- Wednesday
- November 27th, 2024
நடுவீதியில் கேக் வெட்டி பிறந்தநாளினை கொண்டாட முயன்ற இளைஞர்களை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ளே வீதியொன்றில் பிறந்தநாளை நேற்று இரவு இளைஞர்கள் சிலர் கொண்டாட முயன்றுள்ளார்கள். அதன் போது தமது மோட்டார் சைக்கிள்களை வீதியின் குறுக்கே நிறுத்தி அதன் மீது பிறந்த நாள் கேக்கினை வெட்ட இளைஞர்கள் தயாராகி உள்ளனர். அந்நேரம்...
யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்ற உறவினரை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 13வயதுடைய சிறுமியை அவரது உறவினர் ஒருவர் சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 05ஆம் திகதி தன்னுடன் அழைத்து சென்று வவுனியாவில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். அந்நிலையில்...
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 27 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவுக்கு தென்கிழக்கே இவர்கள் நேற்று (திங்கட்கிழமை) இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, யாழ். கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய ஐந்து விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம்...
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் இலக்கத்தகடு மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் சென்ற கும்பலொன்று, வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்தோடு, தாம் கொண்டுவந்த வாள்களால் வீட்டிலுள்ள பெறுமதிமிக்க பொருட்களை சேதப்படுத்தி, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர். அதன் பின்னர், 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும்...
'வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன, என்று பொலிஸார் தெரிவித்தனர். "யாழ்ப்பாணம் - மானிப்பாய் - காரைநகர் வீதியில் நேற்று மாலை பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கும்பல் ஒன்று வாள்களுடன் நடமாடியதுடன் வழி பறிப்பிலும் ஈடுபட முயற்சித்துள்ளனர். பொதுமக்கள்...
முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் மீதும் மாங்குளம் சந்தியில் வைத்து பிறிதோர் இளைஞர் மீதும் தாக்குதல் நடத்திய ஆவா குழுவைச் சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பகுதியில் வைத்து, வௌ்ளிக்கிழமை (08) இரவு 8.45 மணியளவில் மல்லாவிப் பகுதியில்...
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒளிபரப்பாக செயற்படும் யாழ்.எப்எம் வானொலியில் கடமையாற்றும் ஊடகவியளாளர் ஒருவர் சாவகச்சேரியில் அமைந்துள்ள வீட்டிற்கு வரும்போது அவருடைய வாகனத்தை மறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்.எவ்எம் பிரதம செய்தியாளரான எஸ்.மனோகரன் என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டவராவார். இச் சம்பவம் நேற்று மாலை சாவகச்சேரி தனங்களப்பு வீதியில் இடம்பெற்றுள்ளது. தாக்கியவர்கள் முச்சக்கரவண்டியில் மிகுந்த மதுபோதையில் தாக்குதலை...
வவுனியா சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் இருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இச்சம்பவம், நேற்று (05) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சான்றுப் பொருட்கள் அறையை உடைத்து, கஞ்சா திருடியக் குற்றச்சாட்டில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவரில் இருவரே, இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர். எனினும், 2 மணிநேர தேடுதலின்...
வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை பொலிஸ் தடுப்பிலிருந்து விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கின் முதலாவது சந்தேகநபரான வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு கீழ் பணியாற்றிய யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் என்.எல்.பெரேராவால் வழங்கப்படும் சாட்சியைப் பதிவு செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் இன்று கட்டளையிட்டார். லலித்...
வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இளைஞன் ஒருவரைச் சுட்டுக்கொன்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. வடமராட்சி கிழக்கில் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த யோகராசா தினேஷ்...
மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதெனக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, யாழ்ப்பாணத்தில் “ஹெரோய்ன் ரொபி” விற்கப்படுவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, புத்திக பத்திரண எம்.பி, கல்வியமைச்சரிடம் கேள்விகளை கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அளித்த பதிலையடுத்தே, அவர் மேற்கண்டவாறு...
இளைஞர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நீதி கேட்ட போது, தனது மோட்டார் சைக்கிளுக்குள் கஞ்சாவை வைத்து தன்னை அச்சுறுத்தியதாக யாழ்.வர்த்தகர் மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் மாவீரர் நாளான கடந்த 27ஆம் திகதி இளைஞர்கள் மீது சுன்னாகம்...
கொழும்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவை சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ் வழக்கு விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும், விசாரணைகளின் பின்னர் நேற்று கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில்...
மட்டுவில், சிவன்கோவில் வீதியில் நேற்று வாள்களுடன் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சாவகச்சேரி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 22 வயதான...
யாழில் இடம்பெற்ற பிரதான வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரும், ஆவா குழுவின் தலைவருமான விக்டர் நிசா எனப்படும் நிசாந்தன் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடியுள்ளார். யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேக நபரை, மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இன்று (வெள்ளிக்கிழமை) அழைத்துச் சென்றபோது அவர் தப்பிச் சென்றுள்ளார் குறித்த சந்தேகநபருக்கு நேற்று யாழ். நீதவான் நீதிமன்றம்...
யாழ்.அரியாலை பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்தமை தொடர்பிலான வழக்கில் சந்தேக நபர்களான காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இருவரையும் சாட்சி அடையாளம் காட்டவில்லை. யாழ்.அரியாலை கிழக்கு பகுதியை சேர்ந்த டொன் பொஸ்கோ ரிக்மன் (வயது 24) எனும் இளைஞன் கடந்த மாதம் 22ஆம் திகதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்து இருந்தார். குறித்த துப்பாக்கி சூட்டு...
யாழில் செயற்படும் ஆவா வாள் வெட்டுக் குழு மற்றும் அக்குழுவுக்கு எதிராக சட்டவிரோதமாக செயற்படும் மேலும் பல குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பொலிஸார் விஷேட வேலைத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் சிறப்புக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இந்த விஷேட கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு சிரேஷ்ட...
யாழில்.வாள் வெட்டுக் குழுவை சேர்ந்துவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களில் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் மூவரை பிணையில் செல்ல அனுமதித்தார். யாழ். பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இரவு வாள்களுடன் நடமாடினார்கள் என மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட...
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுடன், யாழ்ப்பாணத்தின் பொலிஸ் உயரதிகாரிகள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று (வியாழக்கிழமை) சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேல் இச்சந்திப்பு இடம்பெற்றது. வடக்கில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவது, பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்நிலையில், இவற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய...
யாழ். பருத்தித்துறையில் கொள்ளையிடப்பட்ட 15 கையடக்க தொலைபேசிகளுடன் இருவர் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் பருத்தித்துறை Abans காட்சியறையை உடைத்து பல பெறுமதியான கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து பருத்தித்துறை பொலிஸார் மற்றும் யாழ் .மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றய தினம் 15...
Loading posts...
All posts loaded
No more posts