- Sunday
- February 23rd, 2025

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் இன்று நள்ளிரவு முதல் இல்லை என வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வெதுப்பக உற்பத்திகளுக்கான கேள்வி, நிரம்பல் என்பவற்றை அடிப்படையாக கொண்டு விலை தீர்மானிக்கப்படும் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், வாடகை முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது....

இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றல் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒரு லீற்றர் ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 184 ரூபாவிலிருந்து 207...

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கிணங்க எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி வரை அரிசி உள்ளிட்ட 50 அத்தியாவ சிய பொருட்களை சதொச மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்தப்பொருட்கள் சந்தையில் விற்பனை...

யாழ்.மாவட்டத்தில் பாணின் விலை 10 ரூபாயினால் அதிகரித்து 85 ரூபாய் எனவும் ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்வது இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கங்களுடன் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மற்றும் பாவனையாளர்...

450 கிராம் எடையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்றைய தினம் முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 17 ரூபாயினால் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் நடவடிக்கை...

சிகரெட் ஒன்றின் விலையை நிர்ணயம் செய்வதற்கு மிகவும் விஞ்ஞான ரீதியில் வடிவமைக்கப்பட்ட விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியடைவதாகவும், சிகரட் ஒன்றின் விலையை ரூபா 5 ஆல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அடுத்த வருடம் அரசாங்கம் சிகரெட்டிலிருந்து 8 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்ப்பதாக, சுகாதார அமைச்சின் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர், விசேட...

சீனி உள்ளிட்ட 17 அத்தியாவசியப் பொருள்கள் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்கி அதிசிறப்பு அரசிதழ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் அரசிதழ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சந்தையில் சீனியின் விலை கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த அரசு செப்டம்பர் 2ஆம் திகதி கட்டுப்பாட்டு விலையை...

பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய உற்பத்தியான ஹைலன்ட் பால் மாவின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக MILCO தனியார் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 400 கிராம் ஹைலன்ட் பால் மாவின் விலை 90 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் ஹைலன்ட் பால் மாவின் விலை 225 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 400 கிராம்...

நாட்டின் முன்னணி எரிவாயு நிறுவனங்களில் ஒன்றான லிற்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் சமீபத்தில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ .1270 ஆல் உயர்த்தியது. விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த லிற்ரோ நிறுவனத்தின் தலைவர் டெஷாரா ஜெயசிங்க, இந்த உயர்வு உடனடியாக குறைக்கப்படும் என்று பொதுமக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளிக்க தேவையில்லை என்று கூறினார்....

எரிவாயு, பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து என்பனவற்றுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேட அமைச்சரவை கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சமையல் எரிவாயு விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். உலகச் சந்தையில் எரிவாயு விலை வேகமாக அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே லசந்த...

உள்நாட்டு பால்மாவின் விலையையும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, இந்த அதிகரிப்பை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேநீர் தயாரிப்பதற்காக பால்மாவை பயன்படுத்துவதைவிட பசும்பாலை பயன்படுத்துவது வாடிக்கையாளர்களுக்கு இலாபகரமானது என மில்கோ சங்கத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன்,...

எதிர்வரும் நாட்களில் பால்மா, கோதுமை மா மற்றும் சிமெண்ட் விலை தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். விலை உயர்வை அனுமதித்தால் எந்தப் பற்றாக்குறையும் இல்லாமல் பொருட்களை வழங்க முடியுமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் கூறினார். உலக சந்தையில் விலை உயர்வு...

இறக்குமதி பால் மாவின் விலையை ஒரு கிலோகிராமுக்கு 200 ரூபாவால் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்த வாரம் வாழ்க்கைச் செலவுக் குழுவால் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். கூட்டுறவு...

கோதுமை மாவுக்கு தற்போது சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசியப் பொருட்களை பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ந்தும் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் இந்த திடீர் சோதனையில் 32 ஆயிரத்து 597 மெட்ரிக் டன் சீனி மற்றும் 643.5 மெட்ரிக் டன் நெல் மீட்கப்பட்டுள்ளதாக நுகர்வோர்...

அரிசி மற்றும் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை (வியாழக்கிழமை) முதல் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தில் வலுவான திருத்தங்களை மேற்கொண்டு, நிர்ணய விலையை விடவும் அதிகவிலைக்கு அத்தியாவசியப்பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்...

மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சில வர்த்தகர்கள் செயற்கையான வகையில் சீனிக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை அதிகரித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்காக 2003ஆம் ஆண்டு...

திங்கட்கிழமை முதல் வெதுப்பக உணவுப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கும் என்பதால் உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலையும் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சீனி மற்றும் ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை உயர்த்துவதற்கான அரசின் முடிவைத் தொடர்ந்து வெதுப்பக உற்பத்திகளின் விலையை உயர்த்துவது நியாயமானது. பாண் மற்றும் பிற வெதுப்பக...

பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பாணின் விலை 5 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கிலோ கிராம் கேக்கின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்ட வர்த்தக நிலையங்களில் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்த்து பாதுகாப்புடன் இருக்குமாறு யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போதைய கோவிட் -19 நிலமைகளை எவ்வாறு கையாளுவது தெடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் அவர் தெரிவித்ததாவது; யாழ்ப்பாணம் மாவட்ட வர்த்தகர்களுக்கான அறிவித்தலாக தற்போது நாட்டில் கோவிட் -19 மிக...

All posts loaded
No more posts