- Sunday
- February 23rd, 2025

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை மீண்டும் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி 2,850 ரூபாவாக இருந்த சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து 50 கிலோகிராம் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூபா 3,000...

நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை எரிவாயு விநியோகம் செய்யப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, எரிவாயு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், செவ்வாய்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த லாஃப்ஸ் எரிவாயு கப்பலில் இருந்து வழங்கப்பட்ட எரிவாயு...

நேற்று இரவு முதல் புதிய சிறப்புப் பொருள்கள் வரி விதிப்பின் கீழ் அனைத்து இறக்குமதிகளின் விலைகளும் 15 முதல் 200 சதவீதம் வரை உயரும் என்று நிதி அமைச்சின் அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது. கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான டயர்கள் மீதான வரி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன. வளிச்சீராக்கிகள் (A/C), சலவை இயந்திரங்கள், ரைஸ்...

லிட்ரோ சமையல் எரிவாயு இன்றையதினம் வியாழக்கிழமை ( ஜூன் 2) 414 இடங்களில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் படி நாடளாவிய ரீதியில் இன்றையதினம் 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் நிறைகளையுடைய 50 ஆயிரம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளன. கீழுள்ள லிங்கை கிளிக்...

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக மதுபானங்களின் விலையை அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி, 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாயினாலும், பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாயினாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இன்றைய தினமும் (புதன்கிழமை) 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை தமது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெறும்...

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகலின் பின்னர் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய தினம் 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவற்றில் 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில்...

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நாளை மறுதினம் புதன்கிழமை முதல் முன்னெடுக்கப்படும். ஆகவே எரிவாயு சிலிண்டருக்காக வரிசையில் காத்திருப்பதை பொது மக்கள் தவிரித்துக்கொள்ள வேண்டும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 3,500 மெற்றிக்தொன் எரிவாயு அடங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடைந்ததும், தரையிறக்கல் பணியினை தொடர்ந்து விநியோக நடவடிக்கை நாளை மறுதினம் முதல் முன்னெடுக்கப்படும். அத்துடன்...

நாட்டில் இன்றும் (வெள்ளிக்கிழமை) சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தோடு, எதிர்வரும் திங்கட்கிழமை முதலே எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் எனவே, 3 நாட்களுக்கு எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களைக் கோரியுள்ளது. நேற்றையதினம் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் டன்...

நாட்டில் எதிர்வரும் 6 நாட்களுக்குள் எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சித்திரை புத்தாண்டுக்கு முன்னரான காலப்பகுதி முதல், எரிவாயு கொள்கலன் விநியோகத்தை லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு நேற்று செலுத்தப்பட்டுதாக அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்....

நாட்டில் அனைத்து வகையான எரிபொருளும் 400 ரூபாயைத் தாண்டியது. இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக அனைத்து வகையான எரிபொருள்களும் 400 ரூபாயைக் கடந்துள்ளது. இதன்படி 92 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் 82 ரூபாயினால் அதிகரித்து 420...

Litro நிறுவனம் வெளியிட்டுள்ள விநியோகத் திட்டத்தின்படி இலங்கையில் இன்று 394 விநியோகஸ்தர்களுக்கு Litro Gas விநியோகிக்கப்படும். விநியோகஸ்தர்கள் விபரங்களைத் தரவிறக்கம் செய்வதற்கு

எரிவாயு விநியோகம் தொடர்பான சகல தகவல்களையும் வழங்குவதற்காக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். லிட்ரோ எரிவாயு விநியோகம் மற்றும் எரிவாயு கிடைக்கும் இடங்கள் குறித்து நுகர்வோர் மற்றும் முகவர்களுக்கு தகவல்கள் வழங்கும் வகையில் இன்று(திங்கட்கிழமை) முதல் இந்த செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கமைய...

பாண் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். பணிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி பொருள்களின் விலைகளில் மாற்றமில்லை. என யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்க செயலர்,க.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்

கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இன்று நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை உடன்...

கோதுமை மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரீமா நிறுவனத்தினால் வெளியிடப்படடுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கயை கோதுமைமா கிலோ ஒன்றின் விலையை 40 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை லங்கா ஐஓசி நிறுவனம் மறுத்துள்ளது. இலங்கையில் மீண்டும் எரிபொருளின் விலையினை அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை என ஐஓசி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்த இந்தியா தீர்மானித்துள்ளது. இதன்காரணமாக உலக சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையிலேயே இலங்கையில் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் 3,700 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது. அத்துடன் நாளைய தினமும் கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக சமையல் எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டது. இதேவேளை, எரிபொருளை...

All posts loaded
No more posts