- Thursday
- November 21st, 2024
யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் சிறுகுற்றம் புரிந்த 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.இ.எரிக்பெரேரா தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகளுக்கு எதிராக தலா 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)
வல்வெட்டித்துறையில் புலிக்கொடி பறந்தமை தொடர்பில் எவரும் கைது செய்ய்படவில்லை புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார். (more…)
டெங்குநுளம்பு பரவக்கூடிய சூழலை வைத்திருந்தததாகக் கூறப்படும் 12 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)
வல்வெட்டித்துறைக் கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள சிறுதொழில் புரிவோருக்கும் பெரும் தொழிலில் ஈடுபடுவோருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. (more…)
கனடா மொன்றியலில் யாழ். அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து 37 வயதுடைய யாழ். அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன் யோகராணி என்பவர் வாகனத்துடன் சேர்த்து எரிக்கபட்டுள்ளதாக மொன்றியல் போலிசார் தெரிவிக்கின்றனர். (more…)
யாழ், வேலணை பகுதியைச் சேர்ந்த சதாசிவம் லோகேஸ்வரன் (வயது 35) என்பவர் புதன்கிழமை அதிகாலை முதல் காணாமல் போயுள்ளார் என யாழ் மனித உரிமை ஆணைக்குழுவிலும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் குறித்த நபரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை அழைத்துச் சென்றதாகவும் அதன்பின்னர் அவர்...
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் போலிச் சாமியார் ஒருவரை நம்பி குடும்பமொன்று தங்க நகைகளைப் பறிகொடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் நகரத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கியிருந்த சாமியார் ஒருவர் மக்களின் கஷ்டங்களை நீக்குவதாகக் கூறி சுய விளம்பரம் செய்து வந்துள்ளார். இவ்விளம்பரத்தைப் பார்த்து, இவரை நம்பிய ஒரு குடும்பத்தினர் தமது கஷ்டங்கள் குறித்து சாமியாரிடம் தெரிவித்துள்ளனர். (more…)
கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ். நகரப்பகுதயில் 725 கிராம் கஞ்சாவுடன் ஆட்டோ ஒன்றில் பயணம் செய்த வேளையில், யாழ். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவரே கைது செய்யப்பட்டு, யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து...
தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவியொருவருடைய மேல் ஆடைக்குள்ளே கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை எழுதிப் போட்ட சிங்கள இளைஞர்களைத் தட்டிக்கேட்ட தமிழ் இளைஞர்களைப் சாவகச்சேரிப் பொலிஸார் அடித்து அதட்டியுள்ளனர்.இச்சம்பவம் இன்று 8 மணியளவில் யாழ். கைதடிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. (more…)
தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு எதிராக லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.தேசிய சேமிப்பு வங்கி மற்றும் தி பினான்ஸ் கம்பனிக்கும் இடையிலான பங்குக் கொடுக்கல், வாங்கல் விவகாரங்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொள்வதற்காக தேசிய சேமிப்பு...
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான விசாரணைகளை இரகசிய காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் பொருட்டு காவற்துறையினரும், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும் இணைந்து உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் கணனிகளை பரிசோதனைக்கு உட்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
லொத்தர் பரிசு கிடைத்திருப்பதாக கூறி, இலங்கையர்களை ஏமாற்றிய நைஜீரிய பிரஜையொருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். (more…)
முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரான காலம் சென்ற அநுருத்த ரத்வத்தையின் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தலிருந்து இரகசியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட எட்டுக் கோடி ரூபாவையும் குறித்த தனியார் வங்கியிடமே ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ச நேற்று உத்தரவிட்டுள்ளார். (more…)
வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச சபையின் பதிய கட்டித்தின் மீது ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி முனையில் காவலர்களை கட்டி பற்றையில் போட்டுவிட்டு கட்டிடத்தின் மீது கழிவு ஒயில் ஊற்றியுள்ளார்கள். இன்று புதன் கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெள்ளைவானில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள்...
வவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் இருந்த நிலையில் மரணமடைந்த மரியதாஸ் டில்ருக்சனது (வயது 36)பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை அவரது சொந்த இடமான யாழ். பாஷையூரைச் சென்றடையவுள்ளது. (more…)
யாழ். கோப்பாய் தெற்கில் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணொருவர் இனந்தெரியாதவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதோடு அவரது நகைகளும் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளன.இச்சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. (more…)
இலங்கை மக்கள் வங்கியின் யாழ். பல்கலைக்கழக கிளையில் கடமையாற்றிய ஊழியர் ஒருவர் கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த 7 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் தலைமறைவாகியுள்ளார்.இந்தச் சம்பவம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, (more…)
யாழில் கோயில்களில் அண்மைக்காலமாக சிலைகள், விக்கிரகங்கள், வாகனங்கள் என்பவற்றைக் கொள்ளையிட்ட குழு ஒன்றை காவற்துறையினர் கைதுசெய்துள்ளதுடன் களவாடப்பட்ட பொருட்களையும் யாழ். காவற்றுறையினர் மீட்டுள்ளனர்.அதனடிப்டையில் அவர்களால் களவாடப்பட்ட பிள்ளையார், அம்மன் சிலைகள் மற்றும் ஒரு தொகுதி கோயில் வாகனங்கள் என்பன யாழ். புகையிரத வீதியை அண்மித்துள்ள மரக்காலை ஒன்றிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts