யாழில் இந்திய பிரஜைகள் 27 பேர் கைது!

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து சட்டவிரோதமான முறையில் வெவ்வேறு வியாபாரங்களில் ஈடுபட்ட 27 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் இரகசிய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பல்கலைக்கழக பட்டதாரி ஒருவரும்...

கொக்குவில் தோட்டம் ஒன்றில் ஆவா குழுவின் மோட்டார் சைக்கிள் மீட்பு!

ஆவா குழு குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று கொக்குவில் பிரதேசத்தில் பாழடைந்த தோட்டம் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படை முகாம் படையணி ஒன்று இந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளது. உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் ஒன்று கொக்குவில் பிரதேசத்தில் தோட்டம் ஒன்றில் காணப்படுவதாக அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை...
Ad Widget

‘ஆவா’ குழுவின் முக்கிய புள்ளியை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ள இலங்கை அரசாங்கம்

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் ‘ஆவா’ குழுவின் முக்கிய புள்ளியை கைதுசெய்ய, இலங்கை அரசாங்கம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆவா குழுவின் முக்கிய புள்ளிகள், வெளிநாட்டில் இருந்தவாறு குற்றச்செயல்களை நெறிப்படுத்துவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் பொலிஸ் உயரதிகாரிகளை நேற்றைய தினம் சந்தித்த வடக்கு முதல்வர்...

மணற்காட்டு படுகொலைச் சம்பவம்: பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

மணற்காட்டு பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மணற்காட்டுப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி மணலேற்றிச் சென்ற லொறியின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், துன்னாலை பகுதியைச் சேர்ந்த யோகராசா தினேஸ் என்பவர் உயிரிழந்தார். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ்....

ஆவா குழுவுடன் தொடர்புடைய இன்னுமொருவர் கைது!

ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ரவீந்திரன் தருசன் என்ற இளைஞனே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞரின் முகநூலில் ஆவா குழுவினைச் சேர்ந்த நபர்களுடன் குழுவாக எடுக்கப்பட்ட புகைப்படம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தினை ஆதாரமாக வைத்தே இளைஞனை...

துன்னாலை அமைதியின்மை: குழுவின் தலைவர் கைதானார்

யாழ். துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு காரணமான குழுவின் தலைவரை இன்று (15) அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துன்னாலைப் பகுதியை அண்மித்த முள்ளிக் காட்டுப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தற்போது இடம்பெற்று வரும் குழப்ப நிலைக்கு...

ஆவா குழு சந்தேகநபர்கள் 87 பேரையும் வேறு சிறைகளுக்கு மாற்ற அனுமதி கோருகிறது காவல்துறை!

அண்மையில் ஆவா குழுவினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 87 இளைஞர்களையும் பாழ்ப்பாணச் சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா காவல்துறை அனுமதி கோரியுள்ளது. இவர்கள் அனைவரையும் ஒரே சிறையில் தடுத்து வைத்திருப்பதால் அவர்கள் பல்வேறு சூழ்ச்சித் திட்டங்களை வகுக்கக்கூடும் என்ற காரணத்தினாலேயே வேறு சிறைக்கு மாற்றக் கோரியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக...

யாழ்- கொழும்பு பயணிகள் பேருந்துக்கள் சிக்கின!

போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியாருக்கு சொந்தமான ஐந்து அதிசொகுசுப் பேருந்துகளும் ஒரு அரை சொகுசுப் பேருந்தும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன. கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையில் போது குறித்த ஆறு பேருந்துக்கள் சிக்கியுள்ளதுடன் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்னவின்...

சுவிஸ் குமார் தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சியளிக்கும் செய்தி!!!

புங்குடுதீவை சேர்ந்த மாணவியான சிவலோகநாதன் வித்தியா வன்புணர்வு செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார், இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதிகளை பயன்படுத்தி ஆபாச காணொளி தயாரித்துள்ளார்.சுமார் 5 காணொளிகள் அவ்வாறு...

சிறையில் பரீட்சை எழுதும் ஆவா குழுவினர்!

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு பேர், சிறைச்சாலையில் இருந்து கொண்டு, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி வருவதாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலை உயரதிகாரியொருவர் தெரிவித்தார். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் அன்மையில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு பேர், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன்...

மோட்டார்ச் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்!

வீதியால் மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தியதில் அவர்களிருவரும் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை(11) மாலை 04 மணியளவில் யாழ். கைதடி மானிப்பாய் வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ். கைதடி மானிப்பாய் வீதியால் மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல்...

வவுனியாவில் வாளுடன்ஒருவர் கைது : ஆவா குழுவுடன் தொடர்பானவரா என பொலிஸார் தீவிர விசாரணை!!

வவுனியா, தேக்கவத்தை பகுதியில் வாளுடன் நின்ற ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழுவுடன் தொடர்பானவரா என்ற அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தேக்கவத்தை 12 ஆம் ஒழுங்கையில் வசிக்கும் க.கனிஸ்டன் என்ற...

கோப்பாய் சம்பவம் : மேலும் இருவர் கைது

கோப்பாய் பிரதேசத்தில் பொலிஸார் இருவர் மீது கூறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று தீவிரவாத விசாரணைப் பிரிவினர் (TID) மூலம் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வல்வெட்டித்துறை, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இருவரே மேற்படி கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை,...

சாரதிகள் தவறிழைப்பின் 25,000 ரூபா அபராதம் விதிக்க அனுமதி

வாகன சாரதிகள் இழைக்கும் தவறுகளுக்காக குறைந்த பட்சம் 25,000 ரூபா வரையான அபராதத்தை விதிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், உரிய வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனம் செலுத்துதல், ரயில் கடவைகளை கவனயீனமாக கடத்தல் போன்ற தவறுகளுக்காகவே இவ்வாறு அபராதம் விதிக்க அனுமதி கிட்டியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

மாணவி வித்தியா படுகொலை வழக்கு : விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலம்!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. வித்தியா கொலை வழங்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை காவல்துறையில் பொறுப்பளிக்காது தப்பவிட்டமை தொடர்பில் விஜயகலாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்டநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் அவர்...

யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது

சுன்­னாகம் பகு­தியில் கடந்த 2016 ஆம் ஆண்டு சிவில் உடையில் கட­மையில் இருந்த உளவுத் துறை பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்­கு­தலை நடத்­திய குழு­வி­னரில் இருந்­த­தாக கூறப்­படும் மூன்று ஆவா குழு சந்­தேக நபர்­களை சுன்­னாகம் பொலிஸார் நேற்று கைது செய்­தனர். கொக்­குவில் பகு­தியில் பொலிஸார் இரு­வரை வெட்டி காய­ப்படுத்­தி­யமை தொடர்பில்...

ஆவா குழுவின் மற்றுமொரு உறுப்பினர் தெல்லிப்பளையில் கைது!!

வாள் வெட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆவா குழுவின் மற்றுமொரு உறுப்பினர், கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. தெல்லிப்பளை பகுதியில் வைத்து நேற்று பொலிஸ் தீவிரவாத புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைதுசெய்துள்ளனர். இவர் தற்போது யாழ் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, ஆவா குழுவின் தலைவர் எனக் கருதப்பட்டவர்...

சுமந்திரன் விவகாரம்: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சுமந்திரனின் கொலைமுயற்சி வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மாதம் 23ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் ஐவரும் நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோதே மாவட்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார். எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை, சட்ட விரோதமாக...

யாழ். வாள்வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

கொக்குவில், பொற்பதிப் பகுதியில் இரண்டு பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்த 7 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் குறித்த சந்தேக நபர்கள் நேற்று (புதன்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே நீதவான் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்ததோடு அன்றைய தினம் அடையாள...

ஆவா’ குறித்த இரகசிய தகவல்கள் வெளியாகின : பயங்கரவாத தடைச் சட்ட விதிகளின் கீழ் விசாரணை!

வடக்கை அச்சுறுத்தி வந்த ஆவா எனும் பாதாள உலகக் குழுவின் தற்போதைய தலைவனான நிஷா விக்டர் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (ரீ.ஐ.டி.) அவர்களை நேற்று மேலதிக விசாரணைகளுக்காக யாழ். பொலிஸாரிடம் கையளித்தனர். இதன்போது வாள், மோட்டார் சைக்கிள், கூரிய கத்தி, கைக்குண்டு பயன்படுத்தியமை மற்றும் வெளிநாட்டு தொடர்புகள், 2014...
Loading posts...

All posts loaded

No more posts