Ad Widget

யாழ். இந்திய துணைத்தூதுவராலய கலாசார உத்தியோகஸ்தரின் மகன் கடத்தப்பட்டு விடுதலை

தனது மகன் நேற்று வெள்ளிக்கிழமை வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து மீட்கப்பட்டதாக யாழ். இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் கலாசார உத்தியோகத்தரான பிரபாகரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.யாழ். பிரபல பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் 14 வயதான இம்மாணவன், நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து...

யாழில் சடலங்கள் மீட்பு

(more…)
Ad Widget

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் இரும்புக்கம்பித்தாக்குதல்! மாணவர்கள் முற்றுகைப்போராட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கோண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று...

திருடப்பட்ட தொலைபேசி, தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் 12 மணித்தியாலயத்திற்குள் கண்டுடிப்பு

யாழ். காரைநகர் பிரதேச செயலரின் தொலைபேசியைத் திருடியதாக கூறப்படும் நபரை யாழ். பொலிஸார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் இன்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளனர் யாழ். நகரப்பகுதியில் வைத்து இன்று செவ்வாய்கிழமை காலை காரைநகர் பிரதேச செயலரின் கைப்பையில் இருந்த சுமார் 66 ஆயிரம் ரூபா பெறுமதியான தொலைபேசி திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது. (more…)

யாழில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பண மோசடி செய்த சுதந்திர கட்சி முக்கியஸ்தர் கைது

யாழ். மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக, இளைஞர் யுவதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியிருந்த சுதந்திரக்கட்சி முக்கியஸ்தரை யாழ்.பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிய போது, தனது அரச கட்சி என்ற பெயரை பாவித்து இளைஞர் யுவதிகளிடம் மோசடி செய்துள்ளார். (more…)

பகிடிவதையால் யாழ். பல்கலைக்கழக மாணவன் வைத்தியாசாலையில் அனுமதி

யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட முதலாம் வருட கலை பீட மாணவன் படுகாயமடைந்த நிலையில் வியாழக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.பல்கலைக்கழகத்திற்குள் வைத்து குறித்த மாணவனை சிரேஸ்ட மாணவர்கள் பலர் தாக்கியுள்ளதாக குறித்த மாணவனின் பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். (more…)

சிறுமியை கொன்ற நபருக்கு அதிஉயர் தண்டனை தாருங்கள் நீதிமன்றில் பெற்றோர் உருக்கம்

நெடுந்தீவில் 13 வயதுச் சிறுமியைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு அதி உயர் தண்டனை வழங்கும்படி நேற்று நீதிமன்றில் வலியுறுத்தினர் சிறுமியின் பெற்றோர். நீதிமன்றில் நீதிவான் ஆர்.எஸ்.மகேந்திரராஜா முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய், தந்தை மற்றும் சடலத்தை முதற்கண்ட சாட்சி ஆகிய மூன்று பேரினதும் சாட்சியங்கள்...

இலத்திரனியல் காட்சியறையில் இருந்து பணத்தைத் திருடிய நபர் பிடிபட்டார்

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல இலத்திரனியல் காட்சியறையில் இருந்து பணத்தைத் திருடிய நபர் கையும் களவுமாக பிடிபட்டார்.இவர் தற்போது யாழ். காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இது குறித்து தெரிய வருவதாவது, இன்று காலை குறித்த இலத்திரனியல் காட்சியறைக்கு வந்த நபர் இலத்திரனியல் பொருள் ஒன்றை கொள்வனவு செய்து விட்டு பணத்தினை செலுத்த போயுள்ளார்....

வன்புணர்வின் பின் தலையைக் குத்திச் சிதைத்து நெடுந்தீவு சிறுமி லக்சினி கொடூரமாகக் கொலை;

நெடுந்தீவைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி ஜேசுதாசன் லக்சினி, கொடூரமாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கல்லால் குத்தி தலை சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்று நேற்று நடத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் கொலை தொடர்பான சந்தேகத்தில் ஒருவரை நேற்றுமுன்தினம் இரவே நெடுந்தீவு மக்கள் மடக்கிப்பிடித்துக் கடுமையாகத் தாக்கியவேளை, கடற்படையினரும் பொலிஸாரும் தலையிட்டு அந்த நபருக்கு உயிராபத்து...

பணத்தைச் சுருட்டி தமிழ் இளைஞர்களை டோஹோவில் அநாதரவாக்கியவர் கைது;

இலங்கையிலிருந்து 269 பேரை கனடாவுக்கு அனுப்புவதாக ஆசைகாட்டி பலகோடி ரூபாவைச் சுருட்டிக் கொண்டு ஆபிரிக்க நாடுகளான டோஹோ மற்றும் மாலி முதலான நாடுகளுக்கு கூட்டிச்சென்று அநாதரவான நிலையில் அவர்களைக் கைவிட்ட பிரதான சந்தேக நபரான அருணகிரிநாதன் ஜெயரூபனைக் கைதுசெய்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பலகோணங்களிலும் விசாரணைகளை முடுக்கிவருவதாகவும் கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யாழில் தொலைக்காட்சி இணைப்புக்களைப் பெற்றுத்தருவதாக மோசடி

யாழ்ப்பாணத்திலிருந்து தொலைக்காட்சி சேவை நடத்திவரும் நிறுவனமொன்று விநியோகித்த டொல்பின் தொலைக்காட்சி சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தொலைகாட்சி சேவைக்கென பெருமளவு பணத்தைச் செலுத்தி இணைப்புக்களை வாங்கிய பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, (more…)

கணவனை பிணையில் எடுக்க தாயின் நகைகளை திருடிய பெண் கைது

தாயின் தங்கநகைகளைத் திருடிய மற்றும் தங்கநகைகளை திருடுவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவருக்கு தலா 1,500 ரூபா அபராதத்துடன், 4 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ். ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். (more…)

தாலியை நான்கு துண்டுகளாக பங்கிட்டு விற்ற இளைஞர்கள் ஏழுபேர் கைது

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தங்கத் தாலிக் கொடி ஒன்றை நான்கு துண்டுகளாக வெட்டி அதை தங்க விற்பனை நிலையத்தில் விற்பனை செய்த ஏழு பேரை யாழ்.பொலிஸார் புதன்கிழமை கைது செய்து யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.தங்கத் தாலியை களவு எடுத்து விற்பனை செய்த சந்தேக நபர்கள் ஏழுபேரையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

பருத்தித்துறையில் 17 வயது மாணவி கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை; வீட்டுக்கு அருகே சடலம் கண்டுபிடிப்பு

பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றிரவு அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.பருத்தித்துறை சக்கோட்டையைச் சேர்ந்த இருதயநாதர் மேரி டிலக்சனா (வயது 17) என்ற மாணவியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அல்வாய் வடக்கு...

நல்லூரில் நேற்று இரவு வாள் முனையில் திருட்டு

கச்சேரி நல்லூர் வீதியில் நாலாம் சந்திக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 3 லட்சம் ரூபா பணம் மற்றும் 10 பவுண் தங்க நகைகள் என்பன திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தெடர்பாக மேலும் தெரியவருவதாவது (more…)

மின்சாரசபைக்கு எதிராக பாவனையாளர்கள் மூவர் வழக்குத்தாக்கல்

இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு எதிராக மின்பாவனையாளர்கள் மூவர் வழக்கு தாக்கல் செய்திருப்பதாக யாழ்.மவட்ட நீதிமன்றப் பதிவாளர் எஸ். ரெட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்டத்தில் சட்ட விரோத மின்பாவனையாளர்கள் அண்மையில் கைது செய்தமை தொடர்பாக பிரபல வர்த்தகர்கள் இந்த வழக்கைத் தொடுத்திருப்பதாகவும் அவர்களுக்கான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக யாழ்.நீதவான்...

கணவன் – மனைவி வெட்டிக்கொலை நீர்வேலியில் பயங்கரம்!காணியே காரணம்! சகோதரன் கைவரிசை!

நீர்வேலிப்பகுதியில் நேற்று இரவு 8.15 மணியளவில் கணவன் – மனைவி இருவரும் வெட்டிகொலை செய்யப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த மகன் வெட்டுக் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணி பிரச்சனை காரணமாக சகோதரனே தனது சகோதரியையும் மைத்துனரையும் வீதியில் வழிமறித்து வெறியாட்டம் ஆடி வெட்டிப்படுகொலை செய்திருப்பதாக முந்திக்கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. (more…)