சிறுமி மீதான துஷ்பிரயோகம்: எதிரிக்கு 27 வருட கடூழிய சிறைத்தண்டனை

வவுனியா போகஸ்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக, மதவாச்சி மாமா என அழைக்கப்படும் முத்துபண்டாகே செனரத் அநுர சாந்த சரத்குமார என்பவருக்கு,...

வித்தியா படுகொலை வழக்கு: ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் இன்று மீண்டும் விசாரணை

கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு ட்ரயல் அட்பார் தீர்ப்பாயம் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகின்றது. இந்த விசாரணைகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும்...
Ad Widget

கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய இரண்டு பேர் கைது

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இரண்டு சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். 20 வயது மற்றும் 22 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்தவாரம் கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸார் மீது ஆவாகுழுவினைச் சேர்ந்த...

வித்தியா வழக்கில் தலைமறைவான ஸ்ரீகஜன் விரைவில் கைது: பொலிஸ்மா அதிபர்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் தலைமறைவாகியுள்ள உதவிப்பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். யாழ்.பொலிஸ் தலைமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”வித்தியாவின் படுகொலை வழக்கில் சிரேஸ்ட பிரதிப்...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது: பட்டியல் இணைப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படாத தடுத்து வைக்கப்பட்டுள்ள 84 பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லயன் எயார் விமானத்தை சுட்டு வீழ்த்தியமை, எம்.ஐ.-24 ரக ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியமை,...

நல்லூர் துப்பாக்கிச் சூடு: டெஸ்டர் கொடுத்த மனைவிக்குச் சிக்கல்

நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு, அவரது மனைவி டெஸ்டர் (மின்சாரம் பரிசோதிக்கும் கருவி) ஒன்றை, பொதிக்குள் வைத்துக் கொடுக்க முயன்ற வேளை, சிறைச்சாலைக் காவலர்களால் அது கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ். சிறைச்சாலையில், தனிச் சிறைக்கூடத்திலேயே சந்தேகநபர், தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சந்தேகநபரின் மனைவி, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவருக்கு உடைகளை வழங்கப் பொதி செய்து, சிறைச்சாலை...

யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு!

யாழ். கோப்பாய் பகுதியில் பொலிஸார் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொக்குவில், பொற்பதிப் பகுதியில் நேற்று (ஞாற்றுக்கிழமை) குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் மற்றும் சிங்கள பொலிஸார் இருவரே இந்த வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்....

ரவிராஜ் கொலை வழக்கு :கடற்படை அதிகாரியை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள கடற்படை அதிகாரி பிரசாத் ஹெட்டியாராச்சியை கைதுசெய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரவிராஜின் கொலை வழக்கை மீள விசாரிக்குமாறு கோரி, அவரது மனைவி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி,...

யாழில்.பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

யாழில்.பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது இனம் தெரியாதநபர்கள் தாக்குதலினை மேற்கொண்டு உள்ளார்கள். யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிங்கராஜா (வயது 28) என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நெல்லியடியில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்று விட்டு மீண்டும்...

யாழ். நீதிமன்றிலிருந்து கைதி தப்பியோட்டம்

யாழ். நீதிமன்றில் ஆஜராக்கப்பட்ட கைதியொருவர் தப்பியோடியுள்ள சம்பவம், நீதிமன்றில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட யாழ்.பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், யாழ். நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நீதிமன்றிலுள்ள கூண்டில் இடவசதி இல்லாத காரணத்தால் அதற்கருகில் கதிரையொன்றில் அமர்த்தப்பட்டிருந்தார். இதன்போது, நீதிமன்றிற்கு வந்திருந்த...

வித்தியா கொலை விவகாரம்: முக்கிய அரசியல்வாதியிடம் விசாரணை

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலமொன்றை பதிவுசெய்யுமாறு, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதவான் மொஹமட் மிஹால் உத்தரவிட்டுள்ளார். வித்தியா கொலை வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் சட்டத்தரணிகள், யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தில்...

பெண் ஒருவரைக் கடத்திச் சென்ற குற்றத்திற்காக முன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை

பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காக பெண் ஒருவரைக் கடத்திச் சென்ற குற்றத்திற்காக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அத்துடன், அதே நீதிமன்றத்தில் இடம்பெற்ற மற்றுமொரு வழக்கில், இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, சக இராணுவ கோப்பரல் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக சிப்பாய் ஒருவருக்கு...

நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார். குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். சரணடைந்த நபரிடம் பொலிஸார் வாக்குமூலத்தைப் பதிவுசெய்ததுடன், மருத்துவ பரிசோதனைக்கு...

புங்குடுதீவு மாணவி படுகொலை : இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா சிக்கலில்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை வழக்கு விசாரணை நடைபெற்றது. இதன்போது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் காணொளி ஒன்றை காண்பித்தனர். அந்தக் காணொளியில் சுவிஸ்குமாரை மக்கள் கட்டி வைத்திருந்த போது அந்த இடத்தில், இராஜாங்க...

“சுட முடியுமா என கேட்டார் சுட்டுவிட்டேன்!” : கொலையாளி வாக்குமூலம்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு நடத்த முயற்சித்த நபர் இன்று காலை பொலிஸில் சரணடைந்தார். இவர் நல்லூரை சொந்த இடமாக கொண்ட சிவராஜா ஜெயந்தன் 39 வயது இவரிடம் மேற்கொண்ட பொலிஸ்விசாரணையின் போது வாக்குமூலம் வழங்கையில், நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி...

வித்யா கொலை வழக்கு: DIG-இன் விளக்கமறியல் நீடிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று காலை பலத்த பாதுகாப்பின் மத்தியில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், அவரை எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, குறித்த வழக்கில் யாழ். பொலிஸ் நிலைய...

நல்லூர் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் சரணடைவு

நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் இன்று காலை பொலிஸில் சரண் அடைந்துள்ளார். புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த 39 வயதான செல்வராசா ஜெயந்தன் என்பவரே துப்பாக்கி சூட்டுப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார். சம்பவ தினத்தன்று தப்பி ஓடிய குறித்த நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில் இன்றைய தினம் காலை அவர் தானாகவே...

யாழ். இளைஞன் மரணம்: பொலிஸாருக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸாரினதும் விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி, மணற்காட்டுப் பகுதியில் அனுமதியற்ற வகையில் மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் யோகராசா தினேஸ் என்ற...

வித்தியா கொலை வழக்கில் இரசாயன பகுப்பாய்வாளர் சாட்சியமளிப்பு

படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கில் நீதாய தீர்ப்பாயத்தின் முன்னிலையில் அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி பண்டார நேற்று (திங்கட்கிழமை) சாட்சியளித்தார். யாழ்.மேல் நீதிமன்றில் வித்தியாவின் படுகொலை வழக்கின் மூன்றாம் கட்ட விசாரணை நீதாய தீர்ப்பாயத்தின் முன் கூடியபோது, 52வது சாட்சியாக அரசபகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி. பண்டார...

யாழ். துப்பாக்கிச் சூடு: சந்தேக நபரை பிடிக்க இரு விசேட குழுக்கள்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், சிவில் உடையுடன் கூடிய இரண்டு விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் 30 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts