- Tuesday
- February 25th, 2025

இலங்கையின் நாணய பெறுமதியானது பாரிய சரிவை நோக்கி நகரும் நிலையிலேயே வருடம் ஆரம்பமாகியுள்ளது. இது எதிர்வரும் காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை பாரிய சவாலுக்குட்படுத்தும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் மட்டும் நாட்டின் பண பெறுமதியானது சுமார் 3.9 விகிதத்தால் பெறுமதி இழந்துள்ளது. இது ஒரு அமெரிக்க டொலருக்கான இலங்கை...

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை விரைவில் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பேக்கரி உற்பத்தியின் மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதனால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பால்மா விலையை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர் சங்கம் விடுத்த கோரிக்கையை நுகர்வோர் அதிகார சபை நிராகரித்துள்ளது. பால்மா கிலோகிராம் ஒன்றின் விலையை 810 ரூபாயிலிருந்து 927 ரூபாய் வரை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர் சங்கம், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கைக்கு அமைய, 325 ரூபாய்க்கு விற்கப்படும் 400 கிராம் பால்மா, 375...

மோட்டர் சந்தையில் இலங்கையர் ஒருவர் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். இலங்கையர் ஒருவரினால் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார மோட்டார் வாகனம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து 8 இலட்சம் ரூபா விலைக்கு சந்தைக்கு வரவுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனம் கிட்டத்தட்ட 30 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. மணிக்கு 60 கிலோ மீற்றர்...

தனியார் துறையினரால் அரிசி விலையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்று பிரதியமைச்சர் அமீர் அலி கூறுகின்றார். எதிர்வரும் நாட்களில் அரிசியை இறக்குமதி செய்து கட்டுப்பாட்டு விலையை பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறுகின்றார். ஒப்பீட்டளவில் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக அரிசி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் களஞ்சியசாலைகளில் இருக்கின்ற அரிசி, சரியான முறையில்...

இந்நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 152 ரூபாவாக அதிகரித்துள்ளது. மத்திய வங்கிய நேற்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 152 ரூபா 12 சதமாக அதிகரித்துள்ளது. கடந்த அண்மிய காலத்தில் டொலரின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து...

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கான விசேட வியாபாரப் பண்ட வரியானது 7 ரூபாவிலிருந்து 13 ரூபாய் வரையிலும் 6 ரூபாவினால் அதிகாரிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது எனினும், சீனியின் சில்லறை விலையில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

ஒரு கிலோ அரிசியை 78 ரூபாவிற்கு பாவனையாளர்களுக்கு விற்பனை செய்யுமாறும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் சதோச அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். பண்டிகைக் காலப்பகுதியில் சந்தையில் அரிசியின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நெல் களஞ்சியப்படுத்தும் சபையினால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள ஒரு தொகை நெல்லைக் கொள்வனவு செய்யப்படவுள்ளது. அத்தோடு பத்தாயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கும் அமைச்சர் றிஷாட்...

எட்டாவது தடவையாக யாழ் மாநகரசபை மைதானத்தில் எதிர்வரும் ஜனவரி 27தொடக்கம் 29 வரை இடம்பெறும் வர்த்தகக் கண்காட்சியில் க.பொ.த சாதாரண, உயர்தர மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் “கல்வி யாழ்ப்பாணம் 2017” என்ற பெயரில் உயர்கல்வி தொழில் கண்காட்சியொன்றும் இடம்பெறவுள்ளது. இந்தக் கண்காட்சியில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், கணனி கற்கை நிலையங்கள், ஹோட்டல் நிர்வாகமும் உல்லாசப்...

மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாண நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இன்று பிற்பகல் 2.00 மூடுமாறு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது. இலங்கையில் தமிழ் மக்கள் அல்லலுறும்போதெல்லாம், இந்திய மத்திய அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வந்ததோடு, தமிழக சட்டசபையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத்...

வவுனியாவில் கொள்வனவு செய்யும் அரிசியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வியாபாரிகள் அதிக விலையில் விற்பனை செய்து வருவதாக வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்வதனால் யாழ். மாவட்ட நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுவதாக வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் உள்ள அரிசி ஆலைகளில் கொள்வனவு செய்யப்படும் அரிசிகளில்...

பெறுமதி சேர் வரித் (வற்) திருத்தத்துக்கமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை, நூறு ரூபாயினால் அதிகரிக்கப்படக்கூடும் என்று, பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை காலமும், பால்மாவுக்கு “வற்” அறவிடப்படவில்லை. ஆனால், கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வற் திருத்தத்துக்கமைய, பால்மாவுக்கும் இந்த வரி விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்று, மேற்படி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்....

கால்நடைகளுக்கான தீவனங்களை சந்தையில் கொள்வனவு செய்பவர்கள் அதன் நிறையினை சரிபார்த்து வாங்கி கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் புதன்கிழமை (05) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், 'தென்னிலங்கையை மையமாகக் கொண்டு இயங்கும் கம்பனியொன்றின் கால்நடை தீவனப்பொருட்கள் நாடு பூராகவும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த தீவனப்...

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள 'எழுக தமிழ்' பேரணிக்கு, இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் என்பன ஆதரவு வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளன. தமிழர் தாயகத்தில் சிங்கள, பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழர் தேசம் தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஸ்டித்...

கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு சீனி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரித்துள்ளார். இது தொடர்பிலான சுற்றிவளைப்புகளை நாடு முழுவதும் ஆரம்பிக்குமாறு அனைத்து தரப்புகளுக்கும் அறிவித்துள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் அமைச்சர் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சீனிக்கான விசேட வர்த்தக பொருட்களுக்குரிய வரியை,...

மிக விரைவில் இலங்கை தயாரிப்பு முச்சக்கர வண்டி சந்தைக்கு வரவுள்ளதாக இலங்கை முச்சக்கர வண்டி உற்பத்தி நிறுவனமான மார்க்ரோ அறிவித்துள்ளது. இந்திய பஜாஜ் நிறுவன முச்சக்கர வண்டிக்கு ஒப்பானதாக இந்த தயாரிப்பும் அமைந்துள்ள போதும் இதன் சந்தை விலை 475000 என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்திலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த காலங்களில் மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்த நிலையில், அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அளித்த வாக்குறுதியின் பிரகாரம் இன்று (புதன்கிழமை) ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் காரியாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சுமார்...

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு சகல வர்த்தக நிலையங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு யாழ்.வணிகர் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக யாழ். வணிகர் கழகசெயலாளர் இ. ஜனக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் நேற்று முன்தினம் 27 ஆம் திகதி நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்திற்கு அமைய 31ஆம் திகதி புதன்கிழமை...

யாழ்ப்பாணத்தில் இம் மாதம் 22 ஆம் திகதி முதலீட்டாளர்களின் மாநாடானது நடைபெறவுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் இந்த மாநாடு காலை 10 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 03 மணி வரை நடைபெறவுள்ளது. வடக்கு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு உள்ளூர் முதலீட்டாளர்களின் முதலீடுகளை வடக்கில் அதிகரிப்பதற்காக இந்த மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண...

வரவு செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களினால், வேன்களின் விலை சுமார் 10 இலட்சத்தினால் வீழ்ச்சியடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. வாகன இறக்குமதியின் போது காணப்பட்ட 5 வரிகளுக்கு பதிலாக இம் முறை வரவு செலவுத்திட்டத்தில் உற்பத்தி வரி ஒன்று மாத்திரமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக வேன் இறக்குமதிக்காக அறவிடப்பட்ட 152...

All posts loaded
No more posts