- Wednesday
- November 27th, 2024
"வடக்கு மாகாணத்தில் சந்திகளில் கூடிநின்று அரட்டை அடிப்பவர்கள், கும்பலாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை விசாரணை நடத்தவேண்டும். இரவு வேளைகளில் பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்" இவ்வாறு வடக்கிலுள்ள அத்தனை பொலிஸ் நிலையங்களுக்கும் மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பணித்துள்ளார். வரும் 27ஆம் திகதி தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி ஆகுதியான மறவர்களுக்கான நினைவேந்தல் இடம்பெறவுள்ள...
ராணுவத் தளபதியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். 1996ஆம் ஆண்டு ராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் ஆட்கொணர்வு மனு நேற்றய தினம் (புதன்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19ஆம் திகதி நாவற்குழி மறவன்புலோவைச் சேர்ந்த...
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு நான்கு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில், எட்டு பேர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோண்டாவில், அறுகால்மடம், நல்லூரடி மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இரண்டு மணித்தியாலங்களுக்குள் இச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் சங்குவேலி பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தவர் மீது வாள்வெட்டுத்...
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களில் மூவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) இரவு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்படுள்ளதுடன், ஈச்சமோட்டை பகுதியில் ஒருவர் மீதும் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ். பிரதான வீதியில் உள்ள சலவை தொழிலில் நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அந்த இடத்தில் நின்ற...
வீசா சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 19 இலங்கையர்கள், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளாக இந்தோனேசியாவிற்கு சென்ற இலங்கையர்களே இவ்வாறு வீசா சட்டங்களை மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பாயுபாயு நகரில் தங்கியிருந்த போது இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளாக நாட்டுக்குள் பிரவேசித்து அங்கே தங்கும் வகையில் கிராமொன்றில் குடியேறியதாக இலங்கையர்கள்...
1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 12 இளைஞர்களின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்றத்தில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டதோடு புதிய 3 ஆட்கொணர்வு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனைத்...
பல கொள்ளைகளுடன் தொடர்புபட்டவர் என தடயங்களை வைத்து மானிப்பாய், வட்டுக்கோட்டை மற்றும் சுன்னாகம் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த கொள்ளைக் கும்பலில் ஒருவரை மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏழாலை முனியப்பர் கோயில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரையே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் சங்குவேலி பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் சந்தேநபர் அடையாளம்...
பிலியந்தலவில் பேருந்து ஒன்றை இலக்கு வைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எஸ்.ஆனந்த சுதாகர் எனப்படும், லோறன்ஸ் டேவிட் ராஜா என்ற சந்தேக நபருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க நேற்று ஆயுள் தண்டனை விதித்து...
போலி நாணயத்தாள்களை அச்சிட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியரில் குடும்பத்தலைவரை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டு உள்ளார். அத்துடன் அவரது மனைவி கர்ப்பவதி என்ற காரணத்தால் 60 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆள்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் தம்பதியர் அரியாலை மணியந்தோட்டப் பகுதியிலுள்ள...
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் வெளிநாட்டுக்குச் சென்று கல்வியைத் தொடர வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அனுமதி வழங்க வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ, கடமையிலிருக்கும் போது அவுஸ்திரேலியாவுக்கு உயர்கல்வி கற்க செல்வதற்கான அனுமதிகேட்டு...
ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலை தொடர்பான சந்தேகநபர்கள், நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்த முற்படுகின்றனர் என, பாதிக்கப்பட்டவர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி க.சுகாஷ், மன்றில் தெரிவித்தார். இப்படுகொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில், நேற்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, குறித்த சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்தார். இதன்போது குறித்த வழக்கில் கைது...
யாழ். கொழும்புத் துறை நெலுக்குளம் பகுதியில், போலி பணத்தாள்களை அச்சிட்ட இளம் தம்பதியினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். விஷேட புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்கள் நேற்று (திங்கட்கிழமை) கைதுசெய்துசெய்யப்பட்டுள்ளனர். குறித்த தம்பதியினரின் வீட்டை சுற்றி வளைத்த அதிகாரிகள், 24 வயது மதிக்கதக்க மனைவியை முதலில் கைதுசெய்ததாவும், பின்னர் கணவரை கைதுசெய்தாகவும் அங்கிருக்கும் எமது பிராந்திய...
வடமாகாணத்தின் சில மாவட்டங்களுக்கு இன்றைய தினம் மின்சாரம் தடை ஏற்படும் என மின்சார சபையின் வடமாகாணப் பிரதி பொது முகாமையாளர் அறிவித்துள்ளார். வடக்கில் கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்சார பராமரிப்பு தொடர்பிலான புனரமைப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை...
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் டொன் பொஸ்கோ என்ற இளைஞன் படுகொலைச் செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அங்கு விசேட அதிரடிப்படையினர் இருந்தமைக்கான ஆதாரம் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது தொலைபேசிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் குறித்த இரு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருந்தமை...
வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் கோவில் அருகே இன்று முற்பகல் 11.30 மணியளவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அபகரித்துச் செல்ல முயன்ற போது அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்து நையப்புடைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாது, இன்று முற்பகல் 11.30 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம்...
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று(சனிக்கிழமை) வாக்குமூலம் பெற்றுள்ளனர். வித்தியா கொலை வழக்கின் சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பிக்க உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு எதிரான வழக்கு தொடர்பிலேயே குறித்த வாக்குமூலம்...
மது போதையில் முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதியின் சாரதி அனுமதி பத்திரத்தை நிரந்தமாகத் தடை செய்ய ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.ரியால் உத்தரவிட்டார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்திய குற்றச்சாட்டில் சாரதியை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சாரதியின் ,...
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் திகதி டொன் பொஸ்கோ (வயது-24) என்ற இளைஞன், இனந்தெரியாதோரால் சுட்டு...
மட்டக்களப்பு,ஏறாவூரில் இடம்பெற்ற தாய் மற்றும் மகன் இரட்டைக் கொலையின் சந்தேக நபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் மிருசுவில் வடக்கு கொடிகாம் , யாழ்ப்பானம் எனும் முகவரியை சேர்ந்த ஒருவரையும் , சவுக்கடி தன்னாமுனை எனும் முகவரியை கொண்ட முச்சக்கர வண்டி சாரதி...
கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த செல்வதுரை கிருபாகரன் என்பவருக்கு, இன்று (புதன்கிழமை) இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தெஹிவளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியான சுனில் தாப்ரூ என்பவரை சுட்டுக்கொன்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது குறித்த...
Loading posts...
All posts loaded
No more posts