- Wednesday
- January 22nd, 2025
இலங்கையில் அதிவிரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற 3G வலையமைப்புக்களில் ஒன்றான Hutch, பெறுமதிமிக்க தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரும் பெறுமதிசேர் சேவைகளில் மற்றுமொரு அம்சமாக Hutch கையடக்கத்தொலைபேசியூடாக நேரடியாக புகையிரத டிக்கட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கும் வகையில் மொபிடெல் மற்றும் இலங்கை புகையிரத திணைக்களம் ஆகியவற்றுடன் பங்குடமையை ஏற்படுத்தியுள்ளது. தினசரி புகையிரதம் மூலமாக பயணிக்கும் 300,000 பிரயாணிகளுக்கு இச்சேவை...
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை, கண்காட்சி எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை யாழ் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவை ஏற்பாட்டில் ஏழாவது தடவையாக நடைபெறும் இக்கண்காட்சியில் வடமாகாணத்தின் கிளிநொச்சி, வவுனியா, முல்லைதீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில், உள்நாட்டு, வௌிநாட்டு நிறுவனங்கள் பல...
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரட் வகைகள் அனைத்தினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.சிலோன் டொபாக்கோ நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, பிஸ்டல் (Bristol) ஒன்றின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 22 ரூபா. கோல்ட்லீப் (Gold Leaf) ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 35...
சீனி மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றுக்கு அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கட்டுப்பாட்டு விலையை நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கப்படாத பட்சத்தில், இந்த பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக பட்ச கட்டுப்பாட்டு விலை நிர்ணயத்தின் காரணமாக, இறக்குமதி செய்யப்படுகின்ற விலையைக் காட்டிலும், குறைந்த விலையில் உள்நாட்டில் சந்தைப்படுத்த வேண்டி ஏற்படுகிறது....
இலங்கையில் வர்த்தக முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, இந்திய கிரிக்கட் வீரர் ஹர்பஜன் சிங் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில்நிலையான நீண்டகால நல்லுறவு காணப்படுகிறது. இந்த நிலையில், அவர் இலங்கையில் பல்வேறு முதலீட்டு...
சவுதியில் பணிபுரியும் இலங்கை தொழிலார்களின் சம்பளத்தை இலங்கை ஏ.டி.எம்கள் ஊடாக இலகுவாகவும், துரிதமாகவும் பெற்றுக் கொள்ளும் வசதியை செய்து கொடுப்பதில் ஒத்துழைப்புடன் செயல்படுமாறு இலங்கை மத்திய வங்கி விடுத்த வேண்டுகோளை சவுதி அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தொழில்கள் அமைக்க மத்திய கிழக்கு நாடுகளில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும்...
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தீர்வை வரவு – செலவுத் திட்டத்தில் கிலோவொன்றுக்கு 135 ரூபாவிலிருந்து 225 ரூபா வரை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து விற்பனை விலைகளை அதற்கேற்ப அதிகரிப்பதற்கான அனுமதி கோரி பால்மா இறக்குமதி நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதற்கமைய இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பைக்கற்றின் விலையை 35 ரூபாவாலும்,...
வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி காரணமாக சிறிய நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக பதிவு செய்து கொண்டுள்ள அனைத்து நிறுவனங்களும் வருடாந்தம் 60 ஆயிரம் ரூபாவை வரியா செலுத்த வேண்டும் என்று வரவு செலவுத்திட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறான சிறு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் இயங்கி...
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட அலுவலகத்தினால் நடாத்தப்படும் முத்தான வியர்வை வர்த்தகக் கண்காட்சி நாளை (19) மற்றும் நாளை மறுதினம்(20) யாழ் மானிப்பாய் இந்து கல்லூரியில் இடம்பெறவுள்ளது. வாழ்வின் எழுச்சித் திணைக்கள மாவட்ட பணிப்பாளர் க.மகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் கலந்துகொள்வதுடன் சிறப்பு விருந்தினராக...
பால் மாவின் விலை உயர்வடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வரிச் சலுகை வழங்கப்படாவிட்டால் பால் மாவின் விலைகளை உயர்த்த நேரிடும் என பால் மா இறக்குமதியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரிச் சலுகை உரிய முறையில் வழங்கப்படாவிட்டால் 400 கிராம் எடையுடைய பால் மாவின் விலையை 75 ரூபாவினால் உயர்த்த நேரிடும் என சங்கம்...
யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலை மாணவர்கள் கூப்பன் அடிப்படையிலான சீருடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அபி றேடர்ஸ் - இல-112,கே.கே.எஸ்.வீதி .யாழ்ப்பாணம். சிறி கணேஷ் புடவையகம் - இல-20 ,நவீன சந்தை, யாழ்ப்பாணம் ஆறுமுகம் ரெக்ஸ்ரைல்ஸ் - இல-20,பெரிய கடை.யாழ்ப்பாணம். சென்னை பசன் வேல்ட் - இல-63 ,பெரிய...
யாழ்ப்பாணத்துக்கு சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. 1 கிலோகிராம் பச்சை மிளகாய் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மரக்கறிகளில் கறிமிளகாய் 1 கிலோகிராம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன், 1 பிடி கீரை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் போதும், கீரையை சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. கத்தரிக்காய் 1...
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற ஓய்வூதியத் திட்டமொன்றை தனியார்துறை ஊழியர்களுக்கும் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, அரசாங்கம் விரைவில் எடுக்குமென, வெளிநாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். பலர், அரசாங்கத் துறையில் பணியாற்ற விரும்புவதற்கு, அங்கு காணப்படும் ஓய்வூதியத் திட்டமே...
இலங்கையின் வடபகுதியில் இடம்பெறுகின்ற மிகப்பிரசித்தமான வர்த்தக சந்தையான யாழ் சர்வதேச வர்த்தகக் சந்தை (JITF 2016) எதிர்வரும் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் மாநகர மைதானத்தில் நடைபெறவுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு தகுந்த சர்வதேச சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கிலும் தென்பகுதி முதலீட்டாளர்களை வடபகுதிக்கு அறிமுகம்...
தரவு பாவனை ஒதுக்கீட்டினை ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் நிர்வகிக்கும் சிரமங்களைப் போக்கும் தனித்துவமான வசதி... இலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற 3G வலையமைப்புக்களுள் ஒன்றான Hutch, “Hutch SmartShare” வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. Hutch வாடிக்கையாளர்கள் தாங்கள் உபயோகிக்கும் பல்வேறு வகையான சாதனங்களுக்கு ஒரு பொதுவான தரவு நிலுவையை பேணுவதற்கு இடமளிக்கும் ஒரு புத்தாக்கமான அறிமுகமாக...
யாழ் மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் நெற்செய்கைக்கான உரங்களை (யூரியா, சுப்பர் பொசுபரசு (TSP), மியூரேற் பொட்டாசு (MOP), விவசாயிகள் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு கொள்வனவு செய்யும் நிலை ஏற்படின் அது தொடர்பான முறைப்பாட்டினை மாவட்ட செயலகத்திற்கு அறியத்தருமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்...
மோட்டார் வாகன லீசிங் சம்பந்தமாக நிதி நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டிய புதிய முறைமைக்கமைய, வாகனங்களுக்கு வழங்க வேண்டிய லீசிங் வசதி, 90 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு கூறியுள்ளது.
யாழ். மாவட்டத்தில் இந்திய வர்த்தகத்தினை மேம்படுத்துவதற்கான விஷேட மாநாடு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், இந்தியாவைச் சேர்ந்த இளம் வர்த்தகர்கள் 44 பேர் கலந்துகொண்டிருந்தனர். ´யாழில் வியாபாரத்தினை மேம்படுத்தல்´ எனும் தொனிப்பொருளில், இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், இலங்கைக்கான...
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணைக்கான வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ எண்ணைக்கான விஷேட பாண்ட வரி 90 ருபாவில் இருந்து 110 ரூபாவாக உயர்வடைந்துள்ளது என, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய எண்ணெய் உற்பத்தியாளர்களின் நலனுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading posts...
All posts loaded
No more posts