யாழ்.முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் கடல் வாழ் உயிரினங்களை உற்பத்தி செய்வதற்கான பண்ணைகள் அமைப்பதற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் முயற்சியாளர்களை ஈடுபடுமாறு யாழ்.வணிகர் கழகம் கோரியுள்ளது. மேலும் குறித்த வளங்களின் ஊடாக பொருளாதாரத்தை உயர்ந்த முடியும் எனவும் அந்த கழகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக யாழ்.வணிகர் கழகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சிமென்ட் விலை அதிகரிக்கப்படுமா?

பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சிமென்ட் விலையை அதிகரிக்க இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தைப்படுத்தல், கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண இதனை தெரிவித்துள்ளார். இந்த பொருட்களை பொதுமக்களுக்கு தற்போதுள்ள விலையில் விற்பனை செய்வதற்காக அரசாங்கம் ஏற்கனவே, சில...
Ad Widget

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்குமா? அரசாங்கத்தின் அறிவிப்பு

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முடிவினை அமைச்சரவை உப குழு எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கோரிக்கை முன்வைத்திருந்தது. இதனை அடுத்து விலையை அதிகரிப்பது தொடர்பாக ஆராய அமைச்சரவை...

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி!!

இணையத்தளம் (online) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, இணையத்தளம் ஊடாக சில அங்காடிகள் மூலம் மதுபானம் விற்பனை செய்ய...

நாட்டில் எரிபொருள் விலையினை அதிகரிப்பதற்கு தீர்மானம்!

நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை அமுலாக்கும் தினம் குறித்து நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வியாபார, தனிநபர் கடன்களுக்கு ஓகஸ்ட் 31ஆம் திகதிவரை சலுகை!!

கோவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு, பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு 2021 ஓகஸ்ட் 31ஆம் திகதிவரை முதல், வட்டி அல்லது இரண்டினையும் அறவிடுவதைப் பிற்போடுமாறு இலங்கை மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சலுகை மே மாதம் 15ஆம் திகதியிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்துமாறு மத்திய...

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் அனைத்து பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள், வரி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவையை அடிப்படையாக கொண்டே குறித்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன குறிப்பிட்டார். எண்ணெய் மற்றும் வெண்ணெய்க்கு அதிக வரி...

வங்கிக் கடனை செலுத்தாவிட்டால் சொத்துக்களை கையகப்படுத்துவதா? பிரதமரின் அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மற்றும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக வங்கிக் கடன்களை செலுத்தாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக சலுகை காலம் வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வங்கி பிரதானிகளுக்கு தெரிவித்தார். வங்கி கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக...

20 ரூபா நாணய குற்றி புழக்கத்துக்கு வருகிறது!!

இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயத்தை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கினார். இது இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில்...

27 அத்தியாவசியப் பொருட்களுக்கான அதிரடி விலை குறைப்பு இன்று முதல்

இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையின் நிர்ணய தன்மை எதிர்வரும் மூன்று மாத காலத்துக்கு நிலையாக பேணப்படுவதுடன், இடைப்பட்ட காலத்தில் தெரிவு செய்யப்பட்ட 27 அத்தியாவசிய பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்று வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நுகர்வோர் லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கியு-ஷொப்...

வடமாகாண பொதுச் சந்தைகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தல்!!

கோவிட் -19 நோய்த் தொற்று நிலமையைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு அமைய, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 நிலமையை அடுத்து பொதுச் சந்தைகள்...

தரம் குறைந்த சனிடைசர்களின் விற்பனை அதிகரிப்பு!!

எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாத தரம் குறைந்த தொற்று நீக்கி (சனிடைசர்கள்) சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர், பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். கை சுத்திகரிப்பு மருந்துகள் உள்ளிட்ட தொற்று நீக்கிகளை (சனிடைசர்கள்) உற்பத்திகளை மேற்கொள்வதற்காகவும் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவும் பெரிய அளவிலான எதனோல் சந்தைக்கு...

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை!

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்பது தடை செய்யப்பட்டுள்ளது எனவும், தடையை மீறி விற்பனையில் ஈடுபடுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதாக எடுக்கப்படும் என யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (வியாழக்கிழமை) மாநகர முதல்வர் இம்மானுவேல்...

அரிசிக்கான அதிகபட்ச விலை குறித்த வர்த்தமானி வெளியானது!

அரசி உற்பத்தியாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வரையில் அரசிக்கான அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ சிகப்பு மற்றும் வௌ்ளை பச்சை அரிசி, சம்பா அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை 94 ரூபாயாக...

யாழ்.மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவான 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் முறைப்பாட்டை பதிவு செய்ய முடியும் என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலை...

அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு: நள்ளிரவு முதல் பொருட்களின் விலை குறைகிறது!

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய பருப்பு, தகரப்பேணியில் அடைக்கப்பட்ட மீன் (டின்மீன்), பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது. இதற்கமையநேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டின்மீன் (பெரியது) ஒன்று 200 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் ஒரு...

யாழ்.வணிகர் கழகத்தின் கோரிக்கையைத் அடுத்து உளுந்து இறக்குமதித் தடையை நீக்க பிரதமர் நடவடிக்கை!!

உளுந்து இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு, பிரதமர் மகிந்த ராஜபக்ச யோசனை முன்வைத்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் உளுந்து முக்கியத்துவம் பெறுவதனால், உளுந்து மீதான இறக்குமதி தடையை தளர்த்துமாறு யாழ்ப்பாணம் வணிகர் கழகம், பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கையை...

தேங்காயின் விலை 100 ரூபாய் வரையில் அதிகரிக்க வாய்ப்பு!!

தேங்காயின் விலை 100 ரூபாய் வரையில் அதிகரிக்கக் கூடுமென தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரையில் காணப்படுகின்றது. இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் அவ்விலைகளில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 250 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படுவதோடு, அதில் 150 மில்லியன்...

யாழில். இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்களை திறப்பது தொடர்பில் குழப்பங்கள் தேவையில்லை – வணிகர் சங்கம்

‘யாழ்ப்பாணத்தில் இயலுமாக இருந்தால் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபார நடவடிக்கைகளை முன்னெடடுக்கலாம். வீண் குழப்பங்கள் தேவையில்லை’ என யாழ்.வணிகர் சங்கத்தின் உப தலைவர் ஆர். ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு...

இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எவரும் எதிர்பார்க்க வேண்டாம் – பந்துல

உலக சந்தையில் கனிய எண்ணெய் பீப்பாயின் விலை குறைவடைந்துள்ளதென்பதற்காக இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எவரும் எதிர்பார்க்க வேண்டாம். யார் என்ன எதிர்ப்புகளை வெளிப்படுத்தினாலும் இலங்கையில் எரிபொருள் விலை குறையாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச திணைக்களத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்...
Loading posts...

All posts loaded

No more posts