில் வெளியிடப் போவதாகக் கூறி, தன்னிடம் 2 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை பெற்றுக்கொண்டதாக, பெண்ணொருவர்...
யாழ். ஊர்காவற்துறை மாணவி வித்யா கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார். இதன்படி, லலித் ஜயசிங்கவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியில் கடமையாற்றுவதற்கான தடை உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை)...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைச் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தினுள் செல்லும் காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கு முதன்முறையாக நேற்று (வியாழக்கிழமை) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ட்ரயல் அட் பார் முறையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய குறித்த சாட்சியப்பதிவு இடம்பெற்று வருகின்றது. வழக்கின் விசாரணைகள் இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ள நிலையில்,...
வல்வெட்டித்துறை இமையாணன் பகுதியில், நள்ளிரவு வீடு புகுந்து, 16 வயதுடைய மாணவியை கடத்த முற்பட்ட 5 இளைஞர்களை, அப்பகுதி மக்கள் பிடித்து, வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வல்வெட்டித்துறை இமையாணன் பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து, 16 வயதுடைய மாணவியை 5 இளைஞர்கள் இணைந்து கடத்த முற்பட்டுள்ளனர். இதன்போது, மாணவியின் தாயார் கூக்குரல் இட்டதால் தாயாரை அவ்விளைஞர்கள்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு அவர்களை படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸாரும் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவுக்கு, எதிர் ஆட்சேபனையை தெரிவிப்பதற்கு மற்றுமொரு திகதி குறிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மேன்முறையீட்டு மனுவை, பரிசீலனைக்கு எடுத்துகொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்த மனுவுக்கு எதிர் ஆட்சேபனையை தெரிவிப்பதற்கு,...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைவழக்கின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சுவிஸ்குமாரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தவோ, நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கோ உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென யாழ். பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான ரஞ்சித் பாலசூரிய குறிப்பிட்டுள்ளார். வித்தியா கொலை வழக்கின் இரண்டாம் கட்ட சாட்சியப்பதிவின் இரண்டாம் நாளான...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் தப்பித்துச் செல்ல உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜன் தலைமறைவாக உள்ளதாக, ஊர்காவற்துறை நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீகஜனை கைதுசெய்ய முயற்சித்தபோது, அவர் தலைமறைவாக உள்ளமை தெரியவந்துள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் தெரிவித்த குற்றப்புலனாய்வு பிரிவினர், அவர்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார், யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட விதம் தொடர்பில் நேற்று (18) சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் Trial at Bar விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஆரம்பமானது. மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன்,...
வாள்வெட்டுக்கு இலக்காகிய தபால் உத்தியோகத்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலை அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு உடையார்கட்டைச் சேர்ந்த குணபாலன் வயது 50 என்பவரே இவ்வாறு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் குறித்த உத்தியோகத்தரின் வீட்டிற்குள் நுளைந்த மர்ம நபர் ஒருவர் அவருடன் உரையாடிக்கொண்டிருந்த சமயம்...
நேரியகுளம், மாங்குளம் பகுதியில் குடும்பத்தினர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் மாங்குளத்தை சேர்ந்த 68 வயதுடைய இஸ்மாயில் சம்சுதீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இரவு 8 மணியளவில் நேரியகுளம் மாங்குளம் பகுதியில் உள்ள சம்சுதீன் என்பவரது வீட்டில் உறவினர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது....
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்கவை, இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம் தொடர்பில், சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார், பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றமை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, வட மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா...
இந்திய மத்திய குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் பெங்களூர் நகரில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளடங்குவதாகவும், குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 144 போலியான கடன் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் மூவரும் இந்தியாவின் பல இடங்களில் கடனட்டை மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் இவர்கள்...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமாருக்கு, தப்பிச் செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பிரிவு பேராசிரியர் தமிழ்மாறனின் கோரிக்கைக்கமைய பிரதான சந்தேகநபரை, லலித் ஜயசிங்க விடுவித்ததாக அவர் மீது...
ஈச்சமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் நால்வர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவமானது ஆவா குழுவுடன் தொடர்புடைய சந்தேகநபர்களினாலேயே முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை குளத்தடிப்பகுதியில் உள்ள யாழ்.மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளரது வீட்டிற்குள்ளும், அருகிலிருந்த மற்றுமொரு வீட்டினுள்ளும் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில்...
மணற்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினால், இளைஞனொருவன் பலியான சம்பவம் தொடர்பில், அறிக்கையிடுவதற்கு, அந்த கன்டர் ரக வாகனத்தின் சாரதியாகப் பணியாற்றியவரோ அல்லது அந்தவாகனத்தில் பயணித்த நபர்களில் யாரேனும் ஒருவரோ, செவ்வாய்க்கிழமை வரையிலும் முன்வரவில்லையென, பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது. பருத்தித்துறை, மணற்காட்டுப் பகுதியில், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த கன்டர்...
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரை விடுவித்த குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு குற்றச்சாட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நேற்று (புதன்கிழமை) இக்குற்றச்சாட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் அது குறித்து பதிலளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு...
கச்சதீவு பகுதியை அண்மித்த நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஏழு இந்திய மீனவர்களுடன் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடற்படையினரால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் யாழ். கடற்தொழில் நீரியல்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் வரும் 26 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு, கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த, சந்தேக நபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குரிய இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பியொன்றை, இலண்டனுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 15 மாதச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த, இராணுவத்தின் முன்னாள் வீரர் உள்ளிட்ட மூவரை, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், இன்று (12) விடுவித்தது. இது தொடர்பான வழக்கு, கொழும்பு மேலதிக...
கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலரிற்கு மாவா என்கின்ற போதை வஸ்தை விற்பனை செய்த சந்தேகத்தில் ஒருவர் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் காவல்துறை அதிபர் மகேஷ் வெளிக்கண்ணவின் விசேட குழுவினரால் நேற்று திங்கள் இரவு இரணைமடுப் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப் பட்டுள்ளார் இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த நபர் பாடசாலை மாணவர்களுக்கு குறித்த...
Loading posts...
All posts loaded
No more posts