- Saturday
- February 1st, 2025
இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியைச் சேர்ந்த எட்டுப் பேரைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தால் திகதி குறிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் அன்றையதினமே, தீர்மானிக்கப்படும் என்று, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின்...
வடமராட்சி கிழக்கில் அண்மையில் பொலிஸாரின் துப்பாச்சிச்சூட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவத்தினை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலைவேளை துன்னாலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை...
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டனர் என்றும், வழக்குத் தொடுனர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் அனைத்தும் நம்பகத்தன்மை அற்றதெனவும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் தமது தொகுப்புரையில் தெரிவித்துள்ளனர். மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் கடந்த இரு...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரது கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, இவர்கள் ஐவருக்கும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை கோரிய விண்ணப்பம், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த சந்தேகநபர்கள்...
மண்டைதீவு 3ஆம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர், சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதற்காக ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை தனது அலுவலகத்திற்குள் அழைத்து தவறான முறையில் அணுகியதோடு, அவற்றினை தனது தொலைபேசி மூலம் புகைப்படமாகவும்...
புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் சகல விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு எழுதுவதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதன்படி வழக்கின் தீர்ப்பு நாளாக எதிர்வரும் 27ஆம் நாள் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் நீதாயவிளக்க மன்று முன்னிலையில் யாழ் மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர் ஒருவரைத் தப்பிக்க உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவரது விளக்கமறியல் தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். 3 லட்சம் பெறுமதியான காசுப் பிணையிலும்,...
சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியிலுள்ள வீடொன்றிட்குள் புகுந்த அடையாளம் தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன், சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 12 பேர் கொண்ட அடையாளம் தெரியாத குழுவொன்று கிராம்புவில் பகுதியிலுள்ள வீடொன்றிட்குள் நுழைய...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரால், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது விடுதலைப்புலி உறுப்பினர், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சட்டரீதியானதென, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் வழங்கிய கட்டளையை சவாலுக்கு உட்படுத்தியே, இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி காலிங்க...
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு தொடுனர் மற்றும் எதிரி தரப்பின் தொகுப்புரைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பாயம் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன. இதில் முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகளுக்கு எதிரான சாட்சியங்கள் பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்ட வில்லை. குறித்த வழக்கு விசாரணைகள் மூன்று நீதிபதிகள் அடங்கிய “ட்ரயலட் பார்” முறையில் இடம்பெற்று வரும் நிலையில், நேற்று...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொகுப்புரைக்காக இன்று செவ்வாய்கிழமை நீதாயவிளக்கம் ( ரயல் அட் பார் ) கூடவுள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாயவிளக்கம்...
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் மூதாட்டி ஒருவரை கத்தியால் வெட்டிக்காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டு தலைமறைவாகியிருந்ததாக தெரிவிக்கப்படும் இராணுவ வீரரை, விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் கத்தியால் கழுத்தில் வெட்டப்பட்ட, ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்....
பலாலிபடைத்தலைமயகத்தில் கடமையாற்றிய இராணுவசிப்பாய் காணாமல் போயிருந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ரீ 56 ரக துப்பாக்கி வீமான்காமம் பகுதியில் இருந்து நேற்று (11) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸ் நிலையத்தகவல்கள் தெரிவித்திருந்தனர். பலாலிபாதுகாப்பு தலைமையகத்தில் கடந்த 9ம் திகதி இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ கோப்ரல் காணாமல் போனவிடயம் கடமைக்கு வேறு ஒரு சிப்பாய்...
மானிப்பாய் கட்டுடை பகுதியில் ஒருவரை வெட்டுவதற்கு எடுத்துச் சென்ற கைக்கோடரி மற்றும் வாளுடன் இரண்டு இளஞர்களை மானிப்பாய் இரகசியப் பொலிஸார் நேற்று (10) கைது செய்துள்ளனர். கைதான நபர்கள் இருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 18, 20 வயதுடைய இளஞர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட பிரச்சினை ஒன்றிற்காக இளைஞன் ஒருவரை இவர்கள் இருவரும் வெட்டுவதற்கு முயற்சி...
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண வைபவம் ஒன்றில் நேற்று முன்தினமிரவு (வியாழக்கிழமை) இடம்பெற்ற முறுகல்நிலை வாள்வெட்டு சம்பவத்தில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஆறுபேரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்....
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் வவுனியா, பாலமோட்டை, கிழவிகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மூன்று பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய பாலைய்யா சுதாகரன் என்பரரே உயிரிழந்துள்ளார்....
போக்குவரத்து விதியை மீறியதாக சாரதி ஒருவருக்கு தண்டப்பணம் அறவிடுதல் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது போக்குவரத்து பொலிஸார் குறித்த சாரதிக்கு தெரிந்த மொழியிலேயே அதனை வழங்க வேண்டும். அவரது மொழி உரிமையை மீற முடியாது என, இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர்.எல்.வசந்தராஜா தெரிவித்துள்ளார். போக்குவரத்து பொலிஸார் ஒருவரால், தனக்கு...
மது அருந்திய சாரதிகளின் போதையை பரிசோதிக்கும் 90 ஆயிரம் கருவிகள் நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் நாட்களில் இந்த சோதனை நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொளள்ப்படும். அவ்வாறான சாரதிகளின் அனுமதி பத்திரங்களை தற்காலிகமாகவேனும் குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்தி வைக்குமாறு...
ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன்(55) மீது நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன்( வெளிநாட்டு பிரஜை) மற்றும் மாணிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த கௌரிகாந்தன் ஆகியோரே தன் மீது தாக்குதலை மேற்கொண்டதாக பரமேஸ்வரன் யாழ் பொலீஸ் நிலையத்தின் முறைபாடு பதிவு செய்துள்ளாா். இது தொடர்பில் ஊடகவியலாளா் பரமேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட...
வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் வாள்களுடன் புகுந்த குழுவொன்று கடையை சூறையாடியதுடன் விற்பனை நிலைய உரிமையாளரையும் வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு 10.20 மணியளவில் வவுனியா குருமன்காடு புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள உடல் வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அதன்...
Loading posts...
All posts loaded
No more posts