வங்கிகளின் திடீர் செயற்பாடுகள்! குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்!!

இலங்கையில் அனைத்து வங்கிகளில் குறைந்தபட்ச பணம் இல்லாத வாடிக்கையாளர்களின் கணக்குகளில் சேவைக் கட்டணம் அறவிடப்படவுள்ளது. அரசாங்க வங்கி உட்பட தனியார் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்பை வைப்பதற்கு தவறியமையினால் சேவை கட்டணம் அறவிடுவதற்கு நடவடிக்கையை முன்னெடுப்பதாக தெரிவிக்ப்படுகிறது. அவ்வாறு சேவை கட்டணம் அறவிடுவதற்கான அதிகாரம் வங்கிகளிடம் உள்ளதாக என இலங்கை மத்திய...

பாணின் விலை ஐந்து ரூபாவினால் குறைப்பு!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் பாணின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (25 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன் இதுதொடர்பாக தெரிவிக்கையில் பேக்கரி உரிமையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கிய சலுகைகளின் நன்மைகளை மக்களுக்கு வழங்கும் வகையில்...
Ad Widget

எரிபொருள் விலையும் நீர் கட்டணமும் அதிகரிக்கப்படலாம் என எச்சரிக்கை!

எரிபொருள் விலையும் நீர் கட்டணமும் அதிகரிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தேசிய ஊழியர் சங்கத்தின் உப அமைப்பாளர் ஆனந்த பாலித்த இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை துரிதமாக குறைவடைந்துள்ளது. விலைச்சூத்திரம் நடைமுறையில் இருந்திருந்தால்,...

முகக்கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு

முகக்கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. ,தற்கமைய, பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய முகக்கவசமொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 15 ரூபாவாகும். பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய சத்திரசிகிச்சை முகக்கவசமொன்றின் விலையும் 15 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. N95 ரக முகக்கவசமொன்றின் விலை 150 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விலைகளுக்கு...

கடந்த அர­சாங்­கத்­தின் என்­ரர்­பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டம் இரத்து!

கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா செயற்றிட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் வசத இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கடன்களைப் பெற்றுத்தருவதாக குறிப்­பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அரசியல் தேவைகளை கருத்திற் கொண்டு கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கடன் திட்டம் முழுமையாக...

எரிபொருளின் விலையினை அதிகரிக்க வேண்டிய சூழல் காணப்படுவதாக அரசாங்கம் தெரிவிப்பு!

இலங்கையில் எரிபொருளின் விலையினை அதிகரிக்க வேண்டிய சூழல் காணப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்க வேண்டிய சூழல் காணப்படுவதாக...

யாழ்.குடாநாட்டில் பெற்றோல் தட்டுப்பாடா? எாிபொருள் நிரப்பு நிலையங்களில் குவியும் மக்கள்!!

யாழ்.குடாநாட்டில் இன்று அதிகாலை தொடக்கம் எாிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் பெருமளவில் குவிந்து கொண்டு எாிபொருள் நிரப்புவதை அவதானிக்ககூடியதாக உள்ளது. எாிபொருளுக்கு தட்டுப்பாடு வந்துவிட்டதாகவும், தட்டுப்பாடு வரலாம் எனவும் பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அமொிக்காவுக்கும் இடையில் பதற்றமான சூழுல் உருவாகியிருக்கும் நிலையில் அதனை காரணம் காட்டி இந்த கதைகள் கட்டப்பட்டுவருகின்றது. எனினும்...

இலங்கையில் மூடப்படும் 2 இந்திய வங்கிகள்!!

இரண்டு இந்திய வங்கிகள் இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளவுள்ளன. அக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியனவே இலங்கையில் உள்ள தமது கிளைகளை மூடவுள்ளன. இந்த இரண்டு வங்கிகளும் தமது நிதி நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதற்கு, இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளது. தாய் வங்கிகளிடம் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டது....

இன்று முதல் இரத்தாகவுள்ள வரிகள்!!

வருமானம் பெறும் போது செலுத்த வேண்டியிருந்த வரி மற்றும் வட்டி வருமானத்திற்கான வரி ஆகியன இன்று (01) முதல் இரத்து செய்யப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. முன்னர் மாதம் ஒன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் மேல் வருமானம் பெறும் நபருக்கு வரி செலுத்த வேண்டியேற்றபட்டதுடன் அந்த வரியை இனிமேல் செலுத்த வேண்டியதில்லை என அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது....

பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு!

கோதுமை மாவிற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டமையால் பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இது குறித்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவிக்கையில், இடைக்கால அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய வரி திருத்தங்கள் காரணமாக ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாயால் குறைத்து கொள்வதற்கு எமது சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்....

கோதுமை மாவின் இறக்குமதி வரி 8 ரூபாவாகக் குறைப்பு

கோதுமை மா ஒரு கிலோ கிராமின் இறக்குமதி வரி 8 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வரிக் குறைப்பு நேற்றுமுன்தினம் (டிசெ.14) சனிக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது. கோதுமை மாவின் இறக்குமதி வரி 36 ரூபாவாக காணப்பட்டது. அந்த வரி முழுமையாக நீக்கப்பட்டு 8 ரூபா புதிய வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க நடவடிக்கை!!

புதிய அரசாங்கம் உத்தரவின் பேரில் வற் வரி குறைக்கப்பட்டது. இந்நிலையில் தேச நிர்மாண வரியை நீக்கியுள்ளதன் சலுகையை பாவனையாளர்களுக்கு வழங்கும் வகையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைத்துள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பாண் தவிர்ந்த பணிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை 5 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அகில இலங்கை பேக்கரி...

யாழில் நடைபாதை வியாபாரத்திற்கு தடை விதிக்க தீர்மானம் – சுமந்திரன்

எதிர்வரும் காலத்தில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பண்டிகைக் காலத்தின்போது நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பான வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று...

தொலைத்தொடர்பு வரியை 25 வீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானம்!

உடன் அமுலுக்கு வரும் வகையில் வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். வீட்டுப் பொருட்களுக்காக அறவிடப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான தேச நிர்மாண வரி, பொருளாதார சேவைகளுக்கான கட்டண வரி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அறவிடப்படும் வரி ஆகியனவும் இரத்து செய்யப்பட்டுள்ளன. பங்குச்சந்தையில் அறவிடப்படும்...

பாணின் விலை அதிகரிப்பு

பாணின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. அதற்கமைய 450 கிராம் பாணின் விலை நள்ளிரவு முதல் 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்புடன் பாண் விலையும் கூடியது

கோதுமை மாவின் விலையை இன்று முதல் பிறிமா நிறுவனம் அதிகரித்துள்ளது. இதன்படி கோதுமை மாவின் ஒரு கிலோவின் விலை 5.50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த அதிகரிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபை அறிவிப்பு விடுத்துள்ளது. இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய பாண் விலையை 2 ரூபாயினால் அதிகரிக்கவுள்ளதாக...

எண்டர்பிரைஸ் சிறிலங்கா யாழ். கண்காட்சி ஆரம்பப் பணிகளுக்கு ரூபா 60 மில்லியன் செலவு!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள எண்டர்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சிக்கான ஆரம்பப் பணிகளுக்கு சுமார் 60 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எண்டர்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சியின் மூன்றாவது தேசிய நிகழ்வு யாழ்ப்பாணத்தில் செப்ரெம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெறும்...

யாழில் அல்லை விவசாயி இயற்கை விவசாய விற்பனை நிலையம் திறப்பு!!

அல்லைப்பிட்டி விவசாயி கிரிசனின் இயற்கை விவசாய விற்பனை நிலையம் யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி இலக்கம் – 384 என்ற முகவரியில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் 12.30 சுபவேளையில் இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாண அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் நாடா வெட்டி விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். இரசாயனமற்ற மரக்கறிகள், கீரை வகைகள்...

அரிசியில் கலப்படம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் நிறமூட்டப்பட்ட சிவப்பு பச்சை அரிசி தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளமையினால் அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாத்தறை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இந்த அரிசி தொகை கைப்பற்றப்பட்டன. இதன் மாதிரிகள் ஆய்வுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய...

என்ரபிறைஸ் சிறிலங்கா நடமாடும் சேவை செப்ரெம்பர் மாதம் யாழில்!!

நிதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் என்ரபிறைஸ் சிறிலங்கா நடமாடும் சேவை செப்ரெம்பர் மாதம் யாழில் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நிதி அமைச்சினால் இரண்டாவது என்ரபிறைஸ் சிறிலங்கா நடமாடும் சேவை நேற்று முன்தினம் அநுராதபுரத்தில் இடம்பெற்றது . இதன்போதே யாழில் இடம்பெறுவதற்கான அறிவித்தலும் விடப்பட்டதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். இதேநேரம் குறித்த நடமாடும் சேவை இடம்பெறும்...
Loading posts...

All posts loaded

No more posts