- Monday
- February 24th, 2025

எரிபொருள் விலைச் சூத்திரம் புதிய அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார். இன்று (30) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்துக் கூறிய அவர், மக்கள் இனிமேல் 10ம் திகதி வரும் போது அச்சமடைய தேவையில்லை. 10ம் திகதி பேய் தினம். இனிமேல்...

உலக சந்தையில் தற்போது எரிபொருள் விலை வேகமாக குறைந்து வருகிறது. 2018 ஒக்டோபர் 05 முதல் இன்று வரையான கடந்த 21 நாட்களில் ப்ரெண்ட் Brent மசகு எண்ணெய் பெரல் ஒன்று 84.47 டொலரில் இருந்து 76.77 டொலர் வரையிலும், OPEC Basket மசகு எண்ணெய் பெரல் ஒன்று 84.09 டொலரில் இருந்து 75.04 டொலர்...

இரண்டு அரச வங்கிகள் மற்றும் முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபைகள் கலைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவை கலைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய இலங்கை வங்கி, மக்கள் வங்கி, மற்றும் இலங்கை முதலீட்டு சபை என்பவற்றின் பணிப்பாளர் சபைகளைக் கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தரவிட்டிருந்ததாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள்...

தீபாவளி பருவ காலத்தில் யாழ். சாவகச்சேரி பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபார நோக்குடன் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகளுக்கு நட்டம் ஏற்படுவதாக சாவகச்சேரி வணிகர் மன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாதென நகரசபையிடம் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்தது. குறித்த கோரிக்கை...

எரிபொருள் விலை நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், 149 ரூபாவாக இருந்த 1 லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 1 லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 155 ரூபாவாக அமைந்துள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை...

சமையல் எரிவாயுவின் விலைகள் மற்றும் சீனியின் விலைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்வடையவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில் ஒரு கிலோ சீனியின் விலை 20 ரூபாயாலும், 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் விலையை 190 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வாழ்க்கைச் செலவு குழுவினால் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, அரசாங்கம்...

பாண் மற்றும் பனிஸ் உள்ளிட்ட சிற்றூண்டிகளின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்கம் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. வெதுப்பக பொருட்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் ஃபாம் ஒயில் ஆகியவற்றிற்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய வரி காரணமாகவே, அவற்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தவகையில் ஒக்டேன் 95 ரக மற்றும் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு...

50 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விலை மாற்றம் இன்று 3ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி நாளைக் காலை தொடக்கம் ஒரு இறாத்தல் பாணின் விலை 65 ரூபா என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. “கோதுமை...

வரி திருத்தம் மற்றும் ரூபாவின் விலை வீழ்ச்சி என்பவற்றை கருத்திற் கொண்டு கோதுமை மாவின் விலையை கோதுமை மாவின் விலையை ப்ரீமா நிறுவனம் 5 ரூபாவால் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோதுமை மாவின் விலையை வழமைக்கு கொண்டு வராவிட்டால் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான...

கோதுமை மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிகரிக்கப்பட்டுள்ளதாக பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் ஆகக் கூடிய சில்லறை விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதால் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருள்களின் விலையும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார். பத்திரிகைகளில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும் அரசாங்கம் இவ்வாறான தீரமானத்தை மேற்கொள்ளவில்லை என்றும் செயலாளர் தெரிவித்தார். எரிவாயு நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக...

சமையல் எரிவாயுவின் விலை இன்று (24) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 158 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. சமையல் எரிவாயு 12.5 கிலோக் கிராம் எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 1696 ரூபாவாக மாற்றப்படுகிறது. இந்த விலை அதிகரிப்புக்கு பாவனையாளர்கள்...

“சிகரெட் உள்ளிட்ட புகைப்பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் விதமாக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக நாட்டின் 107 நகரங்களில் (கிராம மட்ட நகரங்கள்) அவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அதில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகமாக 22 நகரங்களில் புகையிலைப் பொருள்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது” என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டுக்கு முற்றிலும்...

பனை அபிவிருத்திச் சபையின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நவீன கற்பகம் சிறப்பு அங்காடி சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் வைத்தியகலாநிதி சி.சிவசங்கர் தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெற்றது பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் பாக்கியநாதன் தம்பதிகள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தனர். 1980 ஆம்...

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக நேற்று தொடக்கம் இரண்டு வகை எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் நிதி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்தார். அதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலை 2 ரூபாவாலும் , சூப்பர் டீசல் லீற்றரின் விலை...

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஈரானின் மீதான...

நிறமூட்டப்பட்ட தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான பருப்பு வகைகள் இரத்தினபுரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டது தற்போது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பருப்பை கழுவும் போது நீர் சிவப்பு நிறமாக மாறுவதுடன் வேகவைக்க வழமையைவிட கூடுதலான நேரம் எடுக்கும். இவ்வாறான பருப்பு வகை விற்பனை...

பாண் தவிர்ந்த வெதுப்பக உற்பத்தி உணவுப் பண்டங்கள் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விலை மாற்றம் வரும் இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது. “எரிபொருள்களின் விலை உயர்வையடுத்து வெதுப்பக உற்பத்தி உணவுப் பண்டங்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் கூடி ஆராய்ந்தது....

எரிபொருள்களின் விலையைக் குறைப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்தது. இதன்படி பெற்றோல் (92 ஒக்ரைன்) 145 ரூபாவாகவும் பெற்றோல் (95 ஒகரைன்) 155 ரூபாவாகவும் டிசல் 118 ரூபாவாகவும் சுப்பர் டிசல் 129 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டன. எனினும் எரிபொருள்களின்...

All posts loaded
No more posts