- Thursday
- January 23rd, 2025
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வர்த்தக நிலையம் முன்பாக நிறுத்தி விடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் செல்ல முயற்சித்தவரை வர்த்தகர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். கஸ்தூரியார் வீதியில் உள்ள நகை கடை ஒன்றில் நகைத் தொழில் புரியும் இளைஞன், மோட்டார் சைக்கிளை வீதியோரம் நிறுத்தி விட்டு கடையில் பணியில் ஈடுபட்டிருந்தார் . இதன் போது வீதியால்...
குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களை கவனத்தில் எடுத்து இயற்கை நீதியின் பிரகாரம் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட கைதிக்கு தண்டனைத் தணிப்பு வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தீர்ப்பளித்தார். இலங்கை நீதித்துறை வரலாற்றில் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த கைதி ஒருவருக்கு அதனை இயற்கை நீதியின் பிரகாரம் அதே நீதிமன்று தண்டனைத்...
யாழ்ப்பாணம் நகரில் வர்த்தகரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான ரோசான் தமீம் கஞ்சா போதைப் பொருளை விற்பனைக்காக தயார்படுத்தி வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.நகரில் முக்கிய புள்ளி ஒருவர் கஞ்சா வியாபாரத்தில் கொடி கட்டிப்பறக்கிறார் என்று தகவல் அறிந்து கொழும்பு போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவினர் யாழ்ப்பாணத்துக்கு...
சிறுமியைக் கடத்த முயற்சித்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடிய ஒருவர் நாவந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போதும் அங்கிருந்து அவர் தப்பி சென்றுள்ளார். தப்பிச் சென்றுள்ளவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சமையல் வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கு...
சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் என்ற குற்றம்சாட்டி குடும்பத்தலைவர் ஒருவரை நாவந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு கட்டிவைக்கப்பட்டுள்ளார். அந்த நபர் கடந்த வாரம் நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியை கடத்திச் செல்ல முற்பட்டார் என்றும் இன்றும் அதே நோக்கோடு அந்தப் பகுதிக்கு வந்தார் என்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம்...
யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காலாவதியான உணவுப் பண்டங்களை அகற்றல் மற்றும் சுகாதாரக் கேடான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கோடு சுகாதாரப் பரிசோதகர் என போலி அடையாள அட்டையைத் தயாரித்து பணியாற்றிவந்த இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு சுகாதாரச் சீர்கேடு தொடர்பில் பலமுறை முறைப்பாடு செய்தும் நடவடிக்கை...
பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம் என்றும் அது சமூகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவம் என்றும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் சுட்டிக்காட்டினார். அத்தோடு சந்தேகநபரின் பிணை மனுவையையும் நிராகரித்த நீதவான் குறித்த நபரின் விளக்கமறியலையும் நீடித்து உத்தரவிட்டுள்ளார். கொக்குவில் பகுதியில் பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தினார் என்று...
சம்பவமொன்றில் காயமடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சையளித்தார், இன்னொரு உறுப்பினருக்கு அடைக்கலமளித்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த பெண் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] வட்டக்கச்சியை சேர்ந்த பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரும், ஏற்கனவே பொலிசாரால்...
விடுதலைப் புலிகளின் கரும்புலி படையணியின் கறுமையான வரி சீருடையுடன் புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞர்களே கைதாகியுள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] வடக்கில் புலிகள் மீளக்கட்டியெழுப்பப்படுவதை போல தோற்றத்தை காண்பித்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதியை பெறவே இவர்கள் நாடகமாடியிருக்கலாமென பொலிசார் தெரிவித்துள்ளனர். தகவல் ஒன்றை...
கொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்குச் சென்று தலைமறைவாகியிருந்த சந்தேகநபர், நேற்று வான் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது வானையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த நபரை கோப்பாய் பொலிஸ்...
காணித் தகராறு ஒன்று கைகலப்பாக மாறியதில் அரச உத்தியோகத்தர்கள் இருவரின் தாக்குதலுக்கு உள்ளான முதியவர் சிகிச்சை பயனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கொடிகாமம் வடக்கு எழுதுமட்டுவாழில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் வடக்கு எழுதுமாட்டுவாளைச் சேர்ந்த செல்லன் சின்னத்துரை (வயது-78) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். அதே இடத்தில் காணித்தகராறு கைகலப்பாக மாறியதில்...
யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே வழித்தட அனுமதிப்பத்திரமின்றி அதிசொகுசு பயணிகள் பேருந்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து உரிமையாளருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் தீர்ப்பளித்தார். பேருந்து உரிமையாளரின் சிறைத் தண்டனையை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த நீதிமன்று ஒரு லட்சம் ரூபா தண்டம் செலுத்துமாறு உத்தரவிட்டது....
சாவகச்சேரியில், நிறைமாதக் கர்ப்பிணியின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.சாவகச்சேரி கெற்போலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை குறித்த தாக்குதல் நடைபெற்று உள்ளது. அது குறித்து தெரியவருவதாவது, தாக்குதலுக்கு இலக்கான பெண்ணும், தாக்குதல் நடத்தியவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், குறித்த பெண் கர்ப்பம் அடைந்த நிலையில் அந்த பெண்ணை...
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த நகைத் திருட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடமிருந்து ஒரு தொகுதி தங்க ஆபரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். குடாநாட்டின் பல இடங்களிலும் அண்மைய நாட்களில் வழிப்பறிகளும் நகைத் திருட்டுக்களும் இடம்பெற்று வந்தநிலையில் அவை தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலைய குற்றத்தடுப்பபு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில்...
அநுராதபுரம் வில்பத்து பிராந்திய கஜபா படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் ஜயந்த சுரவீர உள்பட 4 இராணுவத்தினரும் 4 வன அலுவலர்களும் கொல்ப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சூரியகாந்தன்...
வலி.வடக்கில் வீட்டிலிருந்த பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று, வீட்டின் கூரையை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த 27 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்டதுடன், வீட்டிலிருந்த பதின்ம வயது சிறுமி ஒருவரையும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு...
யாழ்.பிரதான வீதியில் நகை கடை ஒன்றுக்குள் புகுந்த குழு ஒன்று கடையின் உரிமையாளர், உரிமையாளரின் மனைவி மற்றும் மைத்துனன் ஆகியோரை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு, பொலிஸாருடைய பிடியில் இருந்து லாவகமாக தப்பி சென்றிருக்கின்றது. நேற்று முன்தின்ம் மாலை 6 மணியளவில் யாழ்.பிரதான வீதியில் நகை கடை ஒன்றில் நகை செய்ய கொடுத்த வாடிக்கையாளர்கள் சிலர் கடைக்கு வந்துள்ளனர்....
கிளிநொச்சி பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] யுத்தத்தின் போது ஒரு காலையும் இழந்த குறித்த நபர் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு...
போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவியில் கிணறு அமைக்க வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் விநியோகத்தின்போது லஞ்சம் பெற்ற பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவின் பெண் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் கையும்களவுமாக கைது செய்யப்பட்டார். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] பூநகரிப் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தான பெண் உத்தியோகத்தர்...
மனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்ட இளம் குடும்பத்தலைவரை வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் தெற்கை சேர்ந்த இளம் குடும்பத்தலைவர் ஒருவர் தனது மாமனாருக்கு (மனைவியின் தந்தை) அடித்து அவரது தலையில் காயத்தை ஏற்படுத்தி உள்ளார். அதனால் காயங்களுக்கு இலக்கானவர் தாக்குதலாளியிடமிருந்து, தப்பித்து கோப்பாய் காவல்...
Loading posts...
All posts loaded
No more posts