- Tuesday
- February 25th, 2025

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணைக்கான வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ எண்ணைக்கான விஷேட பாண்ட வரி 90 ருபாவில் இருந்து 110 ரூபாவாக உயர்வடைந்துள்ளது என, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய எண்ணெய் உற்பத்தியாளர்களின் நலனுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வெங்காய உற்பத்தியாளர்களின் நன்மை கருதி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் இறக்குமதி வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் வெங்காய அறுவடை தற்போது நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாகனங்களைக் குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யும் நடவடிக்கைக்கு இலங்கை மத்திய வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி வாகனங்களை முழுமையான குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிதிச்சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றுக்கு அமைய, லீசிங் வசதிகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகளை உள்ளடக்கிய சுற்றுநிருபமொன்று இலங்கை மத்திய வங்கியினால் நேற்று...

முச்சக்கர வண்டி ஒன்றினை தனது வியாபார நிலையமாக்கி அதன் மூலம் தனது அன்றாட வருமானத்தினை தேடிக் கொள்ளும் யாழ்.வாசியின் முயற்சியை பலரும் வியப்புடன் பார்த்து அவரை பாராட்டியும் உள்ளனர். தனது மரக்கறிச் சந்தை வியாபாரத்தை விஸ்தரிப்பதற்காக முச்சக்கர வண்டி மூலம் தனது வியாபார பயணத்தை மேற்கொள்வது வியக்கத்தக்க விடயமாகும் என மக்கள் பலரும் அவரை பாராட்டியிருக்கின்றனர்.

யாழ் மாவட்டத்தில் வறுமையால் பாடசாலையை விட்டு இடைவிலகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மற்றும் இடைவிலகிய மாணவர்கள் தமது கல்வியை இடைவிடாது தொடரும் வகையில் யாழ்ப்பாண வணிகர் கழகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. யாழ்.பிரதேச செயலகத்தில் வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

பனம் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபா வரையிலான இலகு கடன் வசதியும் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான வசதியையும் வழங்குவதற்கு பனை அபிவிருத்திச் சபை முன்வந்துள்ளது. பனம் பொருட்களை மூலப் பொருட்களாகக் கொண்டு பாவனைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் முயற்சியை அபிவிருத்தி செய்யும்...

வடக்கின் பிரபல தொழிலதிபரும், உள்ளூர் உற்பத்தித் துறையில் தடம் பதித்தவருமான அண்ணா கோப்பி நிறுவனர் பொ.நடராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது 69 ஆவது அகவையில் காலமானார். இணுவில் தெற்கினைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் சாதாரண விவசாயக் குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்டவராவார். தமது சுய முயற்சியால் வீட்டில் கோப்பியைத் தயாரித்துத் தாமே அதனைத் துவிச்சக்கர வண்டியில்...

யாழ்ப்பாண வங்கி (Bank Of Jaffna) என்ற பெயரில் வணிக வங்கியொன்றை நிறுவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாங்க் ஒப் ஜப்னா (Bank Of Jaffna) என்னும் பெயரில் இந்த வங்கி இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வர்த்தகர்கள் சிலர் இந்த வங்கியை அமைப்பது குறித்து மத்திய வங்கியுடன் விண்ணப்பித்துள்ளனர். பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் வர்த்தக நடவடிக்கைளில்...

ஊழியர் சேமலாப நிதி (ஊ.சே.நி) பெறும் அங்கத்தவர்கள், அவர்களது கணக்கு மிகுதியை தொழில் செயலகத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள தன்னியக்க இயந்திரத்தில் சரிபார்த்துக்கொள்ள முடியும் என்று தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், சேமலாப நிதி பெறும் சுமார் 2.5 மில்லியன் தொழிலாளர்கள் அவர்களது கணக்கு மீதியை எந்தவொரு நேரத்திலும் சரிபார்த்துக்கொள்ள முடியும். தொழில் தருநர், அவருக்கு கீழ்...

வங்கி வட்டி வீதங்களைத் தீர்மானிப்பதில் தாக்கம் செலுத்தும் கொள்கை வட்டி வீதத்தை தொடர்ந்தும் வீழ்ச்சியுறச் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பிரகாரம் மத்திய வங்கியுடன் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களின்போது தாக்கம் செலுத்தும் நிலையான வைப்புகள் மற்றும் கடன் வட்டி அலகுகள் 50 வீதமாகக் குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான தனது...

நடைபாதை வியாபாரம் சம்பந்தமான கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மாநகர சபை ஆணையாளர்,யாழ்.மாநகர சபை உத்தியோகத்தர்கள், யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள் ,மற்றும் தொழில் ஆணையாளர் கனகேஸ்வரன் ஆகியோருடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், குறித்த சந்திப்பில் நாம் முக்கியமாக நடைபாதை...

பனை அபிவிருத்திச் சபையின் புதிய நிறைவேற்று பணிப்பாளராக சே.விஜிந்தன், புதன்கிழமை (18) யாழ்ப்பாண அலுவலகத்தில் தனது கடமையை பொறுப்பேற்றார். கடந்த 2ஆம் திகதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனால் நியமிக்கப்பட்ட இவர் வடமாகாண ஆளுநரின் கிளிநொச்சி மாவட்ட செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் 3 தொழிற்சாலைகள் தற்போது இயங்கி வருவதாக யாழ். மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.சிவகங்காதரன் வெள்ளிக்கிழமை(13) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தரையில் பதிக்கும் சீமெந்து கல் தயாரிக்கும் தொழிற்சாலை, ஆணி, பிணைச்சல் உள்ளிட்ட மென் இயந்திரவியல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கும் தொழிற்சாலை...

இலங்கையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மென்பொருள் பல்தேசிய நிறுவனமாகிய WSO2 இன்று தனது கிளை நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளது. இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கை இங்கே

வடக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் கேள்வியினை அதிகரிக்கும் நோக்குடன் இங்குள்ள உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும் என வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தெரிவித்தார். இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் மன்றத்தின் வடமாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில் வடமாகாண உற்பத்திப்பொருட்களுக்கான சர்வதேச சந்தைவாய்ப்பு என்ற தொனிப்பொருளில் ஏற்றுமதியாளர்களுக்கும் வடக்கு மாகாண உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்...

ஆறாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று யாழ்ப்பாணத்தில் கோலகலமாக ஆரம்பமாகி தொடர்ந்து 3நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. தென்னிலங்கை வர்த்தகர்கள் -யாழ்ப்பாண வர்த்தகர்களிடையே வர்த்தக ரீதியாக தொடர்பை ஏற்படுத்தும் விதமாக இந்தக் கண்காட்சி நடைபெறுகின்றது. இன்று காலை 9மணியளவில் யாழ்.பொதுநூலகத்தில் இடம்பெற்ற குறித்த கண்காட்சியின் ஆரம்பிப்பு நிகழ்வினூடாக விருந்தினர்கள் மேள,தாள வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டு யாழ்.மாநகர சபை மைதானத்தில்...

எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகிறது. 92 ஒக்ரின் பெற்றோல் 117 ரூபாவாகவும் , 95 ஒக்ரின் பெற்றோல் 128 ரூபாவாகவும், டீசல் 95 ரூபாவாகவும், மண்ணெண்ணை 65 ரூபாவாகவும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மின்சக்தி மற்றும்...

வடமாகாண உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் சனிக்கிழமை, 24ஆம் திகதி யாழ்.பொது நூலகத்தில் நடைபெறவுள்ளதாக யாழ்.வர்த்தக கைத்தொழில் மன்றத்தலைவர் கே.விக்னேஸ் செவ்வாய்கிழமை (20) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்த சந்திப்பில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது தேவைகள், பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளனர். எந்தப் பகுதியில், எந்த வகையான உற்பத்திகளை மேற்கொள்ள...

யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றோம் ஆனால் இதுவரை அவரிடம் இருந்து எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. எனினும் இந்தக் கண்காட்சிக்கு ஜனாதிபதி வருகை தராவிட்டாலும் புதிய அரசின் அமைச்சர்களில் ஒருவர் வருகை தருவார் என தாம் எதிர்பார்ப்பதாக வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தெரிவித்தார்....

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 87 நிறுவனங்கள் கடந்த வருடம்; (2014) பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட தொழில் திணைக்கள பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எமது திணைக்கள அதிகாரிகள் கடந்த 2014ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் சென்று, சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு...

All posts loaded
No more posts