சுன்னாகத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி காவலாளியிடமிருந்து பணம், நகை கொள்ளை!

யாழ்.சுன்னாகம் பகுதியில் காவலாளியை கத்தியைக் கொண்டு மிரட்டி அவரிடமிருந்த பணம் மற்றும் நகைகள் என்பவற்றை கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்துள்ளது. சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள கால் நடை மருத்துவ மனையில் காவலாளியாக கடமையாற்றுபவரிடமிருந்தே நேற்று (புதன்கிழமை) நகை, பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டன. நேற்று அதிகாலை கால் நடை மருத்துவ மனைக்குள் அத்துமீறி உள்நுழைந்த 4 பேரே...

யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கையில் நீண்டகாலமாக ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை கலேவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் 25.253 கிராம் ஹெரோயினை கொண்டுசென்றுகொண்டிருந்தவேளை குறிப்பிட்ட நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பை சேர்ந்த 26 வயது இளைஞனையே கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் குறிப்பிட்ட இளைஞன் போதைப்பொருளிற்கு அடிமையானவர் எனவும் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட...
Ad Widget

கேபிள் ரீவி இணைப்பு முகவர் கைது!

கரவெட்டி, கரணவாய் கிழக்கில் கேபிள் ரீவி இணைப்பு வயரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்தப் பகுதிக்கு கேபிள் ரீவி இணைப்பை வழங்கும் முகவர் நெல்லியடிப் பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார். “கேபிள் ரீவி இணைப்பு வயரைத் தொடுத்திருந்த இரும்புக் கம்பியின் ஊடாகவே மின்சார சபையின் உயர் அழுத்த...

14 வயது சிறுமி மீது வன்புணர்வு – பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு விளக்கமறியல்

14 வயது சிறுமியை பொலிஸ் உத்தியோகத்தர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயாரே பொலிஸ் உத்தியோகத்தரிடம் அனுப்பியதாக சிறுமி நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த வழக்கு விசாரணையானது எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது தாயாரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும்...

இளைஞன் வெட்டிக் கொலை: சுன்னாகத்தில் ஒருவர் கைது

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் கடந்த 23ஆம் திகதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கள்ளபாடு வடக்கினை சேர்ந்த 27 வயதுடைய வ.சதாநிசன் என்ற இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய யாழ்ப்பாணம் சுன்னாகத்தினை சேர்ந்த சந்தேகநபரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். கடந்த 23ஆம் திகதி முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் உள்ள பனங்கூடல் ஒன்றுக்குள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நிலையில் குறித்த இளைஞனின்...

யாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஊடகவியலாளர் படுகாயம்

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் இனந்தெரியாத குழுவொன்றினால் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றின் பிராந்திய ஊடகவியலாளரும் விநியோக முகாமையாளருமான செல்வராசா இராசேந்திரம் (56 வயது) என்பரே படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை யாழ்ப்பாணம் போதனா...

முல்லைத்தீவில் இளைஞன் வெட்டிக்கொலை! – குற்றத்தடுப்புப் பிரிவு தீவிர விசாரணை

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சியிலிருந்து சென்ற விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை பகுதியிலுள்ள பனங்கூடலுக்குள் இருந்து குறித்த இளைஞனின் சடலத்தை பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) கண்டெடுத்தனர். கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதான வரதராஜா சதாநிசன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்....

தாவடியில் கைதாகிய ஆவா குழு உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் முக்கிய நபர் என்று கூறப்பட்டவரை பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. சந்தேகநபர் மீது இருவேறு வாள்வெட்டுக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து யாழ்ப்பாணம் பொலிஸாரும் கோப்பாய் பொலிஸாரும் மன்றில் சமர்ப்பணம் செய்தனர். கொக்குவில் முதலி கோவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய...

ஆலயத்தினுள் வாள்வெட்டு: சந்தேகநபரை அடையாளம் காணமுடியாமல் நீதிமன்றின் திணறல்

நீர்வேலி பகுதியில் உள்ள இந்து ஆலயத்தினுள் வைத்து வாள்வெட்டினை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் சாட்சியங்கள் அடையாளம் காட்டவில்லை. குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதிஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் தாக்குதலுக்கு இலக்கான இரு சாட்சிகளும் சந்தேக நபர்களை...

யாழ்.வாள்வெட்டு சம்பவம்: இளைஞர் கைது

நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தில் இளைஞரொருவர் யாழ். தாவடிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர், யாழ்.பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படியில் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் என...

ஆவா குழு உறுப்பினர்கள் நான்கு பேர் கைது

கொடிகாமம் பகுதியில் ஆவா குழு உறுப்பினர்கள் நான்கு பேரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 25 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்கள், இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் சில ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். கொடிகாமம் பகுதியில் திடீரென பொலிஸார் மேற்கொண்ட வீதி நடவடிக்கையின்போதே...

மதுபோதையில் வாகனம் செலுத்திய இளம் பெண்ணுக்கு 7 ஆயிரம் ரூபா தண்டம்!

மதுபோதையில் வாகனம் செலுத்திய இளம் பெண்ணுக்கு 7 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை ஒரு வருடத்துக்கு இடைநிறுத்துமாறும் மன்று கட்டளையிட்டது. “தோழி எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அவர் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் வேதனைப்படுகிறார். அவருக்கு சாரயம் வழங்கப்பட்டது. அதில் சிறிதளவை இந்தப் பெண்ணும் பருகிவிட்டார்” என்று...

யாழில் முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு சென்ற ஆசிரியை!!!

யாழ்.இருபாலை பகுதியில் உள்ள முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு முன்பள்ளி ஆசிரியை சென்றமையால் கல்வி திணைக்கள அதிகாரிகளால் குறித்த முன் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , இருபாலை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஞான ஒளி சனசமூக நிலையத்தில் இயங்கி வந்த...

முகநூல் பதிவு தொடர்பில் பிரதேச சபைக்கு போட்டியிட்ட வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலி. தெற்கு பிரதேச சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் வேலாயுதம் செல்வகாந்தன் என்பவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த வேட்பாளர் விளையாட்டுக் கழகமொன்றின் நிர்வாக உறுப்பினராகவும் இருந்து வருகின்றார். இவ்விளையாட்டுக்கழகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக புலம்பெயர் நலன்விரும்பிகளால் ஒரு தொகைப் பணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனினும் விளையாட்டுக்கழகத்தின்...

மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிவந்தவர்கள் கைது!

ண்டபம் அகதிகள் முகாமில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வந்த நான்கு இலங்கை அகதிகள், கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அகதிகளுடன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்படையினர், சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில், சட்டவிரோதமான முறையில் படகொன்று நிற்பதை அவதானித்துள்ளனர்....

ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் கொலை: சகோதரர்கள் இருவரும் பிணையில் விடுவிப்பு!!

ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கில் சுமார் 17 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்த சந்தேகநபர்கள் இருவரையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது. ஊர்காவற்துறை பகுதியில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) என்பவர்...

குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்திக் கொள்ளை!

யாழ்.தென்மராட்சி பகுதியில் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து குடும்பத்தாரை அச்சுறுத்தி, நகை பணம் என்பவற்றைக் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தென்மராட்சி, அறுகுவெளி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நள்ளிரவு உட்புகுந்த நான்கு கொள்ளையர்கள் வீட்டில் உறங்கி கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் வாளினை வைத்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டனர். அதன்போது...

யாழில்.பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் சிறப்பு பொலிஸ் செயலணி

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றாக ஒழிக்கும் வகையில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஷான் பெர்னாட்டோவினால் சிறப்பு பொலிஸ் செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த செயலணியின் பணிகள் அனைத்தும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகள் குடாநாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் ஒட்டப்படவுள்ளன. கடந்த காலங்களில்...

திருடனின் கத்திக் குத்துக்கு இலக்காகிய முதியவர் உயிரிழப்பு!!

திருடனின் கத்திக் குத்துக்கு இலக்காகிய முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி வடக்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள வீட்டுக்குள் கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு திருடன் ஒருவன் புகுந்துள்ளான். அந்த வீட்டில் தம்பதியரான சிவலோகநாதன் செல்வராசா (வயது – 62 ) செல்வராசா இராஜேஸ்வரி (வயது -58)...

வாள்வெட்டுக் கும்பல்களுடன் தொடர்பைப் பேணிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அப்பு என்ற பொலிஸ் உத்தியோகத்தர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். வாள்வெட்டுக் கும்பல்களுடன் தொடர்புகளைப் பேணி, பொலிஸாரின் விசாரணை நகர்வுகள் தொடர்பான தகவல்களை அவற்றுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டையடுத்தே இந்த இடமாற்றத்துக்கு உத்தரவிட்டார் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர். “யாழ்ப்பாணத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts