- Monday
- November 25th, 2024
தென்மராட்சியில் இடம்பெற்று வந்த வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தம்மை ‘ஐ’ குழு எனவும் ‘சவா’ குழு எனவும் அடையாளப்படுத்தி கொண்டு வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் குறித்த குழுவினர் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் கோஸ்டி மோதல்...
சுழிபுரம் பகுதியில் 6 வயதான சிறுமி சிவனேஷ்வரன் ரெஜினாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையானது மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது சிறுமியின் மரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், சிறுமியின் தந்தை, தாய் மற்றும் மாமா ஆகியோர் பிரதான...
யாழ் மற்றும் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் நடமாடிய கொள்ளையர்கள் பெருமளவான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். யாழ் மற்றும் நல்லூர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்குள் நேற்று (திங்கட்கிழமை) இரவு 8 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் உரிமையாளர்களுக்கு வாள்களை காட்டி மிரட்டி பணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இலக்கத்தகடுகள் அற்ற மூன்று மோட்டார் சைக்கிள்களில்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பின்பு உள் நுழைய முயன்ற மூவரை அனுமதிக்க மறுத்த காவலாளியை தாக்கி உள்நுழைந்த இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஒருவரை பார்வையிடுவதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த நால்வர் இரவு 10 மணியளவில் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்....
அச்சுவேலி பத்தமேணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அந்த வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றது என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் கதவு, கண்ணாடிகள் உள்பட வீட்டில் இருந்த பெறுமதியான பொருள்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி தமக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச்...
இளம் பெண்ணொருவரின் தற்கொலைக்கு, சட்டத்தரணி ஒருவரே காரணமென முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, குற்றப்புலனாய்வும் திணைக்களத்துக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த விவகாரம் தொடர்பில், ஏற்கெனவே விசாரணைகளை நடத்திய யாழ்ப்பாணப் பொலிஸ் தலைமையகக் குற்ற விசாரணைப் பிரிவு முன்வைத்த விசாரணை அறிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட யாழ்ப்பாணம் நீதவான் சின்னத்துரை...
சுழிபுரம் - திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பீ வாகனங்களும் அவற்றின் சாரதிகளும் அப்பிரதேச மக்களால் மடக்கிக் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று (17) மாலை 6 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலங்களைப் புதைக்கும் புதைகுழிகள் அமைந்துள்ள இடத்தில் மணல் அகழப்பட்டமையால் எலும்புக் கூடுகள் வெளியே வந்துள்ளன....
மானிப்பாய் பகுதியில் வயோதிபப் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபரை குற்றமற்றவர் என தெரிவித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது. மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கும்...
வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் 33 தவறுகளுக்காக சம்பவ இடத்திலேயே விதிக்கப்படும் தண்டப்பணம் நேற்று 15ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் அதிகரிக்கப்படுகின்றன. வாகான புகைப் பரிசோதனைச் சான்றிதழை எடுத்துச் செல்லத் தவறினால் 500 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என புதிய போக்குவரத்து விதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அந்தச் சான்றிதழ் வாகன வரி அனுமதிப் பத்திரம்...
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து கடந்த சனிக்கிழமை முற்பகல் குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணும், அவரது ஆறு வயது...
மரண தண்டனையை நிறைவேற்றுவதாயின் முதலில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேகநபர்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுட்டவர்களுக்கே அதனை நிறைவேற்ற வேண்டுமென ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதனை விடுத்து பாதாள உலகக் குழுவை முதலில் குறிவைப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதென அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்...
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு விழிப்பூட்டல் செயலமர்வுகளை நடத்தும் சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகர்களுக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரால் நெருக்குதல்கள் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விழிப்பூட்டல் செயலமர்வு நடத்துவதனால் ஆசிரியர்கள் சிலருக்கு எதிராக தேவையற்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் குறிப்பிடும் அந்தப் பாடசாலையின் அதிபர், இவ்வாறான...
சுழிபுரம் சிறுமி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் இன்னமும் கைது செய்யப்படாமையால் சுதந்திரமாக நடமாடி திரிவாதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டுவதாக அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார். குறித்த வழக்கு விசாரணையானது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (புதன்கிழமை) நீதவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது....
யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு எழுத்துமூலம் ஆட்சேபனையை, மனுதாரர்கள் சார்பில் நேற்று (புதன்கிழமை) முன்வைக்கப்பட்ட வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி...
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் விபரங்களை வழங்குமாறு, நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு முதற்கட்டமாக 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களது விபரமே கோரப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளரும்...
ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுடன் சிறுவனொருவன் யாழ் நகர்ப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையிலையே நேற்று மாலை யாழ் பொம்மைவெளிப் பகுதியில் வைத்து குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர். இதன் போது ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள் மூன்று பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது. கைது...
யாழ்ப்பாணம் – காரைநகர் வீதி கல்லுண்டாய் பகுதியில் வாள், கம்பியுடன் நடமாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று (10) செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது. “கல்லுண்டாய் பகுதியில் மானிப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்தனர். இரண்டு மோட்டார் சைக்கிள் சமாந்தரமாக வந்தன. அவற்றில் 4 பேர் பயணித்தனர்....
வவுனியா பேருந்து ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவருடன் தகாத முறையில் செயற்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இருப்பினும் பொலிஸார் இராணுவ சிப்பாயை தப்பிக்க விட்டதாக தெரிவித்து, பொலிஸாருடன் பொதுமக்கள் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். குறித்த சம்பவமானது நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இதனால் மன்னார் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு...
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். பௌத்தசாசன அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சமீப காலமாக இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களின் திட்டமிடப்பட்ட போதைப்பொருள் இறக்குமதி என்பவற்றை கருத்திற்கொண்டு அமைச்சரவை அமைச்சர்கள்...
வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் 33 தவறுகளுக்காக விதிக்கப்படும் தண்டப்பணம் இந்த மாதம் 15ஆம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் வாகன போக்குவரத்து பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார். வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிக வேகத்துடன் வாகனங்களை செலுத்துவதற்கான தண்டப்பணம் ரூபா 25 ஆயிரம் ரூபாவரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகுமம் அவர்...
Loading posts...
All posts loaded
No more posts