தலைமறைவாகியிருந்த வாள்வெட்டு வன்முறைகளின் பிரதான சந்தேகநபர் சிக்கினார்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு வன்முறைகளின் பிரதான சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை அதிகாலை தனங்களப்பில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 வாள்கள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தலைமறைவாகியிருந்த இந்தச் சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர்....

மட்டுவில் தாக்குதல் சம்பவம் – மூவர் கைது

சாவகச்சேரி மட்டுவில் கிழக்கு பிரதேசத்திலுள்ள வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர், பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர் வழங்கிய தகவலையடுத்து, மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்....
Ad Widget

கிளி.கொலை சம்பவம் – வெளிநாட்டுக்குச் செல்ல முற்பட்ட சந்தேகநபர் கைது

கிளிநொச்சி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக, ஒரு பிள்ளையின் தந்தையான காந்தலிங்கம் பிரேம ரமணன் என்பவர் நேற்று கொலை செய்யப்பட்டிருந்தார். கொலை செய்யப்பட்டவருக்கும் அவரது மைத்துனருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார்...

வாள்வெட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசுக் கட்சி உறுப்பினருக்கு பிணை!

வாள்வெட்டு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் உட்பட ஐந்து பேரையும் பிணையில் விடுவிக்க மல்லாகம் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். உடுவில் அம்பலவாணார் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் புகுந்து 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டது. 3 மோட்டார்...

காலாவதியான தண்ணீர்ப் போத்தல்கள் விற்பனையில்…

காலாவதியான தண்ணீர்ப் போத்தல்களை விற்பனைக்கு வைத்திருந்த ஹோட்டல் முகாமையாளருக்கு நீதிவானால் 4 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்டுள்ள குடிதண்ணீர்ப் போத்தல்களை அழிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை மதிப்புறுத்தும் நிகழ்வு யாழ்ப்பாண நகர் ஆசீர்வாதம் வீதியிலுள்ள பிரபல்யமான விடுதி மண்டபத்தில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்றது. வங்கி ஒன்றால் நடத்தப்பட்ட...

பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் நால்வர் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து வாள் மற்றும் கோடரியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (20) இரவு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அவர்களது வீடுகளிலேயே வைத்து கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 2...

சமரச முயற்சி தோல்வி! – ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது!

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட, கோப்பாய் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாரினால் இன்று (புதன்கிழமை) காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியான குணரத்தின என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் கருவேப்புலம் வீதியில், வீடொன்றின் மீது இனந்தெரியாத குழுவினரால் நேற்று பெற்றோல் குண்டுத்...

ஊடகவியலாளரை தாக்கியமைக்காக பொலிஸ்நிலைய பதில் பொறுப்பதிகாரியை கைதுசெய்ய உத்தரவு

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு சென்று காணொளிப் பதிவில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு...

மாணவிக்கு பாலியல் வதை: கைதாகிய ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவு!

பதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவியை தண்டிப்பதாக அவரது உடலில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

யாழில் திருடப்பட்ட பிரதமரின் செயலாளரின் தொலைபேசி மீட்பு!!!

பிரதமரின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, அவருடைய செயலாளரடமிருந்து திருடப்பட்ட ஸ்மார்ட்போன் பொலிசாரால் நேற்று (17) மீட்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் வைத்து தொலைபேசியை பொலிசார் மீட்டனர். ஸ்மார்ட்போனை திருடிய கில்லாடியும் அடையாளம் காணப்பட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். 14ம் திகதி மாலை யாழ் போதனா வைத்தியசாலையின்...

10 வீதி போக்குவரத்து மீறல்களுக்கு ரூபா 25,000 தண்டம்!

மதுபோதையில் வாகனம் செலுத்துதல், காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி வாகனம் செலுத்துதல் ரயில் பாதுகாப்புக் கடவையில் சமிஞ்சை விளக்குகள் எரியும் போது வாகனத்தை ஓட்டிச்செல்லல் உள்ளிட்ட 10 பெரியளவிலான போக்குவரத்து விதி மீறல்களுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிப்பதற்கான சட்டவரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்தச் சட்டவரைவு விரைவில் நாடாளுமன்றுக்கு முன்வைக்கப்படவுள்ளது. வீதிப் போக்குவரத்தில்...

பொது இடங்களில் வெடி கொளுத்துவது தவறாகும் – யாழ் நீதிமன்ற நீதிவான்

பொது இடத்தில், வீதிகளில் வெடி கொளுத்துவது தவறாகும். இறுதி ஊர்வலமாக இருந்தாலும் சரி வெடிகொளுத்தும் போது பொதுநலனைக் கருத்தில் எடுக்கவேண்டும். வீதியில் பயணிப்பவர்களுக்கு இடையூறாக வெடிகொளுத்துவதை ஏற்க முடியாது என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இருபாலைச் சந்திப்பகுதியில் பிரதான வீதியூடாகப் பயணித்த வேன் ஒன்றின் கண்ணாடிப் பகுதியில் வெடி வந்து வீழ்ந்ததால்,...

வரணி கொள்ளை: தாக்குதலுக்குள்ளான நபர் வழங்கிய வாக்குமூலத்தின் படி நால்வர் தேடப்படுகின்றனர்!!

“கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணியில் திருட்டுக் குற்றச்சாட்டில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட குடும்பத்தலைவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் தேடப்படுகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், தாக்குதலுக்குள்ளாகிய நபர் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை நிறைவடைந்ததும் அவருக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும்...

தலைக்கவசம் அணியாத பாடசாலை மாணவர்களுக்கு தண்டம்!

தலைக்கவசம் அணியாது பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற 25 பேருக்கு சாவகச்சேரி காவற்துறையினர் தண்டம் விதித்துள்ளனர். யாழில் பெரும்பால இடங்களில் தலைக்கவசம் அணிவிக்காது பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிளில் பலர் ஏற்றி சென்று வரும் நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி காவற் துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொறுப்பதிகாரியின் உத்தரவின் கீழ் போக்குவரத்து காவற்...

தெல்லிப்பளையில் பெண்ணை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது!

தெல்லிப்பளை பகுதியில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதுடன், வீட்டில் இருந்த பெண் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றசாட்டில் இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டுவன் புலம் வீதியில் உள்ள வீடோன்றினுள் கடந்த சனிக்கிழமை வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து அதனூடாக அதிகாலை வேளை உட்புகுந்த மூன்று கொள்ளையர்கள், வீட்டில் நித்திரையில் இருந்தவர்களை எழுப்பி கத்திமுனையில்...

வட மாகாணத்தில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரிப்பு

வட மாகாணத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டை விட 2018 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள புள்ளி விபரம் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சிறுவருக்கெதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள்...

தமிழ் மாற்றுத் திறனாளி பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!!

பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது காவல்துறை உத்தியோகத்தரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு விளக்கமறியலில்...

கிளிநொச்சி மாணவன் விவகாரத்தில் வழக்கை திசைதிருப்பினர் பொலிசார்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் கஞ்சாகடத்தல்காரர்கள் பற்றிய தகவல் வழங்கியதற்காக பாடசாலை மாணவன் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கை பொலிசார் திசைதிருப்பியது அம்பலமாகியுள்ளது. வன்னிப் பிராந்திய பொலிஸ்மா அதிபர் நேற்று முன்தினம் முன்னெடுத்த விசாரணைகளின் போதே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தின் போது, கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாய மாணவன் ஒருவர், தமது வீட்டு சூழலில்...

இரண்டு மாதங்களில் மரண தண்டனை உறுதி – ஜனாதிபதி

எவ்வாறான தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் மரண தண்டனை விதிப்பது உறுதி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார். அவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் வணிகர்களுக்கு இரண்டு மாதங்களில் தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். அத்தோடு மரண தண்டனை விதிக்கும் செயற்பாடுகளில்...

திருடப்போன இடத்தில் குடித்துவிட்டு மக்களிடம் மாட்டிய திருடா்கள்!!

வரணி பகுதியில் வீடு புகுந்து கொள்ளையிட முயற்சித்தவா்கள், வீட்டிலிருந்த வெளிநாட்டு மதுபானத்தை மூக்கு முட்ட குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளனா். நாவற்குழியை சோ்ந்த கொள்ளையா்கள் வரணி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வீட்டிலிருந்தவா்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், கொள்ளையிட முயற்சித்திருக்கின்றனா். இதனையடுத்து அயல் வீட்டவா் என்ன என பாா்ப்பதற்கு...
Loading posts...

All posts loaded

No more posts