சிறுமிகளுக்கு துன்புறுத்தல்: வட்டுக்கோட்டை ஆசிரியருக்கு 3 மாதங்களின் பின் பிணை!

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக 3 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நிபந்தனையுடனான பிணையில் விடுவித்தது. சந்தேகநபர் கடந்த வியாழக்கிழமை மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். “ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மேலும் சில சிறுமிகளின் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன....

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் குடியிருப்பை வைத்திருந்தார் என யாழ். மாநகர சபை உறுப்பினர் மீது குற்றச்சாட்டு

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுசூழலை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாண மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த வியாழக்கிழமை (20) சுகாதார துறையினர், பொலிஸ் உத்தியோகத்தர் சகிதம் யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்....
Ad Widget

முதியவரின் மோதிரங்களை அபகரித்துத் தப்பிக்க முயன்ற கர்ப்பவதிப் பெண் கைது!

தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த முதியவரின் மோதிரங்கள் இரண்டை கொள்ளையடித்துத் தப்பிக்க முயன்ற கர்ப்பவதிப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தெல்லிப்பளை வைத்தியசாலையில் இடம்பெறும் மாதாந்த சிகிச்சைக்காக நேற்றைய தினம் முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அந்தவேளை வைத்தியசாலையில் வெள்ளை உடுப்புடன் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்கே நின்று முதியவரை...

புத்தர் உருவம் பொறித்த சேலை அணிந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ். நீதிமன்றில் வழக்கு

புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். பெண் சட்டத்தரணிக்கு எதிரான குற்றப்பகிர்வை முன்வைக்க சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுமதி வழங்குமாறு பொலிஸார் கோரியமைக்கு அமைய ஒப்புதல் வழங்கிய நீதிமன்றம், வழக்கை வரும் ஜனவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. புத்தரின்...

யாழில். கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த அந்தனர்கள் கைது!!

யாழில். கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றசாட்டில் அந்தணர்கள் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். கோப்பாய் பகுதியில் கடந்த திங்கட்கிழமை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த காவற்துறையினர் குறித்த இரு அந்தணர்களையும் மறித்து சோதனையிட்ட போது இருவரின் உடமையில் இருந்து சிறியளவிலான கஞ்சா பொதிகளை...

சுழிபுரம் ரெஜினா கொலை – மூடிய அறையில் சாட்சிப் பதிவு

சுழிபுரரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ரெஜினாவின் கொலை வழக்கின் இரண்டாவது சாட்சியாளரிடமும் அவருடைய இரண்டு பிள்ளைகளிடமும் மூடிய அறையில் சாட்சிப் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன. மல்லாகம் நீதவான் நீதீமன்றத்தில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் இரண்டாவது சாட்சியாளரிடமும் அவருடைய இரண்டு பிள்ளைகளிடமும் மூடிய அறையில்...

வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நால்வர் காயம்!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – கைவேலிப்பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நால்வர் காயம் அடைந்துள்ளதுடன், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த செவ்வாய்கிழமை இரவு குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது. இதன்போது வீட்டில் இருந்த ஒருவரால் குறித்த...

புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த பெண் சட்டத்தரணி : நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

புத்தரின் உருவம் பொறித்த அலங்காரம் அமைப்புக்கொண்ட சேலை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணி ஒருவரை வாக்குமூலம் வழங்க வருமாறு யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்குள் வந்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதால் நீதிமன்ற வளாகத்தக்குள் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் மூத்த சட்டத்தரணிகள் தலையிட்டு நிலமையை சுமுக நிலைக்குக் கொண்டு வந்தது. அத்துடன், பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட இளம் பெண்...

சுவிஸிலிருந்து தாயகம் திரும்பியவர் மீது சுன்னாகம் பொலிஸார் தாக்குதல்!

சுவிஸ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய ஒருவர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத் தாக்கப்பட்டுள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஒருவர் தனது பரம்பரை சொத்தை மீட்பதற்கு நாட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார் உடுவில் மகளிர் கல்லூரிக்கு அண்மையிலுள்ள பல கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்குச் சொந்தக்காரரான மொறிஸ் அருணாசலம்...

பொலிஸ் வாகனம் கடத்தல்: நால்வர் கைது!

பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் ஆயுதங்களுடன் கொடிகாமம் பொலிஸாரின் வாகனம் கடத்தப்பட்டமை தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் இன்று (புதன்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தொிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கொடிகாமம் பாலாவி பகுதியில் நேற்று திருமண விருந்து உபசார நிகழ்வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பொலிஸ் அவசர...

பழுதடைந்த உணவு விநியோகம்: மண்டப முகாமையாளர் பிணையில் விடுதலை!

யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பழுதடைந்த உணவினைப் பரிமாறிய குற்றசாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மண்டபத்தின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார். யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி சி.சதிதரன் மண்டப முகாமையாளரை பிணையில் செல்ல அனுமதித்து வழக்கினை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைத்தார். உரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில்...

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்ற 88 இலங்கையர்கள் கைது!

படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கையைச் சேர்ந்த 88 பேரைக் கைது செய்துள்ளதாக நீர்கொழும்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச கடல் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களை கொழும்பு, ரங்கல கடற்படை முகாமிற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) பகல் அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகரி ஒருவர் தெரிவித்தார். நேற்று அதிகாலை சர்வதேச கடற்பரப்பு பகுதியில்...

பொலிஸ் அதிகாரியின் காட்டுமிரண்டித்தனமான தாக்குதல்!! சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில்!!

வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உள்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் குடும்பம், தமக்குச் சொந்தமான காணியின் ஒரு துண்டை, ஹோட்டல் அமைத்து...

வாள்களுடன் மூன்று இளைஞர்கள் கைது

உடுவில் பகுதியில் வாள்களுடன் பயணித்தார்கள் என்ற குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை சுன்னாக பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் உடுவில் பகுதியைச் சேர்ந்த 21, 23 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மோட்டார்...

உதைப்பந்தாட்ட மோதல் விவகாரம்: கைது செய்யப்பட்ட 75 பேரும் எச்சரிக்கையின் பின் விடுதலை

பருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து, குழு மோதலில் ஈடுபட சென்றார்கள் எனும் சந்தேகத்தில் பேரில் 75 பேரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து, கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பருத்துறை-...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் நீதிபதியின் கையடக்க தொலைபேசி திருட்டு: ஒருவர் கைது

நல்லூர், கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வைத்து, மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் கையடக்க தொலைபேசி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இறுதி திருவிழாவான தீர்த்தத் திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றபோது, அன்றைய தினம் மாலை மல்லாகம் நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் நல்லூர்...

நவாலியில் நான்கு வீடுகளை தீயிட்டு கொளுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது

நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள நான்கு வீடுகள் , ஒரு ஐஸ்கிறீம் விற்பனை செய்யும் வாகனம் ஆகியவற்றுக்கு தீயிட்டு கொளுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட அட்டகிரி எனும் இடத்தில் உள்ள நான்கு வீடுகளுக்குள் புகுந்த முகத்தினை துணிகளால் மூடி கட்டியவாறு உட்புகுந்த வன்முறை கும்பல்,...

கல்வியங்காடு வீடுகளுக்குள் அட்டூழியம் – ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் கைது

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் 4 வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதல் மற்றும் மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் நல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்படடார். கோப்பாய், கல்வியங்காடு – ஆடிய பாதம் வீதியில் நேற்று வியாழக்கிழமை காலை அடுத்தடுத்து 4 வீடுகளுக்குள்...

வாள்வெட்டு கும்பலிடமிருந்து தப்பிக்க துவிச்சக்கரவண்டியை எறிந்த நகைக்கடை உரிமையாளர்!!

யாழ்.நகரில் இயங்கும் பிரபல நகைக் கடை உரிமையாளர் ஒருவரிடம் வாள் முனையில் கொள்ளையிட முயன்ற சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த கடை உரிமையாளர் கடையைப் பூட்டிவிட்டு வீடு செல்லும்போது வாள் முனையில் கொள்ளையர்கள் அச்சுறுத்தி கொள்ளையிட முயன்ற நிலையில் தனது சாதுரியத்தினால் தப்பித்துள்ளார். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நகைக் கடை நடாத்தும் ஓர் உரிமையாளர்...

கொள்ளையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் கைது!

வவுனியா நெடுங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நுழைந்து கொள்ளையிட்டார் என்ற குற்றசாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் வவுனியா பொலிசாரினால் கைது செய்யபட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது , வவுனியாவிலுள்ள அரச விடுதியில் தங்கியுள்ள அரச உத்தியோகஸ்தரை குறித்த இராணுவ சிப்பாய் சந்தித்து இலத்திரனியல் பொருள் ஒன்றினை வழங்கி அதனை விற்று தருமாறும் பின்னர் வந்து...
Loading posts...

All posts loaded

No more posts