- Thursday
- January 23rd, 2025
நாட்டுக்குள் பாரியளவிலான சீனி பதுக்கல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் அதன் காரணமாக, சீனி ஒரு கிலோகிராமின் விலை 110 ரூபாயிலிருந்து 125 ரூபாயாக அதிகரித்துள்ளதென, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்தது. விற்பனை நிலையங்களில் தேடிப் பார்த்தமைக்கு அமைய, சீனியின் விலை அதிகரிப்புக்கு பிரதான காரணமாக, சீனி ஒரு கிலோகிராமுக்கான மொத்த விற்பனை விலை, 93 -...
சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு, அரசாங்கம் சம்மதித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களின் கோரிக்கையைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச் செலவுச் செயற்குழுவே, இந்த முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த, அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளரொருவர், சீனிக்கான சில்லறை விலையாக, 93 ரூபாயைக் கட்டுப்பாட்டு...
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக காரில் நடமாடும் நூதனத் திருடர்கள் வர்த்தக நிலையங்களில் பொருட் கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து பணத்தை அபகரிப்பதாக வர்த்தகர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மேலும் தெரிவிக்கையில், யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக விலை உயர்ந்த காரில் நடமாடும் இரு...
விவசாயிகள் கூடுதலான வருமானத்தைக் கருத்திற்கொண்டு, கீரி சம்பா போன்ற நெல் வகைகளை கூடுதலாக உற்பத்தி செய்ததனால் நாட்டரிசி போன்ற நெல் வகைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் நாட்டரிசி போன்ற நெல் வகைக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் குறித்து விபரிக்கையிலேயே நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதி பொது முகாமையாளர் சமன் பாலித பண்டார பிரதிப் பொது முகாமையாளர்...
இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று வீதத்தின் அடிப்படையில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 153.44 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 149 ரூபா 68 சதமாக காணப்படுகின்றது. டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி இவ்வளவு கீழ் நோக்கிச் சென்றுள்ளது இதுவே முதல்தடவை...
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான விஷேட பண்ட வரியை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 150 ரூபாவில் இருந்து 130 ரூபாவாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொப்பரா மற்றும் பாம் எண்ணெய் ஆகியனவும் 130 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தேங்காய்க்குத் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் மிகப் பெரிய சந்தையான திருநெல்வேலிச் சந்தையில் வழமையாக தேங்காய் குவியலாகக் காணப்படும். ஆனால் நேற்று தேங்காயின்றி சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. இது தொடர்பாக வியாபாரிகளிடம் வினவியபோது, கடந்த சில தினங்களாக சந்தைக்கு தேங்காய் வருவது சடுதியாகக் குறைந்துள்ளது. யாழ். குடாநாட்டில் அதிகமாகத் தேங்காய் விளையும் கொடிகாமம்,...
தேங்காயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், உணவுப் பொதியொன்றின் விலை 10 ரூபாய் அல்லது 15 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக, இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். அத்துடன், நாட்டில் பல பாகங்களிலும் தற்போது தேங்காய்ப் பற்றாக்குறை பெருமளவு நிலவுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், தேங்காய் ஏற்றுமதியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், அரசாங்க...
தேங்காய் விலை அடுத்து வரும் இரண்டு மாதங்களில குறையும் என்று தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கபில் யஹாந்தாவல தெரிவித்தார். கடந்த சில வாரங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தேய்காயின் விலை அதிகரித்தது. இறக்குமதி செய்யப்படும் பாம்ஒயில் மீது விதிக்கப்பட்டுள்ள வரித்தொகையை குறைப்பதற்கு அமைச்சர் நவீன் திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் ஊடாக விலையை...
நாடு முழுவதிலுமுள்ள ச.தொ.ச. கிளைகளில் ஒரு கிலோ அரிசியை 66 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ள முடியும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய ரீதியிலுள்ள 340 கிளைகளில் நாட்டரிசி மற்றும் பச்சை அரிசி என்பவற்றை 66.00 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவுக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட...
அதிக விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் வியாபாரிகள் அனைவருக்கும் எதிராக, நுகர்வோர் அதிகார சபை ஊடாக, இன்றிலிருந்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியின் மூலமாக ஒரு கோடியே ஐந்து லட்சத்து ஒன்பது ஆயிரத்து இரண்டாயிரத்து இருநூற்று இருபது ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியின் நிதி திட்டமிடல் அதிகாரி தெரிவித்தார். பொருளாதார ரீதியான சந்தை வாய்ப்பினையும் மக்களின் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியினை மேன்படுத்துவதற்கான ஆரம்பிக்கப்பட்ட...
எட்டாவது சர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக யாழ். வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் விக்ஸே தெரிவித்துள்ளார் சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று(24) நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றம் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச கண்காட்சி கூடம் மற்றும் இலங்கை மாநாட்டு பணியகம், இலங்கை மாநகர...
சிறிய, மத்தியதர தொழில் முயற்சியாளர்களுக்காக புதிய கடன் திட்டம் ஒன்றை இந்த மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்த தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள் அமைச்சு இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இளைஞர்கள், இளம் பட்டதாரிகள், பெண்கள், விசேட தேவையுடைய நபர்களின் நிதி மற்றும் தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை...
வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தினால் (NCIT) ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாண தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களினை சேர்ந்தவர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் 15.1.2017 ஞாயிற்றுக்கிழமை இரவு கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் அதன் தலைவர் த.தவரூபன் தலைமையில் இடம்பெற்றது. இது வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தின் உறுப்பினர்களும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களும்...
யாழ்ப்பாணம் பிரதான மாட்டிறைச்சி கடைத்தொகுதியில் மனித பாவனைக்குதவாத நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கழிவு இறைச்சிகளை யாழ்ப்பாண மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர். நேற்றய தினம் யாழ்.மாநகர சபையின் பொது சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பட்ட தகவலொன்றினையடுத்து விஷேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது கடையொன்றின் களஞ்சியறையில் குளிர்சாதன பெட்டியொன்றில் இருந்தே இந்த...
யாழ் மாவட்டத்தில் கோவா அறுவடை தற்போது இடம்பெற்றுவருகிறது. சந்தையிலும் பெருமளில் கோவா விற்பனைக்காக இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஒரு கிலோ கோவா 25-30 ரூபாய் வரை யாழ்ப்பாண சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தியாளர்களிடமிருந்து 15-20 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதினால் போதிய வருமானம் கிடைப்பதில்லை என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு...
அரிசியை கொள்வனவு செய்யும் போது அதன் தரம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொது மக்களிடம் கோரியுள்ளது. மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 14,000 கிலோ கிராம் அரிசி, அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு - 11 மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக,...
இலங்கையின் நாணய பெறுமதியானது பாரிய சரிவை நோக்கி நகரும் நிலையிலேயே வருடம் ஆரம்பமாகியுள்ளது. இது எதிர்வரும் காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை பாரிய சவாலுக்குட்படுத்தும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் மட்டும் நாட்டின் பண பெறுமதியானது சுமார் 3.9 விகிதத்தால் பெறுமதி இழந்துள்ளது. இது ஒரு அமெரிக்க டொலருக்கான இலங்கை...
Loading posts...
All posts loaded
No more posts