- Monday
- February 24th, 2025

எரிபொருள்களின் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. பெற்றோல் (92 ஒகரைன்) 8 ரூபாவாலும் பெற்றோல் (95 ஒக்ரைன்) 7 ரூபாவாலும் டிசல் 9 ரூபாவாலும் சுப்பர் டிசல் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெற்றோல் (92 ஒக்ரைன்) 145 பெற்றோல் (95 ஒகரைன்) 155 ரூபாவாகவும் டிசல் 118 ரூபாவாகவும் சுப்பர் டிசல்...

பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு தொழிற்றுறையில் ஈடுபடுவதற்காக வட்டியில்லா கடனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு கடனுதவி வழங்கப்படும் என திறைசேரி பிரதி செயலாளர் ஏ.ஆர்.தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆற்றல் மிக்க தொழில்துறையினர் நாட்டில் இருக்கின்ற போதிலும் தற்பொழுது நிலவும் வட்டி வீதங்கள் காரணமாக கடனை பெற்று வர்த்தக...

மோதல் நடைபெற்ற பிரதேசங்களில் அதிகளவு தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியது அவசியம் என உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் உலகவங்கி நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள இடைக்கால அபிவிருத்தி அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்த வருடத்தில் இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும் இலங்கை அரச...

சமையல் எரிவாயு விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு விலை 138 இனால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1,676 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை...

அரச வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து வங்கிகளின் ஊழியர்களும் வரும் ஜூலை முதல் இரண்டு வாரங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என வங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க அறிவித்துள்ளார். அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, அரச ஈட்டு...

இலங்கை எரிபொருள் சந்தையில் புதிய எரிபொருள் வகையான யூரோ 4 (Euro 4) எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுவதாக பெற்றோலிய வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த எரிபொருளானது சுப்பர் டிசல் மற்றும் 95 ஒக்ரைன் பெற்றோலுக்கு பதிலாகவே யூரோ 4 எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி அடுத்த மாதம் முதல் இந்த எரிபொருள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என...

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 160.0069 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை ரூபாவின்...

தனியார் பேருந்து கட்டணத்தை 6.5 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாளை முதல் இக்கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளது. இதன் பிரகாரம் தற்போது நடைமுறையிலுள்ள ஆகக்குறைந்த பேருந்து கட்டணமான 10 ரூபாவில் எவ்வித மாற்றமும் ஏற்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பேருந்து கட்டண அதிகரிப்பு...

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய, எரிபொருளின் விலையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் நிகழும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அதன்படி எரிபொருள் விலை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடவோ அல்லது குறையவோ முடியும் என்றும் தெரிவித்தார்....

கனியவள கூட்டுத்தாபன எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த கூட்டுத்தாபனத்தில் நிலவும் நிதிநெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய... 92 பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபா, 95 பெற்றோல் ஒரு...

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பருப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரையும் பிரிக்கப்பட்ட ஒரு கிலோ கிராம் பருப்பிற்கு 3 ரூபாவாக காணப்பட்டது. அது 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பிரிக்கப்படாத ஒரு கிலோ கிராம் பருப்பிற்கான வரி 7 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த புதிய வரி நேற்று முதல் ஆறு மாதங்களுக்கு அமுலில் இருக்குமென, நிதி...

யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இவ்கண்காட்சி யாழ்.பல்கலைகழக பௌதீக கல்வி அலகு இயக்குனர் K.கணேசநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இக் கண்காட்சியில் Ultra light Pickup, Solar Powered baby car, Pedal Power car போன்ற...

பால்மாவிற்கான புதிய விலை, மே மாதம் 5ஆம் திகதி முதல் உற்பத்திசெய்யப்படும் பால்மாவிற்கே பொருந்தும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. ஆனால், கையிருப்பிலுள்ள பால்மாவை புதிய விலைக்கு விற்பனை செய்வோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்...

பெற்றோலின் விலையை 20 ரூபாவாலும் டிசலின் விலையை 12 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு ஏதுவாக விலை சூத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விலைச்சூத்திரம் கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட போதும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. வரும் செவ்வாய்கிழமை ஒப்புதலளிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோலின் விலையை 15 ரூபாவாலும் டிசலின் விலை 10 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதலளிக்கும் என நிதி...

இறக்குமதியாகும் பால்மாவின் 400 கிராம் பக்கற்றுன் விலையை 20 ரூபாவால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு அனுமதியளித்துள்ளது. அத்துடன் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கற்றின் விலையை 50 ரூபாவால் அதிகரிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வணிக அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்தார். இதேவேளை, பால்மா வகைகளின் விலையை...

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றுக்கான விஷேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கான வரி 40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளதால் அதன் இறக்குமதியை தற்போது இடைநிறுத்தியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் பால்மாவின் விலை 3,250 இருந்து 3,350 அமெரிக்க டொலர்களாகும், ஆனால் அடுத்த ஜூன் மாதம் வரை 3,400 இருந்து 3,500 அமெரிக்க டொலர்களாக உயர்வடைய கூடும், என்பதனால் இறக்குமதி தடைபட்டுள்ளதாக அவர்கள்...

சமையல் எரிவாயுவின் விலை நேற்று (27) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அதன் விநியோகஸ்தர்களாக லிப்ரோ மற்றும் லாவ்ப் காஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. சமையல் எரிவாயு 12.5 கிலோக் கிராம் எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை 1431...

இலங்கை மத்திய வங்கியால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155.26 ரூபாவாகவும் அதன் விற்பனைப் பெறுமதி 159.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இலங்கை ரூபாவின் இந்த பெறுமதி வீழ்ச்சி வரலாற்றில் முதல் தடவையாக பதிவாகியுள்ளதுடன்,...

நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு 2.5kg, 12.5kg மற்றும் 12.5kg மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கப்பெறுவதாகவும் இதனாலேயே தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி முதல் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும் சமையல் எரிவாயு...

All posts loaded
No more posts