Ad Widget

உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் மீது தாக்குதல்! பத்திரிகைகளும் எரிப்பு

உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்கப்பட்டுள்ளதுடன் பத்திரிகைகளும் மோட்டார் சைக்கிளுடன் வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் மாலுசந்திப் பகுதியில் நடைபெற்றுள்ளது. (more…)

ரிசானா நாபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது

சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாக சென்ற ரிசானா நாபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.இந்தத் தகவலை வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.நான்கு மாத சிசுவொன்றை கொலை செய்த குற்றத்திற்காக ரிசானாவிற்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் ரிசானாவிற்கு 2007ம் ஆண்டு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. (more…)
Ad Widget

40 இலட்சம் ரூபா மோசடி குற்றச்சாட்டில் இருவர் கைது

யாழ். வியாபாரியொருவரை ஏமாற்றி 40 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர் இருவரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மஜிஸ்திராத்தும் மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிகா மாரப்பன உத்தரவிட்டார். (more…)

புத்தூரில் வீடு புகுந்து தாக்குதல்: ஒருவர் படுகாயம்

புத்தூரியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

தெல்லிப்பளை, தோதரை அம்மன் ஆலயத்தில் திருட்டு

தெல்லிப்பளை, தோதரை அம்மன் ஆலய ரிஷப வாகனம் திங்கட்கிழமை திருடப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல்; சந்தேகத்தில் மூவர் கைது

பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 3 பேரை கைது செய்தள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி விக்கிரமாரச்சி தெரிவித்தார். (more…)

காணாமல்போன மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி காரைநகரில் சடலமாக மீட்பு!

சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மன நிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் இன்று காரைநகரின் கண்டல் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் சங்கானை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இராசதுரை கஜேந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்.காரைநகரில் உள்ள பாலகாட்டுப் பகுதியில் பாழடைந்த கிணற்றில் இருந்து இந்த இளம்...

மூளாய் விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் சாவு

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலகி பனை மரத்துடன் மோதி விபத்துக் குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் மூளாய் மேற்கு சுழிபுரத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இதில் அதே இடத்தைச் சேர்ந்த தம்பிராசா வைகுந்தகுமார் (வயது30) என்ற இளைஞர் உயிரிழந்தார்.வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் பனை மரத்துடன் மோதியுள்ளது. (more…)

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது; 3 வாள்கள் மீட்பு

காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அந்தேக சபரின் வீட்டில் இருந்து 3 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ.எரிக் பெரேரா தெரிவித்தார்.  (more…)

மாதாந்த கட்டணம் செலுத்தாவிடின் உடனடியாகவே மின்சாரம் துண்டிப்பு

மின்பாவனையாளர்களுக்கான மின் கட்டண நடவடிக்கைகள் இந்த வருடம் தொடக்கம் மேலும் இறுக்கமடைகிறது. சுன்னாகம் மின் பொறியியலாளர் ஞானகணேசன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: (more…)

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 66 பேர் கைது

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கருதப்பட்ட 66 பேர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். (more…)

கத்திக் குத்தில் இளைஞர் பலி; 15 வயது சிறுவன் கைது

யாழ். பாஷையூர் பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவமொன்றில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் பாசையூர், மூன்றாம் குறுக்குதெருவை சேர்ந்த ஏ.பி.தனுஷ் தயாளன் என்பவரே உயிரிழந்துள்ளார். (more…)

அசிட் வீசியது முன்னாள் இராணுவ அதிகாரி ஜெயக்கொடியே; துவாரகேஸ்வரன் முறைப்பாடு

முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரரும், பிரபல வர்த்தகருமான தியாகராசா துவாரகேஸ்வரன் (வயது41) மீது நேற்று சனிக்கிழமை நல்லூரில் வைத்து அசிட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது தெரிந்ததே.இந்தத் தாக்குதல் சம்பவம் யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயிலின் முன்பாக நேற்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது. (more…)

யாழில் ஆயுதமுனையிலும் கொள்ளை

யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 11 இலட்சத்து 29 ஆயிரத்து 600 ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் உபகரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரி தெரிவித்தார். (more…)

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 37பேர் யாழில் கைது

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 37பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.மேலும் சட்டவிரோத மது உற்பத்தி செய்த நபர் ஒருவரும், கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்த இரண்டு பேரும், (more…)

சகோதரியின் காணி மோசடி; சகோதரன் கைது

யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்கு, பகுதியில் உள்ள காணியொன்றை மோசடி செய்து விற்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரை குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்துள்ளனர்.பிரான்ஸில் உள்ள சகோதரியின் காணியை மோசடி செய்தார் என்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கிணங்கவே குறித்த சந்தேகநபர் புதன் இரவு கைது செய்யப்பட்டுள்ளார் (more…)

முச்சக்கரவண்டி சாரதிகள் மீது 220 முறைப்பாடுகள் பதிவு

முச்சக்கரவண்டி சாரதிகள் குறித்த 220 முறைப்பாடுகள் யாழ். பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார்.முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான கலந்துரையாடல் நேற்று யாழ். தம்பர் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். (more…)

யாழில் நிறுத்தி வைக்கப்பட்ட லொறியில் இருந்து பொருட்கள் மாயம்

யாழ். நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் இருந்து பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.யாழ். நகரில் உள்ள ஹட்டன் நசனல் வங்கிக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் இருந்து 73 ஆயிரத்து 208 ரூபா பெறுமதியான பொருட்கள் களாவாடப்பட்டுள்ளதாக (more…)

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவருக்கு யாழ். நீதிமன்றத்தினால் 89 ஆயிரம் அபராதம்

சட்டவிரோதமான முறையில் இழுவை மடியினைப் பாவித்த ஐவருக்கு எதிராக தாக்கல் செய்யப்ட்ட வழக்கில் யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி 89 ஆயிரம் ரூபா அபாராதம் விதித்ததுடன் பயன்படுத்தப்பட்ட வலைகளையும் எரித்து அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். (more…)

யாழ். மற்றும் காங்கேசந்துறையில் 133பேர் கைது

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் இருந்து சிறுகுற்றம் புரிந்த 133பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெப்ரி தெரிவித்தார்.இதன்போது, கடந்த வாரத்தில் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 43 பேரும், அடிகாயம் ஏற்படுத்திய 33 பேரும், (more…)
Loading posts...

All posts loaded

No more posts