- Tuesday
- January 21st, 2025
பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை (12) அதிகாலை பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட போது குறித்த 12 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், புளியங்கூடல் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 28 வயதான உதவிக் குருக்கள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலயத்தினுள் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண் நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபா பணம் என்பன காணாமல் போயிருந்தன. இது தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில்...
காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும் என பொய் கூறி யாசகம் பெற்ற தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , கல்வியங்காடு சந்தை பகுதியில் 4 வயது சிறுமியை சக்கர நாற்காலியில் இருத்தி , சிறுமியின் இரு சிறுநீரகங்களுக்கு பழுதடைந்துள்ளதாகவும் , அதற்கான...
நீண்டகாலமாக AT தங்கும் விடுதி எனும் பெயரில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.சுண்டுக்குளி மகளிர் பாடசாலைக்கு அருகில் தங்கும் விடுதி எனும் பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியே நேற்று (24) புதன்கிழமை இரவு சுற்றி வளைக்கப்பட்டது. இதன்போது, விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களும், விபச்சார விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்....
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் ஆட்டோ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் பலாலி வீதியில், திருநெல்வேலி நொதேன் வைத்தியசாலை அருகில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோதும் பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில்...
போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் (08.05.2023)ஆம் திகதி யாழ்ப்பாணம் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் பெண்கள் தங்கும் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மின்னியல் அச்சு இயந்திரத்தை வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட வேளையிலே இளைஞர் கைது...
வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹஏஎஸ் வான் ஒன்றும் மற்றும்ங3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் யகத்...
தீவகத்தில் முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். [caption id="attachment_99954" align="aligncenter" width="1000"] Arrested man in handcuffs with hands behind back[/caption] அவரது மோசடிக்கு துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர்...
யாழ். நெடுந்தீவு பகுதியில் வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறிந்த சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் படுகொலை செய்யப்பட்டவர்களின் வீட்டில் தங்கியிருந்த நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது....
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில் இன்று(22) காலை ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.3 பெண்களும் இரண்டு ஆண்களும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை இனந்தெரியாத சிலர் குறித்த வீட்டுக்குள் பிரவேசித்து இந்த கொலையை புரிந்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொலையுண்டவர்களில் 3 பேர் வெளிநாடொன்றில்...
அச்சுவேலி - தென்மூலை பகுதியில் சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சட்ட மருத்துவ வல்லுனர் முன்னிலையில் இடம்பெற்ற பரிசோதனையில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டமை மற்றும் சிறுமி போதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது. அச்சுவேலி தென்மூலை...
யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்தும் நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். அளவெட்டியைச் சேர்ந்த அவரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். மீட்டர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி...
யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ள நிலையில் , இருவேறு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவில் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர், வீதியில் சென்ற பெண்ணொருவரின் 3 இலட்ச ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி , மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில்...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் - வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருடுவதற்கு சென்ற திருடர்கள் அங்கு சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிற்கு திருடச் சென்ற திருடர்கள் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அங்கு சமைத்து சாப்பிட்டு, மது அருந்திவிட்டு போதையில் தூங்கிவிட்டனர். இந்நிலையில் நேற்றையதினம் காலை வீட்டின் உரிமையாளர்...
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் 30 வயதான குடும்பஸ்தர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தந்தை , தனது 7 வயதான மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து , மது போதையில் மகளை...
யாழில் இயங்கி வரும் ஆயுதமேந்திய கும்பலைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் மூன்று கூரிய வாள்களுடன் யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்.பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், தாவடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்....
யாழ்ப்பாணத்தில் 13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த 13 வயது சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாகி உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த...
யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத செயலில் ஈடுபட்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உட்பட ஐவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி குற்றச்செயலில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இந்த கைது...
நல்லூர் கந்த சுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கியை அபகரித்துச் சென்ற பெண் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் கொள்ளையிட்ட 4 லட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறினர். இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற நிலையில்...
ஆசிரியர்களை அவர்களது வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை மாத்திரமே செலுப்படியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு இதற்கான அதிகாரத்தை வழங்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்று...
Loading posts...
All posts loaded
No more posts