- Wednesday
- January 22nd, 2025
இலங்கையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து பக்கற் ஒன்றின் விலை இன்று (செவ்வாய்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 50 கிலோ சீமெந்தின் புதிய விலையாக 2 ஆயிரத்து 750 ரூபா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சிறிதளவு குறைய வாய்ப்புள்ளதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு எதிர்பார்ப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதை ஆரம்பிக்க முடியும் என அதன் பேச்சாளரான...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்திருந்த நிலையில், மீண்டும் எரிபொருள் விலையினை அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அதற்கு மறுப்புத்...
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் அதிரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5,175 ரூபாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் கீழ், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறும் நோக்கில், அத்தகைய தொழில்முயற்சியாளர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முதல் மூன்று தொழில்முனைவோருக்கு நேற்று(வியாழக்கிழமை)...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்து வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுமென பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த , குறித்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் அசோக பண்டார இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், பால்மாவின் கையிருப்பு குறைவடைந்துள்ளதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட பால் மா அடுத்த வாரம் கிடைக்கப்பெறுமெனவும் அவர்...
எரிவாயு சிலிண்டர்களை ஏப்ரல் 25ஆம் திகதி வரை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எரிவாயு சரக்கு கப்பல்கள் இன்னும் கரைக்கு வந்தடையாததால், விநியோக வலையமைப்பை சீராக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் நிறுவனம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தங்களுக்கு எரிவாயு விநியோகச் சங்கிலியில்...
பாண் மற்றும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் இன்று (19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை...
11 மற்றும் 12 ஆம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும் அனைத்து வங்கிகளும் வழமைபோன்று இயங்கும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் பால்மா, ஒரு கிலோ சிவப்பு சீனி மற்றும் 100 கிராம் தேயிலை...
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையினை மேலும் 50 ரூபாயினால் அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன, தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மா 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன் விலை மேலும்...
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல தனியார் வங்கிகளால் வெளியிடப்பட்ட சமீபத்திய நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மூடையின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீமெந்து மூடை ஒன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வின் மூலம் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூ.2350 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயு விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர்...
சந்தையில் முகக்கவசங்களுக்கான விலை இன்று முதல் 30சதவீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி எதிர்பாராத வகையில் நாளாந்தம் அதிகரிக்கின்றது. சகல விதமான முகக்கவசங்களையும் தயாரிப்பதற்கான...
" ஆசியாவின் அதிசயமான நாட்டில் வாழ வைப்போம் என இலங்கை மக்களுக்கு தேர்தல் காலத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இன்று ஆசியாவின் படுபாதாளத்துக்குள் நாட்டு மக்களை இந்த குடும்ப ஆட்சி தள்ளியுள்ளது." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற எம். உதயகுமார் குற்றஞ்சாட்டினார். அத்துடன், நாட்டு மக்களின் தோழன் சஜித்,...
நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தனது கையிருப்பில் உள்ள எரிவாயு திங்கட்கிழமை (14) வரை மட்டுமே போதுமானது என பிரதான எரிவாயு விநியோகஸ்தரான லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் தலா 3500 மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் இரு கப்பல்கள்...
எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பானது, நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக Petrol...
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 5...
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், எண்ணெய்க் கப்பலுக்கான கட்டணம் முன்னர் 32 மில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டது என கூறினார். இருப்பினும் சிங்கப்பூர் நாணய விகிதங்களுடன் ஒப்பிடுகையில்...
Loading posts...
All posts loaded
No more posts