வலிதெற்கின் எல்லையினுள் உள்ள சந்தைகளில் வெளி வியாபாரிகளுக்கு தடை

சுன்னாகம் மற்றும் மருதனார் மடம் உள்ளிட்ட வலிதெற்கின் எல்லையினுள் உள்ள சந்தைகளில் வெளி வியாபாரிகளுக்கு இடம் வழங்குவதனையும் இவ் எல்லையினுள் நடைபாதை வியாபார நடவடிக்கையினையும் தடை செய்யவேண்டும் என்ற தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனி உறுப்பினர்களினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நீண்ட வாதபிரதிவாதங்களின் பின்னர் அனைவரின் ஒத்துழைப்புடன் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் கன்னியமர்வு கடந்த...

நுண்கடன் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க விசேட திட்டம் – ஆறு மாத்திற்கு கடனை செலுத்த வேணடாம்!!

நுண் கடன்களிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் விசேட செயற்திட்டம் ஒரு மாத்திற்குள் நடைமுறைக்கு வரும் எனவும், இதேவேளை வரும் ஆறு மாத்திற்குள் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பெற்ற கடனை மீளச் செலுத்ததேவையில்லை எனவும், இதனை அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமரத்துங்க தெரிவித்துள்ளார். நேற்று (03) கிளிநொச்சியில் கரைச்சி தெற்கு...
Ad Widget

சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்!

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்க 58...

வியாபாரிகளுக்கான காலாண்டு வரி அறவிட நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில், வருடம் ஒன்றுக்கு, 12 மில்லியன் ரூபாய் வரையில் வியாபாரத்தை மேற்கொள்ளும் நபர்களின் காலாண்டு வரி அறவிடுதல் தொடர்பான ஆரம்பக் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பிரதிப் பிரதம செயலாளரின் நிதிப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில், அப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வரி என்பது மக்களின் தேவைகளை முழுமை செய்யும்...

இன்று முதல் புகையிலை சார் உற்பத்தி பொருட்களின் விற்பனைக்கு தடை!

வவுனியா - சிங்கள பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனை முற்றாக நிறுத்தப்படவுள்ளது.குறித்த பிரதேச செயலக பிரிவில் உள்ள விகாராதிபதிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் காவல்துறை பொறுப்பதிகாரிகள் மற்றும் அனைத்து விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி இதனை ஒத்திகை பார்க்கும்...

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்கவும்!!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனியார் துறைகளில் பணியாற்றும் வாக்காளர்களுக்கு விஷேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அல்லது தனிப்பட்ட விடுமுறையில் இழப்பின்றி இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது...

யாழில் தனியார் ஊழியர்கள் சங்கம் உருவாக்கம்!! : அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் அழைப்பு!!

யாழ்ப்பாண மாவட்ட தனியார் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து தனியார் ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்க உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். ஆரம்ப நிகழ்வு வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நீதிமன்றத்துக்கு அண்மையிலுள்ள ஒமேகா இன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. “தனியார் துறை ஊழியர்களாகிய நாம் யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதார...

சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி

இலங்கையில் சீமெந்து விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டை விடவும், 2017ம் ஆண்டில் சீமெந்து விற்பனை 29 தசம் இரண்டு சதவீதமாக குறைவடைந்துள்ளது. எனினும் சீமெந்து விற்பனை வீழ்ச்சியால், கட்டுமானத்துறையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.

புதிய வாகனங்களின் விற்பனை பாரிய வீழ்ச்சி!

2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டில் 4 இலட்சத்து 93 ஆயிரத்து 320 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கடந்த வருடத்தில் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 620 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....

வரிகளை ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான வாய்ப்பு

உள்ளுராட்சி மன்றங்களுக்கான வரிகளை ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இ-லோக்கல் கவர்மென்ட் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் உரிய வலையமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் அறிவித்துள்ளார். ஊழல் மோசடிகளை குறைப்பதற்கான வாய்ப்பு இதன்மூலம் கிடைப்பதோடு வினைத்திறனான சேவையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இதன்மூலம கிடைக்கும்.

சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு...

பிரமிட்முறை வர்த்தகத்தில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு இடைக்காலத்தடை!

தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமையை ஒத்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று இடைக்கால தடைவிதித்துள்ளது. குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொண்ட போதே நீதிபதி இடைக்கால தடையுத்தரவினைப் பிறப்பித்தார். மேலும் குறித்த நிறுவனத்தின் வர்த்தக...

அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் நிதி அமைச்சின் அறிவித்தல்!

ஆறு அத்தியாவசிய பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரி நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே நிதியமைச்சர் இதனை குறிப்பிட்டார். அந்தவகையில், இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் கிலோ கிராம் ஒன்றிற்கு விதிக்கப்பட்டுள்ள சிறப்பு...

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகள் குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகளை சத்தோச நிறுவனம் குறைத்துள்ளது. இதற்கமைய இந்த புதிய விலைக்கு கடந்த 2ம் திகதி முதல் சத்தோச நிறுவன விற்பனை கிளைகளில் பின்வரும் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும்: சம்பா அரிசி ஒரு கிலோ ரூபா 78.00 நாட்டரிசி ஒரு கிலோ ரூபா 74.00 வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ ரூபா 65.00 சிவப்பு...

பெட்ரோல், டீசலின் விலையில் அதிரடி மாற்றம்!

கனியவள கூட்டுத்தாபனம் எதிர்வரும் தினத்தில் எரிபொருளின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தற்போதைய நிலையில் , கனியவள கூட்டுத்தாபனத்தின் வளர்ச்சியை கருத்திற் கொண்டு எதிர்வரும் தேர்தல் மற்றும் பாதீட்டை இலக்காக வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 26ம் திகதி கனியவள கூட்டுத்தாபனத்தால் நடாத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது , கனியவள கூட்டுத்தாபனத்தின் ஓகஸ்ட் மாத இலாபம் 7 ஆயிரத்து 729 மில்லியன்...

முச்சக்கர வண்டிகளுக்குப் பதிலாக புதிய நான்கு சக்கர வாகனம்

முச்சக்கர வண்டிகளுக்குப் பதிலாக புதிய நான்கு சக்கர வாகனமொன்றை இந்நாட்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஏ.எம்.கே. ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு குறைந்த முச்சக்கரவண்டியில் மூலம் ஏற்படும் விபத்துக்களால் வருடாந்த பல உயிர்கள் இல்லாமல் போவதுடன் பலர் அங்கவீனர்களாக ஆகுவதைத் தடுக்கும் நோக்கில் அதற்கு மாற்றீடாக இந்த நான்கு சக்கர வாகனத்தை...

அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை குறைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு ௦5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம்முடிவு செய்துள்ளதாகவும், இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டு ஒருதொகுதி அரிசி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்புத் தொடர்பில் அரசாங்கம்...

“சதொச “வில், அரிசி தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில்!

சதொச நிறுவனம் தற்சமயம் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதனால் இதனால் அதிகளவினலான வாடிக்கையாளர்கள் சதொச நிலையங்களுக்கு செல்வதாக சதோசவின் தலைவர் ரி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இதேவேனை சிறு வர்த்தகர்களுக்கு அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொவித்த அவர் 25 மாவட்டங்களிலுள்ள 28 மத்திய நிலையங்களில் சிறு வர்த்தகர்களுக்கு...

இன்று முதல் 65 ரூபாவுக்கு தேங்காய் விநியோகம்: அரசாங்கம் நடவடிக்கை

அரச தோட்டங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தேங்காய்களை இன்று முதல் (02) 65 ரூபா சில்லறை விலைக்கு சந்தைப்படுத்த தெங்கு உற்பத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. சிறியளவிலான தெங்கு உற்பத்தியாளர்களினது தேங்காய்களும் இவ்வாறு குறைந்த விலையில் சந்தைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடமாடும் தேங்காய் விற்பனை, நகர்ப் பகுதிகளிலும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள...

சகல கடைகளிலும் இனி பியர், வைன் வாங்கலாம்!!

உயர் ரக மதுபான வகைகளாக கருதப்படும் வைன் மற்றும் பியர் என்பவற்றை விநியோகத்துக்கான அனுமதிப் பத்திரத்தின் சட்ட திட்டங்களை இலகுபடுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்பிலான தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மாத்தறை மாவட்ட பாராளுமன்ற...
Loading posts...

All posts loaded

No more posts