- Saturday
- December 21st, 2024
சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியா நோக்கி செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை கடற்பரப்பில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை, முலைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை...
யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையத்தில் கடந்த 3ஆம் திகதி இரவு இரு இளைஞர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில்...
குருநகரில் இளைஞன் கொலையுடன் முதன்மை சந்தேக நபரான ரெமி என அழைக்கப்படுபவர் உள்பட மூவர் சுமார் 8 மாதங்களின் பின்னர் நேற்று தமது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தனர். மூவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்பபாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார். 2021ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22ஆம் திகதி பட்டப்பகலில் குருநகரில் வீதியில் வைத்து...
திருட்டுச் சம்பவம் ஒன்றின் சந்தேக நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற இளவாலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை - பொன்னாலை வீதியில் வைத்து அவர் நேற்று (05) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். இளைவாலை பொலிஸ் பிரிவில் வீடுடைத்து திருட்டில் ஈடுபட்ட...
யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட...
ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி 24ஆம் திகதி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணித் தாயின் வழக்கு விசாரணைகள் 5 ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவில் 12 வயதுச் சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட ஈபிடிபியின் முன்னாள் உறுப்பினரே...
வரலாற்று தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் களவாடப்பட்டுள்ளன. மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவையே பெயர்த்தெடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கட்டிடத்தின் வரலாற்று பின்னணி மந்திரி மனை...
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட போலி அடையாள அட்டையுடன் தங்கி இருந்த யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி என கூறிதிருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் தங்கி இருந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் நடத்தைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம்...
15 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று, குடும்பம் நடாத்திய 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞனும் 15 வயதான சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு...
யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 22ஆம் திகதி மதியம் இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டு இருந்தார். அப்பெண் தனிமையில் இருந்த...
கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வவருகிறார், அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு கொழும்பில் இருந்து கடந்த 19 ஆம் திகதி சிறிய படகொன்றில் வந்துள்ளார். படகில் யாழ்ப்பாணம்...
சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவதாக அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் நேற்றையதினம் (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டனர். இவ்வாறு யாசகம் பெறுபவர்களின் பணம் விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதும்...
திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபரிகள் மற்றும் நுகர்வோர்களிடம் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி சந்தையில் வகுப்பு (மூடை தூக்குதல்)வேலை செய்து வரும் நபர் ஒருவர், வியாபரிகள் , நுகர்வோர்களிடம் உங்கள் மூடைகளை தூக்கி வருவதாக கூறி மூடைகளை தூக்கி செல்லும் போது , அவற்றில்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்ப்பட்ட தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தார்....
யாழ். கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 24 வயதுடைய ஒருவர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொக்குவில் மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளில் வன்முறைகளில் ஈடுபட்ட நிலையில் அவர் மீது நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகள் உள்ளன. நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக நேற்றுமுன்தினம்...
இலங்கை கடற்பரப்பில் கைதான 43 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம்...
தனிநபர் ஒருவரின் தானியங்கி பணக் கொடுக்கல் வாங்கல் அட்டையை எடுத்து சுமார் 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் தேடுகின்றனர். அவர்கள் இருவரது ஒளிப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். உரும்பிராயின் தனிநபர் ஒருவரின் வங்கிக் கணக்கின் தானியங்கி பணப்பரிமாற்றல் அட்டை காணாமற்போனமை...
15 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்துப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை கற்கோவளம் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு...
யாழில் வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 10 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டுத் தாக்குதலில் சிறுவன் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், சிறுவன்...
யாழ். நகரில் தற்பொழுது தீபாவளி பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடிய நிலையில், சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாத 25 பேர் நேற்று (02) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினர் வீதி பரிசோதனை நடவடிக்கையினை முன்னெடுத்த போது யாழ்ப்பாண நகரின் முக்கிய வீதிகளில் முகக்கவசம் அணியாது...
Loading posts...
All posts loaded
No more posts