07 போக்குவரத்து குற்றங்களுக்கு 25,000 ரூபா அபராதம்!!

போக்குவரத்து குற்றங்களுக்கான குறைந்த பட்ச அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி பத்திரம் வௌியிடப்பட்டுள்ளது.அதன்படி, 1) செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல். 2) மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்துதல். 3) தொடருந்து வீதியினுள் பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்துதல். 4) செல்லுபடியாகும் வாகன காப்புறுதி இன்றி வாகனம் செலுத்தல்....

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கிளிநொச்சியில் கைது!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட சிறுவன் உள்ளடங்கலாக 26 பேர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து குறித்த 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்லவிருந்த நிலையிலேயே கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய...
Ad Widget

சங்கத்தானையில் அட்டகாசம் – இருவரை காவற்துறையினர் துரத்திப் பிடித்தனர்

வீதியில் சென்ற காரொன்றை மாறித்து தாக்க முற்பட்ட குழுவொன்று காரினுள் இருந்து காவற்துறையினர் இறங்கிய போது தப்பியோடியது. தப்பியோடிய இருவரை காவற்துறையினர் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது, சாவகச்சேரி சங்கத்தானை பெருங்குளம் வீதியில் உள்ள வீடொன்றுக்கு விருந்தினர் ஒருவர்...

திறமையான தமிழ் பொலிஸ் அலுவலகர் பழிவாங்கப்பட்டுள்ளார்!!!

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் பிராந்திய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரோஷான் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் மன்னார் இலுப்பைக் கடவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் கடந்த மூன்று மாதங்களில் 200 கிலோ கிராமுக்கு அதிகமான கஞ்சா போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடித்த உப பொலிஸ்...

கல்வி ஆலோசனை நிறுவன இயக்குனருக்கு விளக்கமறியல்!

வெளிநாட்டில் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி 7 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபா மற்றும் சிறுதொகை அமெரிக்க டொலர்களையும் பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்வி ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத்...

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி செய்த நபர் கைது

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணமோசடி செய்த நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான பிரசாத் என்பவரே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத் என்பவர் யாழ்.வேம்படி சந்தி, மத்திய...

பிரான்ஸ் செல்ல முற்பட்ட வடக்கைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் புத்தளத்தில் கைது!!

சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ் செல்லவிருந்த, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் புத்தளத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பொலிஸார் நேற்றிரவு முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 11 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் பயணித்த வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட...

மதுபோதையில் கொலை செய்த நபர் கைது!!!

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் ஆண் ஒருவர் மீது பெட்ரோல் ஊத்தி தீயிட்டதில் அவர் தீப்பற்றி எரிந்து கருகி உயிரிழந்துடன் தீயிட்ட ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது இதில் கண்ணகிபுரத்தை சேர்ந்த 58 வயதுடைய நாகன் சாமியன் என்பவரே உயிரிழந்துள்ளார் விநாயகபுரம் ஒன்பதாம் குறிச்சி வீதியில் மதுபோதையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதை...

தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கைது!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முப்புரம் வட்டாரத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மூலக்கிழை தெரிவின் பின்னர் பொதுமகன் இருவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலீசாரால் தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 31.03.19 அன்று முப்புரம் வட்டார தொகுதியின் மூலக்கிழை தெரிவு நடைபெற்றுள்ளது மூலக்கிழையின் தலைவராக தேவிபுரம் பகுதியினை சேர்ந்த...

பிரமிட் வர்த்தக முறைமை: யாழில் திறக்கப்பட்ட அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை!

மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட வர்த்தக முறைமையான பிரமிட் வர்த்தக முறைமையை ஒத்த வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்குடன் யாழில் திறக்கப்பட்டு உள்ள அலுவலகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி யாழ்.உதவி காவல்துறை அத்தியட்சகரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறித்த வர்த்தக நடவடிக்கைக்காக யாழ் நகரில் புதிதாக அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டு உள்ளது....

யாழில் கஞ்சா மற்றும் ஹெரொயின் போதைப்பொருளுடன் ஐவர் கைது!

யாழில் கஞ்சா மற்றும் ஹெரொயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு துறை பொறுப்பதிகாரி ஜெரோசன் தலைமையிலான பொலிஸ் விசேட குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குறித்த இருவரும் கஞ்சா போதைப்பொருளை கடத்த முற்பட்டபோது கைது...

கீரிமலையில் வாளுடன் நடமாடிய இளைஞர் கைது!

கீரிமலை பிரதேசத்தில் வாளுடன் நடமாடிய குற்றசாட்டில் இளைஞரொருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொல்லன்கலட்டி பகுதியை சேர்த்த 27 வயதுடைய இளைஞனையே பொலிஸார் கைது செய்துள்ளனர். கீரிமலை பிரதான வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில், இளைஞரொருவர் வாளுடன் நடமாடுவதாக அப்பகுதி மக்கள், காங்கேசன்துறை பொலிஸாருக்கு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தகவல் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு...

பொலிஸ் தடுப்பிலிருந்த இளைஞன் தற்கொலை முயற்சி!!!

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் பிளேட்டால் தனது கழுத்தை கீறி தற்கொலைக்கு முற்சித்துள்ளார். அந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் வீடொன்றுக்குள் புகுந்து தீவைத்தனர் – அடாவடியில் ஈடுபட்டனர்...

போலி நிதி நிறுவனத்தை நடாத்தி மக்களின் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்!!

கொடிகாமம் பகுதியில் உள்ள மக்கள் வங்கிக்கு முன்பாக W.S.D (work shop development) என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் மக்களுடைய வீ டுகளுக்குள சென்று சேகாிப்பு திட்டம் என்ப பெயாில் மோசடி வேலையை ஆரம்பித்திருந்தது. இதற்காக அந்த பகுதியை சோ்ந்த சில வறிய குடும்பங்களை சோ்ந்த பெண்களை 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் என...

மரண வீட்டில் வாள்முனையில் கொள்ளை!

அளவெட்டி பகுதியில் மரண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை , பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை யாழ்.அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் இடம்பெற்ற டிப்பார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் அளவெட்டி பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான 21 வயதாக நாகராசா நிதர்சன் என்பவர் உயிரிழந்திருந்தார்....

யாழில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கோவில் வீதியைச் சேர்ந்த குணசிங்கம் ரஜீவ்குமார் என்பவரே இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். வாடகைக் கார் சேவையில் ஈடுபடும் காரை மறித்து குறித்த கும்பல் அந்தக் காரின் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், வேம்படி விதியில் நேற்று...

பொலிஸார் மீது தாக்குதல் – ஐவர் கைது

யாழ்.நகரை அண்டியுள்ள அரியாலை கிழக்கு பகுதியில் மணல் கடத்தல் நடவடிக்கையினை முறியடிக்க சென்ற அதிரடிப்படையினருக்கும், மணல் கடத்தல்காரா்களுக்கும் இடையில் தர்க்கம் மூண்டுள்ளது. மோதலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர். அரியாலை...

யாழில் போலி விமானச்சீட்டு விநியோகித்து பல இலட்சம் மோசடி!!

வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல இலட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு பயண முகவர் நிறுவன முகாமையாளர் தலைமறைவாகி விட்டார் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று (15) முறையிடப்பட்டது. யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பயண முகவர் நிறுவனத்துக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்து 35...

முல்லைத்தீவில் ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொள்ளை!

முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டை உடைத்து கமரா மற்றும் மடிக்கணணிகள் களவாடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளரின் வீட்டில் நேற்று பகல் வேளை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான இரண்டு கமராக்கள் மற்றும் மடிக்கணணி என்பன திருடப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சபம்வம் குறித்து முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில்...

யாழில் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளங்காட்டினார் சாட்சி

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் சாட்சியால் அடையாளம் காட்டப்பட்டனர். இதனையடுத்து சந்தேகநபர்கள் நால்வரின் விளக்கமறியலை வரும் 21 ஆம் திகதி வரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் நேற்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டார். யாழ்ப்பாணம், கொக்குவில் கருவப்புலம்...
Loading posts...

All posts loaded

No more posts