- Sunday
- December 22nd, 2024
பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கப்பல்கள் மூலம் இலங்கைக்கு தற்போது கொண்டு வரப்படும் அரிசி தொகை மற்றும் டிசம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னர் கடன் கடிதங்கள் வௌியிடப்பட்ட ஓடர்களை விசேட அனுமதிப் பத்திரத்தின் ஊடாக துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியும்...
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்யக்கூடிய குறைந்த விலை கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இது 4,610 ரூபாவாகும். அதிக விலை யாழ்.மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் இதன் விலை 4,990 ரூபாவாகும். பொருந்தக்கூடிய விலைகளின் முழுப் பட்டியல் கீழே...
உள்நாட்டு சமையல் எரிவாயுயின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ 250 ரூபாய் அதிகரித்து 4,610 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 5 கிலோ எரிவாயு 100 ரூபாய் அதிகரித்து 1,850 ரூபாயாகவும்...
பால் மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி 975 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 450 கிராம் உள்ளூர் பால் மா பக்கெற்றின் விலையை 175 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 450 கிராம் உள்ளூர் பால் மா பக்கெற் ஒன்றின் புதிய விலை 175 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு...
எரிவாயு விநியோகம் தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது. மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் இன்று (08) முதல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாசாங்கு செய்யும் நோக்கில்...
வெள்ளை சீனி, கோதுமை மா, நெத்தலி, செமண் மற்றும் சிவப்பு பருப்பு ஆகியவற்றின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி 22 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளை சீனியின் புதிய விலை 238 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கோதுமை மா 96 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோதுமை...
பாணின் விலையை தற்போது குறைக்க முடியாது என யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் செயலாளர் வசந்தசேனன் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முன்னர் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் பாண் ஒரு இறாத்தல் 220 தொடக்கம் ரூபா 250 ரூபா வரை விற்பனை செய்தனர். எனினும் அப்போது யாழ்ப்பாணத்தில் பாண்...
அரசாங்கம் கொண்டு வரவுள்ள நிதிக் கொள்கையின் ஊடாக பொருட்களின் விலைகளை படிப்படியாகக் குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பணவீக்கம் குறைந்துள்ளதாலேயே எதிர்வரும் காலங்களில் பொருட்களின் விலையில் துரிதமான வீழ்ச்சியை காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு...
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு நேற்று(01.11.2022) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“எதிர்காலத்தில் லிட்ரோ...
இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுள்ள பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பாணின்விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பாண் ஒன்றின் விலை இன்று (திங்கட்கிழமை) முதல் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரையில் குறைக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமது நிர்வாக சபை கூடி இறுதி செய்யும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா சந்தையில் போதிய அளவில் கிடைப்பதால் விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக அந்தச்...
கோதுமை மாவின் மொத்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் கோதுமை மாவின் மொத்த விலை 290 ஆக காணப்பட்டதுடன், தற்போது 25 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கோதுமை மாவின் புதிய மொத்த விற்பனை விலை 265 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் இன்று (திங்கட்கிழமை) இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 40 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 92 ரக பெற்றோலின் புதிய...
லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 430 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு தற்போது 395 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை, 35 ரூபாயினால்...
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை நள்ளிரவு முதல் 12 தசம் 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் ரூபாய் 300 வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா மேலும் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் தற்போது எண்ணெய் விலை ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு...
உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறையின் காரணமாக அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதே இதற்கு காரணமாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள...
உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை 10-13 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இரண்டு முக்கிய மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதால் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனி ஒரு கிலோவுக்கு 40 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், தாவர எண்ணெய்யின் விலை சுமார் 250 ரூபாவினால் குறைந்துள்ளது. மேலும் தற்போதைய பொருளாதார...
புலம்பெயர்ந்த மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை கருத்திற்கொண்டு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் புதிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது. இதன்படி, வெளிநாட்டில் இருந்தவாரே உள்நாட்டு எரிவாயுவை பதிவு (Oder) செய்வதற்கான மென்பொருள் செயலியை (Home Delivery App) லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மென்பொருள் பயன்பாட்டின்படி, வெளிநாட்டில் இருந்தவாரே லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவை அமெரிக்க டொலர்களில்...
Loading posts...
All posts loaded
No more posts