- Saturday
- February 1st, 2025
உயர்தரப் பரீட்சை வினாத்தாளை வெளியில் கசியவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் கல்விப்பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் இரசாயனவியல் பரீட்சையின் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கே குறித்த வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,...
இலங்கை, இந்திய அணிகளுக்கிடையில், கண்டி-பல்லேகல சர்வதேச மைதானத்தில், கடந்த 27ஆம் திகதியன்று இடம்பெற்ற போட்டியின் போது, இலங்கை கிரிக்கெட் அணியினரை இலக்குவைத்துத் தண்ணீர்ப் போத்தல்களை வீசிய, இரசிகர்களைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர். பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரிலேயே, இந்த சம்பவம் தொடர்பிலான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை அணியின் வீரர்களை நோக்கி, தண்ணீர்ப்...
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் சுவிஸ்குமாரை கொழும்பிற்கு தப்பிச்செல்ல யாழ். உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் உதவினார் என ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், ஸ்ரீகஜன் குறித்து பல முக்கிய விடயங்களை நீதிமன்றத்தில் சுவிஸ்குமார் தெரிவித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த வழக்கின் விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுண்ட பின்னர் யாழ். வேலணை மக்கள் தன்னைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து அடித்த போது, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே தன்னை காப்பாற்றி குடும்பத்திடம் ஒப்படைத்தார் என வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் சுவிஸ்குமார் சாட்சியமளித்துள்ளார். வித்தியா கொலை வழக்கின் எதிரிகள் தரப்பு சாட்சியப்பதிவு நேற்று...
யாழ். மண்டைத்தீவு கடற்பகுதியில் பாடசாலை மாணவர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, 5 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக 18 மாணவர்கள் குறித்த கடற்பரப்பில் படகு சவாரி செய்திருந்த நிலையில், படகு கவிழ்ந்து 7 பேர் கடலுக்குள் விழுந்துள்ளனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் நீந்தி கரையை அடைந்துள்ளார். இந்நிலையில்,...
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கடற்படையினரே கொன்றனர் என்றும், தம் மீது வீண்பழி சுமத்தி மக்களை நம்ப வைத்து விட்டனர் என்றும் வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபரான மகாலிங்கம் சசீந்திரன் சாட்சியமளித்துள்ளார். வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள், யாழ் மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில், கடந்த இரண்டு மாத...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் நகக் கீறல்களுடன் ஒருவர் வெளியில் உள்ளாரென்றும், சட்டவைத்திய அதிகாரிகளை மீள அழைத்து சாட்சி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிரிகள் தரப்பு வழக்குத் தொடுநர் ஆறுமுகம் ரகுபதி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில், எதிரிகள் தரப்பு சாட்சியப்பதிவு நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமானது. இதன்போது, ஜின்டெக் நிறுவனம் வழங்கிய அறிக்கையின்...
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் எதிரிகள் தரப்பு சாட்சிப் பதிவுகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளன. ட்ரயல் அட் பார் தீர்ப்பாய முறையில் கடந்த இரண்டு மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த வித்தியா கொலை வழக்கின், வழக்கு தொடுநர் தரப்பு சாட்சிப் பதிவுகள் கடந்த 4ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் இரட்ணம் மன்றில்...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில், இராணுவ வீரர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில், அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், இராணுவத்தில் சேவையாற்றி விடுமுறையில் சென்ற இருவரே, காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரில் ஒருவர், மேலதிக...
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, வெடிகுண்டு இருப்பதாக கூறி மீண்டும் மெல்போர்னில் விமானம் தரையிறங்க காரணமாக இருந்த இலங்கையர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மனோஜ் மார்க் என்ற 25 வயதுடைய இலங்கையர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மெல்போர்ன் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். வழக்கில் அவர் பிணை வழங்க கோரிக்கை...
டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிச் சுற்றுப்புறத்தை துய்மைப்படுத்துவதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையினால் உருவாக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளை மாநகரசபையானது இரவோடு இரவாக திருடி சென்றுள்ளது. அத்துடன் வைத்தியசாலையை சூழவுள்ள வீதிகளிலும் கழிவு நீர் வாய்க்கால்களிலும் தேங்கியுள்ள குப்பைகளை மாநகரசபையானது அகற்றுவதில்லை எனவும் இது தொடர்பாக தாம் வடமாகாண ஆளுநருக்கு முறைப்பாடு செய்யவுள்ளதாகவும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் ஐவரும் நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோதே மாவட்ட நீதிவான் நீதிமன்றபதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் மேற்படி...
உரும்பிராய் சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் சந்தியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு சென்று இருந்த இளைஞர்கள் அங்கு தகாத வார்த்தை பிரயோகத்தினை மேற்கொண்டு வாக்குவாதப்பட்டுள்ளனர். அதனை அடுத்து சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர் , தொழில் செய்யும் இடத்தில் இவ்வாறான வார்த்தை...
தனியறையில் அடைத்து வைத்திருப்பதனால் மன அழுத்திற்திற்கு ஆளாவதாக நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இருந்தபோதும், மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டார். யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி...
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மீது துப்பாக்கிப் சூடு மேற்கொண்ட 5 பொலிஸாரையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி காயத்திரி சைலவன் உத்தரவிட்டுள்ளார். மேற்படி வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் நேற்று (22.08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த வருடம் ஒக்டோபர்...
சூழல் மாசை கட்டுப்படுத்தும் வகையில் பொலித்தீன் மற்றும் பிளாிஸ்டிக் பாவனையை முற்றாக தடை செய்யும் நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது. எதிா்வரும் செப்டெம்பா் முதலாம் திகதி தொடக்கம் இத்தடை அமுலுக்கு வரும் எனத் தெரிய வருகின்றது. 20 மைக்குரோனுக்கு குறைந்த தடிப்பையுடைய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் மற்றும் பாவனை வியாபாரம் மற்றும் உற்பத்தி ஆகிய அனைத்தும் குறித்த...
யாழ்.பொலிஸாரை வெட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆவாக்குழுவினைச் சேர்ந்த 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்குட்படுத்த யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த சந்தேக நபர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த இருந்த நிலையில், மன்றுக்கு பதில் நீதிவான் சமூகமளித்திருந்திருந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கொக்குவில் பொற்பதி வீதியில்...
வவுனியாவில் குருமன்காடு – காளி கோவில் வீதியில் வாள்களுடன் வந்த குழுவொன்று வீடொன்றுக்குள் புகுந்து சரமாரியாக தாக்கியதில் குடும்பஸ்தரொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம், நேற்றிரவு (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீட்டு உரிமையாளரான கண்ணா என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...
வவுனியாவில் 10 வயதுச் சிறுவனைப் பயன்படுத்தி தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா வேப்பங்குளம், பட்டக்காடு, நெளுக்குளம் போன்ற பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கருதப்படும் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் வயது சிறுவன் மற்றும் அவனது சகோதரரான 18...
Loading posts...
All posts loaded
No more posts