- Tuesday
- February 25th, 2025

சுயதொழிலை அடிப்படையாக கொண்டு தாமே யாழ்ப்பாணத்தில் ஒரு தொழிற்சாலையை நிறுவி, ஓர் உற்பத்திப்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளனர். நாம் பாவிக்கும் சன்லைட் (sunlight) சவர்க்காரம், Surfexel அல்லது சம்போ(shampo)க்கு பதிலாக புதிதாக ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். மேலும் இதில் வாசனைக்காக compfort போன்ற ஒரு கலவையயையும் சேர்த்துள்ளனர். இதனால் சலவை செய்யும் ஆடைகள் வாசனையாகவும் இருக்கும். யாழ்ப்பாணம் கல்வியன்காட்டிலே...

வர்த்தகர்கள் பொருட்களை அதிக விலைக்கு விநியோகிப்பதால், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறாத நிலை ஏற்படுவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச குறிப்பிட்டார். இதனால், கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஊடாக கண்காணிப்பதுடன், அத்தகையவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம்...

கைத் தொலைபேசிகள் மற்றும் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரம் இன்றி இயங்கும் நிலையங்களுக்கு முற்றுகையிடவுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த மாதத்தின் இறுதி வாரம் முதல் நாடு பூராகவும் சுற்றி வளைப்பு நடவடிக்கையை முன் எடுக்கவுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசி மற்றும்...

அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்விலைகள் பின்வருமாறு, கோழி இறைச்சி (தோலுடன்) 410 ரூபா கோழி இறைச்சி (தோல் இல்லாமல்) 495 ரூபா பருப்பு - 169 ரூபா சீனி (1 கிலோ கிராம்) - 95 ரூபா நெத்தலி (தாய்லாந்து) 1 கிலோகிராம் - 495 ரூபா நெத்தலி (டுபாய்) 1 கிலோகிராம்...

வடக்கிற்கான பொருளாதார நிலையத்தை வவுனியாவில் அமைப்பதற்கு முயற்சிக்கும் அரசியல்வாதிகள் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு இதுவரை திறக்கப்படாதுள்ள பொருளாதார சந்தை தொடர்பில் இதுவரை கவனம் செலுத்தாதது ஏன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கிற்கான பொருளாதார வர்த்தக மையத்தை வவுனியா – தாண்டிக்குளத்தில் அமைப்பதென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் குறித்த...

வட மாகாணத்தில் உற்பத்தியாகும் தரமான உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றிற்கு சந்தைவாய்ப்பை பெற்றுக் கொடுத்து புலம்பெயர் மக்களின் தேவைகளை பூர்த்தியாக்கும் வகையில் ஏற்றுமதி செய்யவும், அவற்றுக்கான வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் யாழ் வணிகர் கழகம் முன்வந்துள்ளது. இவ்வாறான பொருட்களின் தேவைகள் பற்றிய கேள்வி கோரல்கள் யாழ் வணிகர் கழகத்திற்கு ஏற்கெனவே கிடைத்துள்ளது. இவ்வாறான...

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது தனது சேவையினை மேம்படுத்தும் முகமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பாவனையாளர் முறைப்பாட்டுப் பிரிவு ஒன்றினை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு அதனடிப்படையில் யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது அரச அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் முறைப்பாட்டுப் பிரிவொன்றை உருவாக்கியுள்ளது. மேற்படி முறைப்பாட்டு பிரிவிற்கு பொறுப்பாக புலனாய்வு அதிகாரி மு.றம்ஸீன் அவர்களுடன் புலனாய்வு அதிகாரியான...

கடந்த யுத்தகால இடம்பெயர்வுகளுக்கு பின்னர், வடமாகாண வர்த்தகர்கள் பல்வேறு நெருக்கடிகளுடன் தமது தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வர்த்தகர்களின் அபிவிருத்தி தொடர்பாக 5 மாவட்டங்களையும் ஒன்றிணைத்து அதிகாரசபை ஒன்றினை உருவாக்கும் நோக்கோடு வடமாகாண வர்த்தகர்களுடனான சந்திப்பு, யாழ். வணிகர் கழகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் வடமாகாண வர்த்தக வணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன்...

சிகரட், மதுபானம் மற்றும் பாம் ஒயில் போன்றவற்றின் வரியை அதிகரிப்பதற்கும், தனியார் சுகாதார சேவை மீதான வெட் வரி வீதத்தை குறைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விசேட பணிகளுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். பொருளாதார குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நேற்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் கூறினார். அதன்படி குறித்த...

அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி பொலன்னறுவை, வவுனியா போன்ற பிரதேசங்களில் இதுபோன்று அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் ஹசித திலகரட்ன கூறினார். சீமேந்து தயாரிப்பு நிறுவனங்கள் சிலவற்றின்...

சகல வகையான சிகரெட்டுகளின் விலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை முதல் அதிகரிக்கப்படகூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்தின் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதியளித்துள்ளது. இதன்படி, அல்ட்ராடெக், டோக்கியோ மற்றும் ஹோல்சிம் ஆகிய ஐந்து வகையான சீமெந்தின் விலைகளும் 60 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய 870 ரூபாவாகவுள்ள சீமெந்துப் பக்கற் 930 ரூபாவாக உயர்வடைகின்றது.

முச்சக்கரவண்டியை விடக் குறைந்த விலையில், நான்கு சக்கர வண்டியொன்றைக் கொள்வனவு செய்வதற்கு வழிசமைத்துக்கொடுப்பதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அறிவித்திருந்தார். இந்நிலையில், அவ்வாகனம் தொடர்பான விவரங்கள், தற்போது வெளியாகியுள்ளன. நான்கு சக்கர வண்டி என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்த போதிலும், அது எவ்வகையான வாகனம் என்று அறிவித்திருக்கவில்லை. இருப்பினும், மிகச் சிறியரக கார் ஒன்று தொடர்பிலேயே அமைச்சர் அறிவித்திருந்தார்...

முச்சக்கர வண்டிக்குப் பதிலாக சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத் திணைக்கத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் முச்சக்கரவண்டியினால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதனைக் கட்டுப்படுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆகவே அதற்குப் பதிலாக சிறிய ரக கார்களை இறக்குமதி...

யாழ்ப்பாணத்தில் 1 பவுண் தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களில் சுமார் 4,000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 22 கரட் தரமுடைய 1 பவுண் (8 கிராம்) தங்கள் 45,900 ரூபாய் தொடக்கம் 47,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு நாட்களில் விலையானது சடுதியாக அதிகரித்து, 50 ஆயிரம்...

வெளிநாட்டு நாணய மாற்றில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாகவே கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை அதிகரித்ததே தவிர வற்வரி அதிகரிப்பினால் அல்ல என அகில இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் மஹிந்த சரத்சந்திர குறிப்பிட்டார். மேலும் மே 2 ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அதிகரிக்கப்ட்ட 15 சதவீத...

இலங்கை ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத விதத்தில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இது பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்து. அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 150.15 ரூபாவாக இன்று பதிவாகியிருக்கிறது. டொலருக்கு எதிராக 148 ரூபாவை தாண்டியது இதுவே முதல் தடவையாகும். இலங்கை ரூபாவின் இந்த வீழ்ச்சி பொருளாதாரத்தில் பெரும்...

முச்சக்கர வண்டி இறக்குமதிகளை வரையறுக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கோரியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முச்சக்கர வண்டி இறக்குமதிகளை அரசாங்கம் வரையறுக்காவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதக விளைவுகள் ஏற்படக் கூடும். பாடசாலைகளிலிருந்து வெளியேறும் இளைஞர்கள் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் துறையை தேர்வு...

இலங்கையிலுள்ள டயலொக் நிறுவனமும் எயார்டெல் நிறுவனமும் ஒன்றிணைவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. economic_times எனும் பொருளியல் சஞ்சினை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. டயலொக் நிறுவனம் இந்நாட்டில் 10.5 மில்லியன் தொடர்பாளர்களைக் கொண்ட ஒரு வலைப் பின்னலைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் சந்தையில் 41 வீதத்தை தம்மிடம் வைத்துள்ளது. எயார்டெல் நிறுவனம் 2.3 மில்லியன் தொடர்பாளர்களை தம்மிடம் வைத்துள்ளது....

வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது மற்றும் வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்புவதில் இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் NRFC, RFC உள்ளிட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளிலுள்ள பணத்தை முன்கூட்டிய அனுமதி இல்லாமல் அனுப்ப முடியும் என இலங்கை மத்திய வங்கி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

All posts loaded
No more posts